வருட இறுதியில் வருட இறுதியினையும் புது வருட பிறப்பினையும் கொண்டாடும் முகமாக பல்வேறுபட்ட வியாபார நிறுவனங்கள் வெவ்வேறு சலுகைகளினை வழங்குவதுண்டு. நகர்ப்புறங்களில் உள்ள கிளப்புகள் மற்றும் சில ஹொட்டேல்கள் போன்றன இவ்வாறு சலுகைகளினை வழங்குவதுண்டு. இவற்றில் முக்கியமானது வருட இறுதி நாளான்று அதாவது டிசம்பர் 31 திகதி இரவு நடக்கும் விருந்துபசாரங்கள். இவ்வாறன ஒரு விருந்து உபசாரத்திலே தான் அவன் கடைசியாக பங்குபற்றியிருந்தான். இவ்விருந்து உபசாரத்தில் அளவு கணக்கு இன்றி குறிப்பிட்ட வகை மதுபானம் வழங்கப்பட்டது. அவனும் அவனது நண்பர்களும் குறிப்பிட்ட விருந்தில் பெரும் தொகை பணத்தினை செலவழித்து பங்குபற்றி இருந்தனர். இதன்போதுதான் அச்சம்பவம் நடைபெற்றது. அவன் நிறைபோதையில் கோழி பொரியலினை (பைட்ஸ்) சாப்பிட்டுக்கொண்டிருந்தான். இல்லை விழுங்கிக் கொண்டிருந்தான் என்றே சொல்லவேண்டும். அப்பொழுது அவனது தொண்டையில் கோழியின் எலும்பு ஒன்று சிக்கிய மாதிரி இருந்தது, ஆனால் அவன் அதனை பெரிதாக பொருட்படுத்தவில்லை மேலும் மதுவினை அருந்தியும் பாட்டுக்களினை பாடியும் விருந்தினை களித்து வீடு வந்து சேர்ந்தான்.
அடுத்த நாள் தொடக்கம் அவனுக்கு கடுமையான தொண்டை நோ அவன் மாலை தனியார் வைத்தியசாலைக்கு ஒன்றிற்கு சென்று வைத்தியர் நிபுணர் ஒருவரினை சந்தித்தான். அவரும் சில குளிசைகளினை கொடுத்து ஓர் பிரச்சனையும் இல்லை என்று சொல்லி அனுப்பி வைத்தார். ஆனால் அவனுக்கு சுகம் வந்த பாடில்லை. திரும்பவும் இரண்டு நாட்களின் பின்னர் அதே வைத்தியரினை சந்தித்து தனது தனது உடல் நிலையில் மாற்றம் இல்லை என்று சொன்னான். அவரும் அவனை அரசாங்க வைத்தியசாலையில் தனது வாட்டில் அனுமத்தித்தார். அங்கு அவனுக்கு இரத்தம் இரத்தமாக சத்தி வந்தது அத்துடன் மலமும் கடும் கறுப்பு நிறத்தில் போனது இது பற்றி விடுதி வைத்தியரிடம் கூறியபொழுது அவர் சொன்னார் பெரிய டொக்டர் வந்து பார்ப்பார் என்று ஆனால் அவர் வருவதற்கு முதலேயே அவனது உயிர் அவனை விட்டு பிரிந்து இருந்தது.
இறுதியில் அவனது உடல் உடற்கூராய்வு பரிசோதனைக்கு உட்படுத்த பட்ட பொழுது அவனது சமிபாட்டு தொகுதி முழுவதும் அவனது இரத்தத்தினால் நிறைந்து இருந்தது. மேலும் அவனது இரைப்பையின் உட்பகுதி பல்வேறு இடங்களில் உள்ளே சிக்குப்பட்டிருந்த கோழியின் எழும்பினால் கிழிக்க பட்டு அதில் இருந்து இரத்தம் வந்தபடி இருந்தது.
இங்கு இரண்டாவது படம் அவரின் இரைப்பையில் இருந்து எடுக்க பட்ட 1.5kg நிறையுடைய இரத்த கட்டியினை காட்டுகின்றது
நாம் உணவு விழுங்கும் செயற்பாடானது எமது மூளையினால் கட்டுப்படுத்தபடுகின்றது. இதில் பல மூளையின் நரம்புகள் பங்குபற்றுகின்றன (Eating and swallowing are complex neuromuscular activities consisting essentially of three phases, an oral, pharyngeal and esophageal phase. Each phase is controlled by a different neurological mechanism). மூளையின் செயற்பாடு மந்த நிலையில் உள்ள நிலையில் அதாவது அளவுக்கு அதிகமாக போதைப்பொருள் பாவித்த அல்லது மதுபானம் அருந்திய நிலையில் நாம் உணவு உண்ணும் பொழுது இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுகின்றது. இவ்வாறான நிலையில் பலர் உணவு புரைக்கேறி இறந்த சந்தர்ப்பங்களும் உண்டு. எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் மிகஅவதானமாக நாம் உணவு அருந்த வேண்டும்.
