கணவன் மனைவியை பல தடவைகள் கத்தியால் குத்தியது ஏன்?

அன்மையில் நடந்த ஓர் கொலைச்சம்பவம் ஒன்றில் கணவன் மனைவியை 15 தடவைகள் கத்தியால் குத்தியும் வெட்டியும் கொலை செய்தார். இவ்வாறாக நடைபெற்ற சம்பவங்களில் எம்மனதில் ஏன் இவ்வாறு ஒருவர் பலமுறை குத்தி அல்லது வெட்டி கொலை செய்யவேண்டும்? என்ற வினா மனதில் எழும். சாதாரணமாக இவ்வாறான குற்ற சம்பவங்களில் குற்றவாளியின் மனதில் எழும் பழிவாங்க வேண்டும் என்ற மன உந்துதல் (intention) காரணமாகவே இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஒரு குற்றம் நடைபெற்றதாக கூறப்படும் இடத்து செயற்பாடும் (action) மன உந்துதலும் ஒருங்கே நடைபெற்றிருக்க வேண்டும்.

மன உந்துதல் இன்றி நடைபெற்ற குற்ற சம்பவங்கள், குற்ற செயல்களாக கருதப்படுவதில்லை அத்துடன் தண்டனையும் விதிக்க படுவதில்லை. பொதுவாக இவ்வாறான சம்பவங்களில் குற்றவாளியின் மனநிலை சட்ட மருத்துவ துறை சார்ந்த உளவியல் நிபுணரால் விசேட ஆராயப்படும். மேலும் இவ்வகையான குற்றவாளிகள் சமுதாயத்தில் இருப்பதால் பெரும் தீங்குண்டாகும். இதனால் சமூகத்தின் நன்மை கருதி இவர்கள் வாழ்நாள் முழுவதும் அல்லது அவர்கள் மன நோயில் இருந்து மீளும் வரை மனநல வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்படுவார்கள்.

வழக்கு விசாரணையின் பொழுது சட்ட வைத்திய அதிகாரியிடம் குற்றவாளியின் மன உந்துதல் சம்பந்தமாக பல்வேறு கேள்விக்கணைகள் தொடுக்கப்படும். ஓர் சட்ட வைத்திய அதிகாரியானவர் உடற் கூராய்வு பரிசோதனையின் பொழுது இறந்தவரின் உடலில் பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்துவார்

  1. வெட்டு அல்லது குத்து காயங்களின் எண்ணிக்கை

குற்றவாளிக்கு மன உந்துதல் அதிகமாயின் காயங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்

  1. வெட்டு அல்லது குத்து காயங்கள் உடலில் காணப்பட்ட பிரதேசங்கள்

குற்றவாளிக்கு மன உந்துதல் அதிகமாயின் காயங்கள் பொதுவாக நெஞ்சு, கழுத்து மற்றும் முகத்தில் காணப்படும். திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகளினால் ஏற்படும் கொலைகளில் பொதுவாக பெண்களின் அல்லது ஆண்களின் முகம் அதிகளவில் சிதைக்க ப்பட்டிருக்கும்

3. ஒன்றிற்கு மேற்பட்ட முறைகளில் காயத்தினை ஏற்படுத்தியிருத்தல்

உதாரணமாக வெட்டு காயங்கள் மூலமும் துப்பாக்கி சூட்டு மூலமும் மரணத்தினை ஏற்படுத்தியிருத்தல்
4. சில சந்தர்ப்பங்களில் ஒரு நபர் இறந்த பின்பும் குற்றவாளி தீவிர மன உந்துதல் காரணமாக காயங்களை (postmortem injuries) ஏற்படுத்தியிருக்கலாம் அல்லது அவரது உடலை துண்டங்களாக வெட்டி (Dismemberment) இருக்கலாம
5. ஒரு நபர் இறந்த பின்பும் குற்றவாளி மன உந்துதல் காரணமாக அவரது உடலை மறைத்து வைத்திருக்கலாம் (surreptitious disposal)

இவ்வாறான விடயங்களின் அடிப்படையிலேயே குற்றவாளியின் மன உந்துதல் தீர்மானிக்கப்பட்டு அவருக்கு தண்டனை வழங்கப்படுகின்றது

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.