கடந்த வருடம் பிரபல நடிகை ஸ்ரீ தேவி டுபாயில் உள்ள ஓர் விடுதியில் திடீர்ரென்று இறந்தார். அவரது உடல் குளியறையில் உள்ள தண்ணீர் தொட்டியில் இருந்தே மீட்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நடந்த மரண விசாரணையின் பொழுது அவர் மாரடைப்பின் காரணமாகவே இறந்தார் என்று கூறப்பட்டது. இவ்வாறு பிரபலங்கள் அகால மரணம் அடைந்த பொழுதெல்லாம் பல்வேறு பட்ட சர்ச்சைகள் எழுவது வழமை. பலரும் தங்களை பெரும் புலனாய்வார்களாக உருவகித்து பல்வேறு சர்ச்சைகளை எழுப்புவார்கள். இவ்வாறே கடந்த வாரமும் கேரளத்தினை சேர்ந்த போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் ஸ்ரீ தேவி அவர்கள் கொலை செய்யப்பட்டே இறந்தார் எனக்கூறி பெரும் பரபரப்பினினை ஏற்படுத்தியிருந்தார். அவர் மேலும் கூறியதாவது ஸ்ரீ தேவி அதிகமாக குடித்து விட்டு நீர்த்தொட்டியில் மூழ்கி இறந்து விட்டார் என்பது ஏற்க முடியாதது அப்படி அவர் அதிகமாக குடித்து இருந்தாலும் அவரினால் 1 அடி தண்ணீரில் அவரினால் மூழ்க முடியாது, அவரது தலையினை யாராவது ஒருவர் பலவந்தமாக நீரில் அமிழ்த்தியே சாகடித்தனர் என்று பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தார்.
இப்பதிவின் நோக்கம் ஒருவர் நீரில் மூழ்கி இறக்கும் பொழுது எவ்வாறு மரணத்திற்கான காரணம் (Cause of death) மற்றும் அவர் இறந்த சூழ்நிலை (Circumstance of Death) எவ்வாறு வேறுபடுகின்றது என்பதை ஆராய்வதே ஆகும்.
ஒவ்வொன்றாக ஆராய்வோம்
- ஒருவர் நீர் நிலையில் உள்ள பொழுது அல்லது அதற்கு அருகாமையில் உள்ள பொழுது அவருக்கு ஏற்கனவே உள்ள நோய் நிலைமையானது தீவிரமடையலாம் உதாரணமாக இயற்கையாக ஏற்படும் நோய்களான மாரடைப்பு, காக்கை வலிப்பு , குறிப்பாக நீரிழிவு நோயாளிகளில் உடலில் சடுதியான குளுகோஸின் குறைவு (Hypoglycemic attack) போன்றன ஏற்படலாம். ஏற்கனவே ஆரோக்கியமானவர் ஏன்று கருதப்படுவருக்கு மாரடைப்பு போன்றன முதன்முறையாகவும் ஏற்படலாம். உண்மையில் இவர்களுக்கு இந்நோய் குணம்குறி அற்று இருந்திருக்கும். இவ்வாறு ஏற்படும் நோய் நிலையினால் அவர்கள் இறந்து நீரில் விழலாம் அல்லது நீரில் வீழ்ந்து இறக்கலாம்.
- நீர் நிலை ஒன்றில் பொதுவாக கடல், குளம் , ஆறு போன்றவற்றில் நீச்சல் தெரியாத ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொள்ளலாம்.
