என்னைப்பற்றி ஒருசில வார்த்தைகள் ….

பொதுசுகாதார மற்றும் தனி நபர்சுகாதார  விடயங்கள் (public and personal hygiene) போன்றவற்றை அறிந்து வைத்திருப்பது போல சட்ட மருத்துவ விடயங்கள் பலவற்றையும்  சாதாரண மக்கள் பகுதியளவில்லேனும் அறிந்து இருக்க வேண்டும். இதன் மூலம் அவர்கள் அனாவசியமான உயிரிழப்புகள் மற்றும் பாரதூரமான காயங்கள் என்பவற்றில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ளலாம். மேலும் பாலியல் துஸ்பிரயோகங்கள், பால்நிலைக்கு எதிரான வன்முறைகள், மனித சித்திரவதைகள். தொழிற்ச்சாலை காயங்கள் (Occupational injuries)… போன்றவற்றில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் அத்தோடு அவற்றிக்கு எதிராகவும் போராடவும் முடியும்.

Dr. கனகசபாபதி வாசுதேவா  ஆகிய நான்  MBBS , Post Graduate Diploma in Legal Medicine (DLM ), Post Graduate Diploma in Toxicology மற்றும் MD (Forensic Medicine) ஆகிய கற்கை நெறிகளை கற்றுள்ளேன்.   சட்ட மருத்துவராக மேற்படிப்பு கற்பதற்கும்  கடமை ஆற்றுவதற்கும் பெரும்பாலான வைத்தியர்கள் விரும்பாத நிலையில் என்னை ஊக்குவித்து இந்நிலைக்கு உயர்த்திய எனது பெற்றோர்களான திரு. செல்லத்துரை கனகசபாபதி மற்றும் சிவகுரு சிவசக்தி ஆகியோருக்கு எனது இவ்வலைப்பூவினை காணிக்கை ஆக்குகின்றேன்.