மன்னார் புதைகுழி – சில உண்மைகள்

  1. இரும்பு 500 வருடமாக துரு பிடிக்காமல் இருக்குமா?

முதலில் கண்டெடுக்கப்பட்ட உலோகம் ஆனது இரும்பு தானா? என்பதை உறுதி செய்யவேண்டும். பொன், வெள்ளி , செம்பு மற்றும் பித்தளை போன்ற கலப்பு உலோகங்கள் பல நூற்றான்டுகள் சென்றாலும் மிக மிக சிறிதளவே துரு பிடிக்கும் அல்லது துரு பிடிக்காமலே இருக்கும். இனி இரும்பானது எவ்வாறு துரு பிடிக்கின்றது என்பதை இரசாயன ரீதியில் பார்ப்போம். இரும்பானது புதைக்கப்படும் பொழுது மண்ணில் உள்ள ஓட்ஸிசன் மற்றும் அமில உப்புக்களுடன் தாக்கமடையும். இதன் பொழுது Fe2O3, FePO4, Fe2(OH)3 போன்ற கனியுப்புக்கள் கொண்ட படைகள்(layers) உருவாகும். மேலும் இவை புதைக்கபட்ட இரும்பின் மீது படிவதன் காரணமாக ஓட்ஸிசன் மற்றும் அமில உப்புக்களுடனான மேலதிக தொடுகை தடுக்க படும் இதன் காரணமாக மேலதிகமான துருப்பிடித்தல் தடுக்கப்படும். மேலும் மண்னில் உலோகம் ஆனது அசைவற்ற நிலையில் காணப்படுவதால் இவ்வாறு தோன்றிய படைகள் இலகுவில் உலோகத்தில் இருந்து விடுபடாது. சாதாரணமாக வீட்டில் நாம் பாவிக்கும் கத்தி போன்றன துரு பிடித்த நிலையில் உள்ள பொழுது, துருவினை நாம் நீக்குவோம் அல்லது பாவிக்கும் பொழுது தானாகவே இல்லாமல் போகும் இதன் காரணமாக துருபிடித்தல் மேலும் அதிகரிக்கும்.

  1. பல்லானது 500 வருடமாக உக்காமல் இருக்குமா?

பல்லானது எனாமல் என்ற பதார்த்தத்தினால் வெளிப்புறத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இது மிகுந்த வெப்பநிலை, கடும் குளிர் போன்றவற்றினை தாங்கி இலகுவில் அழிவடைந்து போகாது. இதன் காரணமாகவே குண்டு வெடிப்பு, விமான விபத்து மற்றும் மனித புதைகுழி சமபந்தமான புலனாய்வுகளில் பல்லானது பாவிக்கப்படுகின்றது.

116228-004-804F6391

3. மனித பல்லினை வைத்து கொண்டு மனிதன் எப்பொழுது புதைக்கப்பட்டான் என்பதை கூற முடியுமா?

மனித பல்லினை வைத்து கொண்டு மனித எலும்பு கூட்டின் வயதினை அதாவது அம்மனிதன் எப்பொழுது பிறந்தான் என்பதை கூற முடியுமே தவிர அவன் எப்பொழுது கொன்று புதைக்கப்பட்டான் என்பதை கூற முடியாது. இது சம்பந்தமான படிப்பு Forensic odontology ஆகும். (Forensic odontology is the application of dental science to legal investigations, primarily involving the identification of the offender by comparing dental records to a bite mark left on the victim or at the scene, or identification of human remains based on dental records) மற்றும் இறந்த மனிதனை அடையாளம் காண அவனது பல்லின் விபரங்கள் உதவி புரியும்.

  1. மனித எலும்பானது 500 வருடங்களாக உக்காமல் இருக்குமா?

சாதாரணமாக புதைக்கப்பட்ட எலும்பானது உக்கி அழிவடைந்து போதல் என்பது அவ்வெலும்பு புதைக்கப்பட்ட சூழலில் தங்கி உள்ளது. அதிக வெப்பநிலை, குறைந்த மழை வீழ்ச்சி(மன்னார் மாவட்டமே இலங்கையில் அதிகுறைந்த மழை வீழ்ச்சி பெறும் இடம்), அதிக காற்றோடடம், உப்புத்தன்மை மிகுந்த மண் என்பன மண்ணில் உள்ள நுண்ணங்கிகளின் தொழில்பாட்டினை குறைக்கும். இதன்காரணமாக 500 வருடங்களாக எலும்புகள் உக்காமல் இருந்தமை என்பது ஆச்சரிய படக்கூடிய விடயம் அல்ல.

மேலும் கிடைக்க பெற்ற எலும்பு கூடுகள் கடுமையாக உக்கிய நிலையிலேயே கிடைக்க பெற்றன. அவை சிறிதளவு விசைக்கு கூட உடைந்து விடும் நிலையில் காணப்பட்டன. இவ்வாறே இரும்பும் மிகவும் துரு பிடித்து தும்பு மிட்டாசு போன்றே காணப்பட்டது.

