சாதாரணமாக ஒரு இடத்தில் அகழ்வு நடைபெறும் பொழுது ஒன்று அல்லது பல மனிதர்களின் எலும்புக்கூடுகள் காணப்படும் பொழுது அவை எக்காலத்திற்குரியவை? அதாவது மனிதர்கள் எக்காலப்பகுதியில் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டார்கள் என்பதே மிக முக்கியமான கேள்வி இக்கேள்விக்கான பதிலினை பொறுத்தே மிகுதி புலன் விசாரணைகள் நடைபெறும் மற்றும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பொதுவாக இவ்எலும்பு கூடுகள் 50 வருடத்திற்கு உட்பட்ட காலப்பகுதியினுள் இருந்தால் மட்டுமே பெரும்பாலும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். 50 வருடங்களுக்கு மேலாக இருந்தால் அவை பொதுவாக தொல்பொருளியல் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவே கருதப்படும். இக்கேள்விக்கான பதில் நிச்சயம் விஞ்ஞா ரீதியில் அல்லது வரலாறு ரீதியில் பொதுவா அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பத்திலேயே தொடர்ந்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறான சந்தர்ப்பக்கங்களில் எவ்வாறான முறைகள் நடைமுறையில் உள்ளது என்பதை பற்றியே இப்பதிவு ஆகும்.
- உருவ தோற்றவியல் (Bone Morphology) மூலம்
மிக அண்மை காலப்பகுதியில் புதைக்கப்பட்ட எலும்புகளில் தசை மற்றும் இணையங்கள் இணைந்து இருக்கும். மேலும் எலும்புகள் பாரமாகவும் மினுமினுப்பாகவும் இருக்கும். கூடவே நாற்றமும் இருக்கும். பொதுவாக மேற்குறித்த இயல்புகள் 6 மாதம் வரையே இருக்கும்.
2. அகழ்வின் பொழுது எடுக்கப்படும் வேறு பொருட்கள் (Circumstance evidence) மூலம்
உதாரணமாக எலும்புகளுடன் கிடைக்கும் பத்திரிகை துண்டுகள், நாணய குற்றிகள் மற்றும் வேறுபொருட்கள். இவற்றில் உள்ள திகதி மூலம் மூலம் காலத்தினை கணிக்கலாம். ஆனால் இம்முறையில் பெரும் தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இம்முறை பொதுவாக சட்ட நடவடிக்கைகளுக்குகாக ஏற்று கொள்ளப்படுவதில்லை.
3. Luminal முறை
இம்முறையில் Chemiluminescence (CL) டெஸ்ட் பயன்படுகின்றது. இம்முறை மிக செலவு குறைந்தது அத்துடன் மிக இலகுவாக செய்யலாம். ஆனால் இம்முறையில் உணர்திறன்(sensitivity) குறைவு என்பதால் பொதுவாக ஏற்று கொள்ளப்படுவதில்லை. sensitivity என்பது நோய் நிலைமையைக் கொண்டிருக்கும் நோயாளிகளை சரியாகக் கண்டறியும் திறனின் திறனை குறிக்கிறது. specificity என்பது ஒரு நிபந்தனையின்றி ஆரோக்கியமான நோயாளிகளை சரியாக நிராகரிப்பதற்கான சோதனை திறனைக் குறிப்பிடுகிறது. அவ்வாறே specificity யும் குறைவாகவே உள்ளது.

- Oxford histology index முறை
இம்முறையில் எலும்பானது காலப்பகுதியுடன் அழிவடையும் பொழுது அவற்றில் ஏற்படும் மாற்றங்களை நுணுக்கு காட்டியின் ஊடாக பரிசோதிப்பதன் மூலம் எலும்பின் காலப்பகுதி அறவிடப்படும். இம்முறையில் பல குறைபாடுகள் இருப்பதால் பொதுவாக ஏற்றுக்கொள்ள படுவதில்லை.
- வேறு முறைகள்
இங்கு சூழவுள்ள மண்ணில் மற்றும் எலும்பில் ஏற்படும் இரசாயன மாற்றங்களை அடிப்படையாக கொண்டு காலத்தினை அளவிடும் முறை ஆகும். இம்முறையும் காலத்தினை சரியாக கணிக்க பெரிதளவில் உதவாது.
- கார்பன் டேட்டிங் முறை
இம்முறையே நவீன செலவு மிக்க முறை ஆகும். இதில் sensitivity அண்ட் specificity கூடவாக உள்ளதால் தெளிவாக காலத்தினை கணிக்கலாம். இங்கு அணுகுண்டு கார்பன் விளைவு (Bomb carbon effect) மூலம் முதலில் எலும்புகள் 1950 இற்கு பிந்தியது அல்லது முந்தியதா என்று கணிக்கப்படும். 1950 இற்கு பிந்தியது எனில் 10வருட துல்லிய கால இடைவேளையில் காலத்தினை கணிக்கலாம. 1950 இற்கு பிந்தியது எனில் Accelerator mass spectrometry.(AMS) முறை மூலம் ஓரளவு பெரிதான கால இடைவெளியில் தான் காலத்தினை கணிக்க முடியும். 1950இற்கு பிந்தியது எனில் அது தொல்பொருளியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
