நிர்பயா பாலியல் மற்றும் கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் டெல்லி திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. பெரும் சட்ட போராட்டத்திற்கு பின் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இந்தியாவை மட்டுமல்ல உலகையே உலுக்கிய அந்த சம்பவம் நடந்து இன்றோடு 7 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. 2012 டிசம்பர் 16ம் தேதி இந்த சம்பவம் நடந்தது. டெல்லியில் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள முனிர்கா பகுதியில்தான் பேருந்தில் அந்த கூட்டு பலாத்காரம் நடந்தது. தனது நண்பருடன் பேருந்தில் சென்று கொண்டு இருந்த நிர்பயா கொடூரமான 6 பேர் கொண்ட குழுவால் பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். டெல்லியில் ஓடும் பேருந்தில் மிக மோசமாக நிர்பயா துன்புறுத்தப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இதன் பொழுது தூக்கு தண்டனை கைதிக்கு வலிக்குமா? என்பதை மருத்துவ ரீதியாக ஆராய்வதே இப்பதிவின் நோக்கம் ஆகும்.

மரணத்திற்கான பொறிமுறையினை (mechanism of death) பொறுத்த மட்டில் சாதாரணமாக தூக்கில் தொங்கி இறப்பதற்கும், தூக்கு தண்டனை விதித்து இறப்பதற்கும் வித்தியாசம் உள்ளது.
அதாவது சாதாரணமாக தூக்கில் தொங்கி இறக்கும் பொழுது அவர்களின் காலிற்கும் நிலத்திற்கும் ஒருசில அடிகள் உயரமே காணப்படும். மேலும் சிலவேளைகளில் அவர்களின் கால்கள் நிலத்தில் தொடுகையில் இருக்கலாம். இதன் பொழுது ஓப்பிட்டளவில் கணிசமான விசை அவர்களின் கழுத்தினை நெரிக்கும். இவ்வாறு தாக்கும் விசை அவர்களின் நிறை மற்றும் குதிக்கும் உயரம் (Potential energy = mass x gravity x height) என்பவற்றில் தங்கி இருக்கும்.
இதன் பொழுது கழுத்தில் உள்ள பிரதான இரத்த குழாய்கள்(carotid artery, great veins and vertebral artery) மற்றும் சுவாச குழாய்கள்(trachea) நசிபடும். இதன்காரணமாக மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் மற்றும் ஓட்ஸிசன் தடைப்பட மரணம் சம்பவிக்கும். இவ்வாறு நடைபெற 3 தொடக்கம் 5 நிமிடங்கள் செல்லும். முதலில் அவர்கள் மூச்சு எடுக்க கடினப்பட்டு வேதனை படுவார்கள். சில சந்தர்ப்பங்களில் தாமே சுருக்கினை நீக்க முற்படுவர். ஒருஇரு நிமிடங்களின் பின்பே சுய நினைவினை இழப்பார்கள் அதன் பின்னரே அவர்களுக்கு வலி வேதனை இருக்க மாட்டாது.
ஆனால் தூக்கு தண்டனை விதிக்கும் பொழுது மிக உயரத்தில் உள்ள தூக்கு மேடையில் இருந்து சடுதியாக தூக்கு தண்டனை கைதி கீழ்நோக்கி வீழ்த்தப்படுவர். இதன் பொழுது அவர்களின் கழுத்தில் உள்ள பிரதான இரத்த குழாய்கள் மற்றும் சுவாச குழாய்கள் நசிபடுவதோடு மேலதிகமாக கழுத்து பகுதியில் உள்ள முள்ளந்தண்டு உடைக்கப்பட (Hangman fracture) அதனுள்ளே அமைந்த முன்னான் மற்றும் முள்ளந்தண்டு என்பன சிதைக்கப்படும். இதன் பொழுது தூக்கு தண்டனை கைதி அதிர்ச்சி நிலைக்கு (spinal shock/ decerebrate state) உட்பட்டு உடனடியாகவே சுயநினைவினை இழப்பர். இதன் காரணமாக அவர்களுக்கு வலி மற்றும் வேதனை தெரியாது.சுயநினைவினை இழந்த பின்னரே அவர்களுக்கு மூளைக்கு ஓட்ஸிசன் பற்றா குறை காரணமாக வலிப்பு வரும்.
மேற்குறிய அவதானங்கள் யாவும் யூதர்களுக்கு எதிரான இன படுகொலையின் பொழுது நாசி படைகளுடன் சேர்ந்து பணியாற்றிய வைத்தியர்களினால் நேரடியாக அவதானிக்கப்பட்டு பதிவு செய்யப்பட் டன. இதன் காரணமாகவே பிற்காலத்தில் மருத்துவர்கள் இவ்வாறு மனித சித்திரவதைகளுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவுவது மருத்துவ ஒழுக்கவியலுக்கு முரணானது என்று கருதப்படுகின்றது. இங்கு நான் உடல் ரீதியான (physical pain ) இணையே கருத்தில் கொண்டுள்ளேன், ஆனால் மரண தண்டனை கைதிகள் மன ரீதியான வேதனையில் (mental pain ) நிச்சயம் இருப்பார்கள்.
