அண்மையில் திருட்டில் ஈடுபட்ட ஒரு குழுவினர் மூதாட்டி ஒருவரின் வீட்டினுள் பலாத்காரமாக புகுந்து கொள்ளையில் இடுபட்ட பொழுது, அம் மூதாட்டி உதவி கோரி கத்த முற்பட்டார் அப்பொழுது அவர்கள் அவரின் வாயினுள் துணியினை அடைந்து விட்டு கொள்ளையில் இடுபட்டார்கள். பின்னர் அவரின் கை மற்றும் கால்களில் கயிற்று மூலம் ஒன்றோடு ஒன்றாக இணைத்து விட்டு சென்றுவிட்டார்கள். அவர்கள் வாயில் அடைந்த துணியை எடுக்கவும் இல்லை. மறுநாள் அயலவர் அவரினை பார்க்க சென்ற பொழுது அவர் மயங்கிய நிலையில் காணப்பட்டு அவசரமாக வைத்திய சாலையில் அனுமதிக்கபட்டு உயிர் பிழைத்தார்.
கடந்த காலங்களில் இவ்வாறு மேற்கூறியதை ஒத்த பல சம்பவங்களில் பல உயிரிழப்புக்கள் நடைபெற்றுள்ளன. உண்மையில் திருடர்களின் நோக்கம் அவ்மூதாட்டியினை கொலை செய்வதல்ல. அவரின் உதவி கோரும் குரலினை வெளியில் கேட்க விடாமல் செய்வதே.

இனி இவ்வாறன சம்பவங்களில் எவ்வாறு மரணம் சம்பவிக்கும் என்பதை பார்ப்போம். சாதாரணமாக எமது வாய்க்குழியில் எந்தவொரு பிற பொருளும் வைக்க படும் இடத்து வழமைக்கு மாறாக அதிக அளவில் உமிழ் நீர் சுரக்கும். இங்கும் இவ்வாறே அதிகளவு உமிழ்நீர் சுரந்து அடைக்கப்பட்ட துணியை ஈரமாக்கும் இதனால் துணி (gag)அளவில் பெரிதாகி தொண்டையினுள் (naso pharynx) இறங்கி தொண்டையை முற்றாக அடைக்கும் அல்லது ஏற்கனவே பகுதி அளவில் அடைபட்டிருந்த தொண்டை முற்று முழுதாக அடைப்பட சுவாசம் மேற்கொள்ள முடியாமல் இறப்பு ஏற்படும். இது சட்ட மருத்துவத்தில் Gagging என்று அழைக்கப்படும். இங்கு துணியானது தொண்டை பகுதியிலேயே காணப்படும். உலகில் இவ்வாறன சம்பவங்கள் அரிதாக வாய்மூல உடலுறவின் போதும் ஏற்படலாம்.
தமிழில் புரைக்கேறல் என்பது நாம் உண்ணும் உணவு வாத நாளியினுள் (trachea) உள்ளிறங்குதல் ஆகும்.