- நீர் நிலை ஒன்றில் பொதுவாக கடல், குளம் , ஆறு போன்றவற்றில் நீச்சல் தெரிந்த ஒருவர் நீச்சலில் ஈடுபடும் பொழுது அவர்கள் சுழி , கடுமையான நீரோட்டம் போன்றவற்றில் அகப்பட்டு தற்செயலாக மரணமடையலாம். இவ்வாறே கடற்கரையில் நிக்கும் ஒருவர் பாரிய அலையில் இழுபட்டு சென்று மரணமடையலாம்
- நீச்சல் தெரியாத ஒருவரை வேறு ஒருவர் நீர் நிலையினுள் தள்ளி வீழ்த்தி கொலை செய்யலாம். அவ்வாறே நீச்சல் தெரிந்த ஒருவருக்கு அதிகளவு மதுபானம் அல்லது போதைப்பொருள் போன்றவற்றினை கொடுத்து அல்லது தலை போன்றவற்றில் காயங்களை ஏற்படுத்தி அவரினை செயற்படாத நிலைக்கு கொண்டுவந்த பின்னர் நீர் நிலையில் தள்ளி விழுத்தியிருக்கலாம்.
நாம் மதுபானம் அருந்தும் பொழுது அதன் அளவு எமது இரத்தத்தில் அதிகரித்து செல்லும், இவ்வாறு அதிகரித்து செல்லும் பொழுது ஒவ்வொரு செறிவிலும் (Blood alcohol concentration – BAC) அது எமது உடலில் பல்வேறுபட்ட மாற்றங்களை உண்டுபண்ணும். இவ்வாறு உடலில் வெவ்வேறு செறிவுகளில்/ அளவுகளில் மதுபானம் உள்ள பொழுது ஏற்படும் மாற்றங்களை பின்வரும் அட்டவனை காட்டி நிற்கின்றது

இதன் பிரகாரம் எமது இரத்தத்தில் 160 – 300 mg/dl வரை மதுபானம் காணப்படும் பொழுது நாம் வழமையான மனிதர்கள் போன்று செயற்பட முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம் அதாவது எமக்கு சுயமாக சிந்திக்கும் ஆற்றல் மற்றும் தீர்மானம் எடுக்கும் ஆற்றல் அற்று போகும். பல சந்தர்ப்பங்களில் அறிவு இல்லாமல் போகும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஒருவரினை மிக இலகுவாக எவ்விதமான எதிர்ப்புகளும் இன்றி கொலை செய்த சம்பவங்கள் உண்டு. மதுபானத்தின் அளவு இரத்தத்தில் மேலும் அதிகரித்து 300 – 450 mg/dl என்ற செறிவு நிலையினை அடையும் பொழுது நிலைமை இன்னும் மோசமாக இருக்கும். அதாவது அவர் பெரும்பாலும் சுயநினைவு அற்ற நிலைக்கு தள்ளப்படுவர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஒருசில அங்குல உயரத்திற்கு நீர் தங்கி இருந்தாலே போதுமானது. அதாவது ஒருவர் முகம் குப்புற சிறிய அளவிலான நீரில் வீழும் பொழுது அவ்நீரானது உயிரிழப்பினை ஏற்படுத்த கூடியது.
5. குளியலறையின் குளியல் தொட்டியில் நீந்தும் பொழுது சில சந்தர்ப்பங்களில் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகலாம்
6.நபர் ஒருவர் ஒருவரினை கொலை செய்துவிட்டு அவரின் உடலினை நீர் நிலை ஒன்றினுள் போடலாம். இதன்மூலம் அவர் நீரில் மூழ்கியே இறந்தார் என்று காட்டிட முற்படுவர்.
7. சில சந்தர்ப்பங்களில் ஆறு மற்றும் குளம் போன்ற நீர் நிலைகளில் நீராடும் பொழுது அங்குள்ள முதலைகள் போன்ற உயிரினங்கள் தாக்கி மனித உயிரிழப்புக்கள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களும் நிறைய உண்டு.
இவ்வாறு ஒருவர் நீரில் மூழ்கி இறக்கும் பொழுது மரணத்திற்கான காரணம் (Cause of death) மற்றும் அவர் இறந்த சூழ்நிலை (Circumstance of Death) பல்வேறுபட்டவாறு வேறுபடுகின்றது.

One thought on “நடிகை ஸ்ரீதேவியின் மர்மமரணம்”