அவன் ஹயஸ் வான் ஒன்றின் உரிமையாளர் ஆவார். அவன் வழமையாக யாழ் கொழும்பு பிராயணங்களில் இடுபடுவான். அன்றும் வழமை போன்று வெளிநாடு ஒன்றில் இருந்து வந்திருந்த குடும்பம் ஒன்றினை யாழில் இருந்து வந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் இறக்கினான். வழமையாக இவ்வாறு இறக்கிய பின்பு யாராவது விமான நிலையத்தில் இருந்து யாழ் செல்ல விரும்பினால் ஏற்றி செல்வான். ஆட்கள் இல்லாவிடில் கொழும்பு வந்து ஒருசில நாட்கள் தங்கி இருந்து மீண்டும் பயணிகளுடன் யாழ் நோக்கி செல்வான். அன்றும் அவ்வாறே குடும்பம் ஒன்றினை விமான நிலையத்தில் காலை 5 மணிக்கு இறக்கி விட்டு பிரதான வீதியில் வாகனத்தினை செலுத்தினான் திடீரென்று வந்த போக்குவரத்து பொலிஸார் அவனை மறித்து சோதனை இட்டனர். பின்னர் அவனை சாராயம் குடித்து இருப்பதாக கைது செய்து அருகி உள்ள வைத்தியசாலையின் OPD பிரிவில் உள்ள ஒரு பெண் வைத்தியரிடம் நண்பகல் 12 மணியளவில் பரிசோதனைக்கு உட்படுத்தினர். அவ்வைத்தியார் அவன் மது போதையில் (under influence of alcohol) இருப்பதாக அறிக்கை இட்டார். இதனை தொடர்ந்து அவன் நீதி மன்றத்தில் நிறுத்த பட்டான். அவனுக்கு ஒரு தொகை பணம் அபராதமாக விதிக்க பட்டது. அவனிடம் உடனடியாக காசு இல்லை என்பதால் இரு நாட்கள் சிறையில் தள்ளபட்ட நிலையில் வெளிவந்தான்.
அவன் இச்சம்பவ நடைபெற்ற முதல் நாள் மாலை 3 மணிக்கு நண்பர்களுடன் இணைந்து அவன் 2 போத்தல் பியர் ( Lion strong 8.8% ) அருந்தி இருந்தான். மேலும் அவர்களின் கருத்துப்படி அவன் அதன் பிறகு வேறு எந்த சாராயம் அல்லது போதை பொருட்களோ பாவிக்க வில்லை.
சாதாரணமாக நாம் அருந்தும் மதுபானம் ஆனது அரை மணி நேரத்தில் உடலில் இருந்து உறிஞ்சபட தொடங்கும். இரத்தத்தில் ஒரு மணி நேரத்தில் மதுபான அளவு உச்சத்தில் இருக்கும். எமது இரத்தத்தில் உள்ள மதுபான அளவானது உறிஞ்சப்படும் வீதத்திற்கும் வெளியேற்றப்படும் வீதத்திலும் தங்கியுள்ளது. பெரும்பாலும் 12 மணிநேரத்தில் மதுபானம் ஆனது சிறுநீர் மூலம் வெளியேற்ற பட்டு விடும் அதாவது உடலில் இருந்து முற்றாக நீங்கி விடும். இங்கு வைத்தியர் ஏறத்தாழ 20 மணித்தியாலங்களின் பின்பே அவர் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இந்நிலையில் அவ்வைத்தியரிடம் தொடர்பு கொண்டு இது சம்பந்தமாக வினவியபொழுது அவர் இது சம்பந்தமாக அறிவியல் ரீதியான (no scientific explanation) விளக்கமொன்றையும் தரவில்லை.
![]()
அவனுக்கும் அது சம்பந்தமான அறிவும் இல்லை. அவன் பிடித்த வழக்கு அறிஞர் அவர்களுக்கும் அது சம்பந்தமான அறிவும் இல்லை. அவர் இவனை குற்றதினை ஓப்புகொள்ள சொன்னார். இவனும் வழக்கிற்காக செலவு செய்ய பணம் மற்றும் நேரம் வேண்டும் என்பதால் வேறு வழி இன்றி குற்றத்தினை ஒப்புக்கொண்டு உரிய பணத்தினை செலுத்தினான்.
இவ்வாறு எமது அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் கொலை, திடீர் இறப்பு, விபத்து மரணம் , பாலியல் துஸ்பிரயோகம், அடித்து காயமேற்படுத்துதல் போன்ற பல்வேறு சம்பவங்களில் பொதுமக்களுக்கு சட்ட மருத்துவ சம்பந்தமன அறிவு தேவை. அது அவர்களுக்கு இல்லாத பட்சத்தில் குற்றங்களினை விசாரணை செய்யும் அதிகாரிகளினால் இலகுவில் ஏமாற்றபடுவர். பொதுமக்களை தவிர அவர்கள் சார்பில் வாதாடும் சட்ட தரணிகளுக்கு கட்டாயம் சட்ட மருத்துவ சம்பந்தமான அறிவு தேவை. இதனை கருத்தில் கொண்டே அவர்களுக்கான டிப்ளோமா கற்கை நெறி ஒன்று கொழும்பு மற்றும் ஜெயவர்தன பல்கலை கழக மருத்துவ பீடங்களில் நடத்தபடுகின்றது. சில வேளைகளில் சாதாரண பொதுமக்களுக்கும் ஒரு சில சட்ட தரணிகளுக்கும் இவ்விடயம் தெரிய வருவதால் ஒருசில குற்றவாளிகள் தப்பிக்க சாத்தியம் உள்ளது. ஆனால் ஆயிரம் குற்ற வாளிகள் தப்பிக்கலாம் ஆனால் ஒரு சுற்றவாளி தண்டிக்கபட கூடாது என்ற தத்துவ அடிப்படையில் தற்போதைய காலகட்டத்தில் சட்ட மருத்துவ சம்பந்தமான அறிவு எல்லோருக்கும் தேவையானது.
