
- பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பான வெளியீட்டு விடயம்
பாலியல் குற்றங்களினால் பாதிக்கப்பட்டவரின் சம்மதமின்றி அவரை அடையாளம் காணக்கூடியவராக பெயரை அல்லது ஏதேனும் விபரங்களை வெளியிடுதல் 20வருடங்களுக்கு நீடிக்கப்படக்கூடிய சிறைத்தண்டனையால் அல்லது தண்டத்தால் அல்லது இரண்டாலும் தண்டிக்கப்படக்கூடிய குற்றமாகும். பிரிவு- 365இ, குற்றவியல் கோவை.
- ஆட்கவர்தல்/ ஆட்கடத்தல்
ஒரு பெண் தான் சட்டவிரோதமான பாலியல் உடலுறவிற்கு வற்புறுத்த அல்லது கட்டாயப்படுத்தப்படக்கூடும் என்ற அறிவு அல்லது ஆட்கடத்தல் 10வருடங்களுக்கு நீடிக்ககூடிய சிறைத்தண்டனையாலும் தண்டத்தாலும் தண்டிக்கப்படக்கூடிய குற்றமாகும். பிரிவு 367, குற்றவியல் கோவை.
- குடும்ப வன்முறை
எந்தக் கணவனும் தன் மனைவியை தாக்கவோ அவளுக்கு காயம் விளைவிக்கவோ அல்லத தொந்தரவு செய்யவோ உரிமையற்றவர். காயம் விளைவித்தலானது குற்றவியல் கோவையின் 314,315,316,317 பிரிவுகளின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய குற்றவியல் குற்றமாகும். ஓவ்வொரு மானைவியும் தன்னை தாக்கிய அல்லது காயம் விளைவித்த தன் கணவனுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கு சட்ட உரிமை உடையவர். எந்த மனைவியும் தனது கணவனால் விளைவிக்கப்படும் தாக்குதல்களையும் தொந்தரவுகளையும் அமைதியாக எதிர்ப்பின்றி அல்லது முறைப்பாடு செய்யாது தாங்கிக் கொள்ள கடமைப்பட்டவர் அல்ல.
- பராயமடையாதவரின் பாலியல் வல்லுறவு
எவராவது ஆள் 16 வயதிற்குட்பட்ட பெண்ணுடன் அவளின் சம்மதமுடனோ, அன்றியோ பாலியல் உடலுறவில் ஈடுபட்டால், அவர் பாலியல் வல்லுறவுக்குற்றம் புரிந்தவராவார்.
தவறாளர் 20 வருடங்களுக்கு நீடிக்கப்படக்கூடியதும் ஆகக் குறைந்தது 10 வருட மறியற் தண்டனையாலும் தண்டத்தாலும் தண்டிக்கப்பட பொறுப்பாவார். அவர் பாதிக்கப்பட்டவருக்கு நட்டஈடு செலுத்த பொறுப்பாவார்.
பிரிவு-364, குற்றவியல் கோவை.
- பெண்களின் பாலியல் சுரண்டல்
எவரேனும் தெரிந்து கொண்டு 18 வயதிற்குட்பட்ட பெண்ணை பாலியல் துஸ்பிரயோகம் செய்யும் நோக்கத்துக்காக அல்லது ஏதாவது பாலியல் நடவடிக்கையில் பங்குபற்ற ஏதாவது இடத்தில் வைத்திருக்க அனுமதிப்பின் அவர் சிறுவர் பாலியல் சுரண்டல் குற்றம் புரிகின்றார்.
இக்குற்றம் 20 வருடங்கள் நீடிக்கப்படக்கூடியதும் ஆகக் குறைந்தது 5 வருட கட்டாய மறியற் தண்டனையாலும் தண்டத்தாலும் தண்டிக்கப்படக்கூடியதாகும்
பிரிவு-360ஆ, குற்றவியல் கோவை.
- விபச்சாரத்திற்கு கூட்டிக்கொடுத்தல்
எந்த வயது பெண்ணையும் அவளின் சம்மதமுடனோ அன்றியோ விபச்சாரியாக மாற்றுவதற்கு அல்லது விபச்சாரவிடுதிக்கு அடிக்கடி செல்ல,கூட்டிக் கொடுத்தல் 2 வருடங்களுக்கு குறையாததும் 10 வருடங்களுக்கு மேற்படாததுமான மறியற் தண்டனையால் தண்டிக்கப்படக்கூடிய குற்றமாகும்
பிரிவு-350அ, குற்றவியல் கோவை
- முறையற்ற வியாபாரம்
பணத்திற்காக அல்லது வேறு ஏதேனும் பிரதிபலனுக்காக ஒரு ஆளை விற்கின்ற அல்லது வாங்குகின்ற அல்லது பண்ட மாற்றம் செய்கின்ற நடவடிக்கையில் ஈடுபடும் எவரேனும் ஆள் முறையற்ற வியாபாரக் குற்றம் புரிந்தவர் ஆவார்.
