ஈழத் தமிழர்கள் உட்பட 8 பேரைக் கொலை செய்த சீரியல் கொலையாளி Bruce McArthurக்கு ஆயுட்தண்டனை

ஸ்கந்தராசா நவரட்ணம் , கிஷ்ணா கனகரட்ணம் உள்ளிட்ட 8 பேரை தொடர் கொலையாக புரிந்தமையை நீதிமன்றில் Bruce McArthur ஏற்றுக்கொண்டார் அத்துடன் அதற்கு மன்னிப்பும் கோரி இருந்த நிலையில் நேற்று நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியது.

Bruce McArthur என்பவருக்கு ஆயுட் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது அத்துடன் 25 ஆண்டுகளுக்கு பிணை கோரமுடியாத  சிறைத்  தண்டனை உள்ளடக்கப்பட்டுள்ளது. இதன் படி தற் பொழுது  67 வயதான Bruce McArthur   91 வயது வரை நன்னடத்தை கோரி விண்ணப்பிக்க முடியாது.

சீரியல் கொலையாளி (Serial Killer) என்பவர்கள் உண்மையில் ஓர் வகையான மனநோயாளிகள். இவர்கள் தங்கள் மனதில் ஏற்படும் கொலை வெறியினை தீர்பதற்காகவே மற்றவர்களை கொலை செய்வார்கள். அதுவும் தம்மோடு எவ்வித விரோதமில்லாதவர்களையும் இவர்கள் விட்டுவைப்பதில்லை. இவ்வாறே கிஷ்ணா கனகரட்ணம் என்ற இலங்கையரும் கனடாவின் டொராண்டோவில் Bruce McArthur என்ற Serial Killer இனால் கொல்லப்பட்டு கண்டம் துண்டமாக வெட்டப்பட்டு பூச்சாடியினுள் வைக்கப்பட்டார்.

இவர் 2010 இல் கனடா வந்தநிலையில் 2015ம் ஆண்டு செப்டம்பர் தொடக்கம் டிசம்பர் காலப்பகுதிக்குள் கொல்லப்பட்டார். இவர் Bruce McArthur இனால் கொல்லப்பட்ட 8 வது நபர்.

சீரியல் கில்லர் என்பவர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களை குறிப்பிட்ட கால இடைவெளியினுள் கொல்வார். ஒரு கொலையினை செய்துவிட்டு குறிப்பிட்ட கால இடைவெயியினுள் அடுத்த கொலையினை மேற்கொள்ள திட்டமிடுவர். இவர்கள் எல்லா கொலைகளினையும் ஓர் குறிப்பிட்ட விதத்தினுள் மேற்கொள்வர் உதாரணமாக தலையினை சிதைத்தல் மூலம் மரணத்தினை ஏற்படுதல் அல்லது குறிப்பிட்ட இயல்புடையோரினை இலக்கு வைத்து கொல்வர் உதாரணமாக பருவமடையாத சிறுமிகள்.

போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் இவர்கள் மேற்கொள்ளும் கொலையின் விதம் மற்றும் கொலையுண்ட நபர்களின் இயல்புகள் (offender profiling) ஒப்பிடுவதன் மூலம் சாத்தியமான சீரியல் கொலையாளியினை கண்டறிய முற்படுவர்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.