5. தலையில் வாள்வெட்டு காயங்கள் காணப்பட்டனவே?
மண்டை ஓடு ஆனது நீண்ட காலமாக மண்ணில் புதையுண்ட நிலையில் இருக்கும் போது ஏற்படும் உக்கல் செயற்பாடு காரணமாக வெளிப்புறத்தில் மட்டுமே வெடிப்புகள் தோன்றும் இவை சட்ட மருத்துவ அறிவு இல்லாதவர்கள் இவற்றினை பார்வை இடும் பொழுது அவர்களுக்கு அது வாளால் வெடியதினை போன்று தோன்றும். அனுபவம் மிக்க சட்ட வைத்தியர் மிக இலகுவாக இவற்றினை அடையாளம் காண்பார்.

download.jpeg

6. புதைகுழிகளில் மம்மி தோற்றம் பெற்றது உண்மையா?
புதைக்கப்படும் மனித உடலில் உள்ள ஒவ்வொரு துளி நீரும் முற்றாக இழக்கபட்டு மனித உடலில் தசையும் எலும்புகளும் எஞ்சும் நிலையே மம்மி நிலை ஆகும். அதாவது உடல் கருவாடு மாதிரி வருதல் ஆகும். இவ்வாறு தோன்றும் மம்மி பல வருடங்களாக பளு தடையாமல் இருக்கும். இங்கு இவ்வாறு கிடைக்க பெற்ற எலும்பு கூடுகளில் மம்மி நிலை தோற்றம் பெறவில்லை.

7. மலிபன் உறை மூலம் சம்பவம் நடை பெற்ற காலத்தினை கூறமுடியுமா?
ஒரு மனித புதைகுழியில் அகழ்வு நடை பெறும் பொழுது இவ்வாறு பல பொருட்கள் கிடைப்பது வழமையான ஒன்றே. சட்ட மருத்துவ துறையில் இவற்றின் மதிப்பு குறைவானது ஏனெனில் இவை அகழ்வு நடைபெறும் பிரதேசத்தில் வேண்டும் என்றோ அல்லது தற்செயலாக வோ கலக்கப் ப டலாம். மேலும் உற்பத்தி திகதியினை வைத்து புதைகுழி யின் காலத்தினை கணிப்பது தவறாக அமையும். உதாரணமாக 2000 ஆண்டில் அமைக்கப்பட்ட புதைகுழியில் ஆங்கிலேய காலத்து நாணயக்குற்றி காணப்பட்டால் நாம் அதனை ஆங்கிலேய காலத்தில் அமைக்க பெற்றது என்று கூறமுடியாது. மேலும் இம்முறையானது அறிவியல் ரீதியில் அமைந்தது அல்லது எனவே பொதுவாக நீதி மன்றம் பொதுவாக இவ்வாறன சாட்சியங்களை ஏற்றுக்கொள்வதில்லை.

8. கார்பன் பரிசோதனையில் கால இடைவெளி 1499- 1700 வரை அதாவது இரு நூ்றாண்டுகளுக்கு இடைபட்ட தாக குறிப்பிட்டு உள்ளர்களே இது எவ்வாறு?

சாதாரணமாக கிடைக்கப்பெறும் எலும்புகள் முதலில் nuclear bomb effect மூலம் கால கணிப்புக்கு உட்படுத்த படும் அப்போது கதிரியக்க கார்பன் அணுக்கள் மிக குறைந்த அளவில் காணப்படுவது காரணமாக AMS முறையில் காலம் கணிக்கபடும். AMS முறையில் தொல்பொருட் களுக்கு காலம் கணிக்க படும் பொழுது இவ்வாறு நீண்ட கால இடைவெளியே வரும். Nuclear bomb effect மூலம் 10 வருட இடைவெளியில் காலத்தினை கணிக்கலாம். ஒரு பொருளில் அதிகளவு கதிரியக்க கார்பன் காணப்படும் பொழுதே nuclear bomb effect முறையினை பயன்படுத்தலாம்.

9. கார்பன் டேட்டிங் முறையில் தவறுகள் ஏற்படாதா?
சட்ட மருத்துவத்தில் பரிசோதனைக்காக எடுக்கப்பட ஒரு மாதிரிப் பொருள் உரிய பரிசோதனை கூடத்தின மாற்றம் அடையாது சென்றடைந்தல் முக்கியமானது. இது chain of custody என்றழைக்கப்படும். மனித புதைகுழியில் எலும்பு கூடுகள் ஒரு படையில் அல்லது பல படைகளில் காணப்படும். பல படைகளில் காணப்படுவதன் காரணம் அவை பல்வேறுபட்ட சந்தர்பங்களில் புதைக்க பட்ட மையே ஆகும். இறுதி யாகப் புதைக்கப்பட வை மேலும் முதலில் புதைக்கப் பட்டவை அடியிலும் இருக்கும். எனவே மாதிரிகள் அடியில் உள்ள படையில் இருந்து எடுக்க பட் டால் அவை பிழையான முடிவினையே காட்டும். மேலும் இவ்வாறு எலும்பு மாதிரிகளை சேகரிப்பவர் forensic archaeology துறையில் நிபுணத்துவம் மிக்கவராக இருத்தல் அவசியம்.

15525613984107241823873080178175.jpg

10. இவ்வாறன பிழைகளை எவ்வாறு எதிர்காலத்தில் திருத்தலாம்?
சாதாரணமாக இவ்வாறான முக்கியத்துவம் வாய்ந்த மனிதப் புதை குழி அகழ்வு நடைபெறும் பொழுது காணாமல் போனோர் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட உரிய துறையில் தேர்ச்சி பெற்ற நிபுணர்கள் forensic archaeologist/anthropologist  பங்கு பெறுவதன் மூலம் இவ்வாறு பிழைகள் ஏற்படுவதினை குறைக்கலாம்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.