முறையற்ற வியாபாரம் 2 வருடங்களுக்கு குறையாததும் 20 வருடங்களுக்கு மேற்படாததுமான சிறைத்தண்டனையால் தண்டிக்கப்படக்கூடிய குற்றம் ஆகும் பிரிவு-360இ குற்றவியல் கோவை.
- கோஷ்டி பாலியல் வல்லுறவு
ஒரு பெண் ஆட்கள் கோஷ்டியினால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்படும்போது அக் கோஷ்டியிலுள்ள ஒவ்வோவரும் 20 வருடங்களுக்கு நீடிக்கப்படக்கூடியதும் ஆகக் குறைந்தது 10 வருட கட்டாய மறியற் தண்டனையாலும் தண்டத்தனாலும் தண்டிக்கப்பட பொறுப்பாவார். குற்றத் தீர்ப்பாளிக்கப்பட்டவர் பாதிக்கப்பட்டவருக்கு நட்டஈடு செலுத்தவும் பொறுப்பாவார். பிரிவு-364 குற்றவியல் கோவை.
- பாரதூரமான பாலியல் துஷ்பிரNhயகம்.
ஒரு பெண்ணின் வாய்க்குள் அல்லது குதத்தினுள் அல்லது உடலின் வேறு எந்தப்பாகத்தினுள் எவரெனும் ஆள் தனது ஆண் உறுப்புக்களை அல்லது வேறு ஏதேனும் உடற்பாகத்தை பயன்படுத்தி பாலியல் திருப்தியை அடையச்செய்யும் செயலில் ஈடுபட்டால் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகக் குற்றம் புரிந்தவராகின்றார். பிரிவு-365,ஆ குற்றவியல் கோவை.
- தகாத புணர்ச்சி
தகாத புணர்ச்சி என்பது நேரடி முற்சந்ததியினர் அல்லது பிற்சந்ததியினர் அல்லது இரத்தம் அல்லது திருமணம் அல்லது மகவேற்பு மூலமான நெருங்கிய உறவினர்கள் (அதாவது தந்தையும மகளும், சகோதரனும் சகோதரியும், பேரனும் பாட்டியும்) பாலியல் உறவில் ஈடுபடுவதாகும். தகாத புணர்ச்சி ஆகக் குறைந்தது 7 வருட மறியற் தண்டனையால் தண்டிக்கப்படக்கூடியது. பிரிவு-364,(3) குற்றவியல் கோவை
- விவாகரத்து
பரஸ்பர சம்மதம் விவாகரத்துக்கான அடிப்படை அல்ல, விவாகரத்துக்கான சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே பெறப்பட முடியும். அவையாவன திருமணத்தின் பின்பான சோரம்,வேண்;டுமென்று கைவிடல் திருமணத்தின் போதான மாற்றமுடியாத மலட்டுத்தன்மை.
- வேலையிடத்தில் பாலியல் தொல்லை
வேலையிடத்தில் அதிகாரத்திலுள்ள எவரேனும் ஆள், அங்கு வேலை செய்யும் பெண்ணின் சம்மதமின்றி அல்லது விருப்புக்கு மாறாக பாலியல் தொனியிலான சொற்களைப் பேசுதல் அல்லது ஏதாவது செய்கைகளைப்புரிதல் மூலமாக பாலியல் தொந்தரவு செய்யின் அவர் பாலியல் தொல்லைக்குற்றம் புரிந்தவராவார்.
இக்குற்றம் 5 வருடங்களுக்கு மேற்படாத மறியல் தண்டனையால்தண்டிக்கப்படக்கூடிய குற்றம். பிரிவு-345 குற்றவியல் கோவை.
- பாலியல் வல்லுறவு
ஏதாவது ஆள் ஒரு பெண்ணின் சம்மதமின்றி அல்லது வலுக்கட்டாயம்,பயமுறுத்தல் அல்லது அச்சுறுத்தல் மூலமாக அல்லது அவளுக்கு கொலை அல்லது காயம் விளைவிப்பதற்கான அச்சத்தை ஏற்படுத்தி அல்லது அவளை சித்தசுவாதீனமற்ற நிலையிலுள்ளபோது அல்லது குடிபோதையில் உள்ளபோது அல்லது சட்டமுறையற்ற தடுத்துவைப்பிலுள்ள போது சம்மதம் பெற்று பாலியல் உறவு கொண்டால் அவர் பாலியல் குற்றம் புரிந்தவராவார்
பாலியல் வல்லுறவுக் குற்றமானது 20 வருடங்கள் நீடிக்கப்படக்கூடியதும் ஆகக்குறைந்தது 7 வருடங்கள் கட்டாயமான மறியல்தண்டனையால் தண்டிக்கப்படக் கூடிய குற்றம் தவாறாளி தண்டம் செலுத்துவதுடன் பாதிக்கப்பட்டவருக்கு நட்டஈடும் செலுத்த பொறுப்பாவார். பிரிவு- 364குற்றவியல் கோவை.
- பெண்களை சோதனை செய்தல்
பெண்களை சோதனை செய்யும் போது வேறொரு பெண்ணிணால் கண்ணியமான முறையில் சோதனை செய்தல் வேண்டும். பிரிவு- 30 குற்றவியல் கோவை
- இருதாதர மணம்
எதாவது ஒருவரின் முன்னைய திருமணம் வலிதாகவுள்ள போது இரண்டாவது திருமணம் செய்து கொள்வது ஒரு குற்றமாகும்
இருதாரமணக்குற்றம் 7-10 வருடங்கள் மறியல் தண்டனையால் தண்டிக்கப்படக்கூடிய குற்றமாகும் பிரிவு- 362இ, குற்றவியல் கோவை.
- பொது இடங்களிலும் பொது போக்குவரத்துக்களிலும் பாலியல் தொல்லை
எதாவது பெண்களுக்கு சொற்கள் அல்லது செயல்கள் மூலமாக பாலியல் தொல்லை அல்லது தொந்தரவு செய்தால் அவர் பாலியல் தொல்லை குற்றம் புரிந்தவராவார். பெண்ணின் சம்மதமின்றி அல்லது விருப்பக்கு மாறாக உடலைத்தொடுவது அல்லது பாலியல் தொனியிலான வார்த்தைகளை பிரயோகிப்பது பாலியல் தொல்லைக்கு சமமாகும்.
இக்குற்றமானது 5 வருடங்களுக்கு மேற்படாத மறியற் தண்டனையால் தண்டிக்கப்படக்கூடிய குற்றம். பிரிவு- 345, குற்றவியல் கோவை.
- 18 வயதிற்குட்பட்ட ஆட்களின் திருமணம்
ஆண் பெண் இருவரும் திருமணம் செய்யக்கூடிய வயது 18 ஆகும். 18 வயதிற்குட்பட்டவர்களால் அல்லது 18 வயதுக்குட்பட்டவர்களுடன் செய்யப்படும் திருமணம் சட்டப்படி வலிதற்றது. 18 வயதிற்குட்பட்ட ஒருவர் அல்லது இருவரினதும் திருமணம் பெற்றோர் சம்மதம் வழங்குவதால் வலிதுடமை பெறமாட்டாது.
ஒருவர் 16 வயதிற்குட்பட்ட பெண்ணை திருமணம் செய்து அவளுடன் பாலியல் உறவு கொண்டால் அவர் பாலியல் வல்லுறவுக் குற்றத்திற்கு பொறுப்பாவார்.
- பாரபட்சம் காட்டாதிருப்பதற்கான உரிமை
ஆண் பெண் இருவரம் சமமான உரிமைகளுக்கு உரித்துடையவர்கள். பால் காரணமாக பாரபட்சம் காட்டாதிருப்பதற்கான உரிமை எமது அரசியவமைப்பினால் உத்தரவாதம் செய்யப்பட உரிமையாகும். அடிப்படை உரிமைமீறப்படுகின்ற போது அல்லது மீறப்படவுள்ளபோது ஒருவர் அத்திகதியிலிருந்து ஒரு மாதத்தினுள் உயர் நீதிமன்றத்துக்கு முறைப்பாடு செய்வதன் மூலம் நிவாரணம் பெறமுடியும்.
- பெண்களைத் தடுத்து வைத்தல்
ஒரு பெண் இன்னொரு பெண் அலுவலரின் பொறுப்பிலுள்ள கட்டுக்காவலில் வைத்திருக்கப்படல் வேண்டும்.
- சொற்கள் மூலமான பாலியற் தொல்லை
பாலியல் தொனியிலான சொற் பிரயோகத்தின் விளைவாக ஒரு பெண்ணுக்கு பாலியற் தொந்தரவு ஏற்படின் அது பாலியற் தொல்லையை உருவாக்கும்.
இக்குற்றம் 5 வருடங்களுக்கு மேற்படாத மறியற் தண்டனையால் தண்டிக்கப்படக்கூடிய குற்றமாகும். பிரிவு- 345 குற்றவியல் கோவை
