கடந்த வாரத்தில் மேன்முறையீட்டு நீதி மன்றத்தினால் அளிக்கப்பட்ட தீர்ப்பினை தொடர்ந்து இலங்கையில் காலகாலமாக நடைபெற்று வந்த வேள்வி மீதான தடை சட்ட ரீதியாக அகற்ற ப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பலர் சமூக வலைத்தளங்களில் வேள்விக்கு ஆதரவாகவும் எதிராகவும் பிரச்சாரம் மேற்கொண்டனர். மேலைத்தேச நாடுகளில் எவ்வாறு விலங்குகள் இறைச்சிக்காக கொல்லப்படுகின்றன. என்பதை விளக்குவதே இப்பதிவின் நோக்கமாகும். மேலைத்தேச நாடுகளில் ஆடு, பன்றி மற்றும் மாடுகள் போன்றவற்றினை அவை வலி, வேதனை அனுபவிக்காதவாறு கொல்ல பல்வேறுபட்ட முறைகள் பாவிக்கப்பட் டாலும் Captive bolt pistol என்ற துப்பாக்கி தான் பொதுவாக பாவிக்க படுகின்றது. இது பொதுவாக பின்வரும் பெயர்களில் அழைக்கப் படுகின்றது cattle gun, stunbolt gun, bolt gun, or stunner. இது பொதுவாக மிருகத்தினை உடனடியான மயக்க நிலைக்கு கொண்டு சென்று இறப்பினை ஏற்படுத்த உதவுகின்றது. இங்கு துருப்பிடிக்காத உலோகத்தினால் ஆன கம்பியே வழமையான துப்பாக்கியின் சன்னதிற்கு பதிலாக பாவிக்கப்படுகின்றது. இங்கு உலோகக் கம்பி துப்பாக்கியில் மறைந்த நிலையில் இருக்கும் சாதாரண துப்பாக்கி போன்றே trigger இணை அழுத்த உலோக கம்பி விடுவிக்கப்படும். இங்கு துப்பாக்கி ரவையில் வெடி மருந்துக்கு பதிலாக உலோக கம்பியானது வாயு மூலம் அல்லது ஸ்பிரிங் மூலம் அமுக்கப்பட்ட உலோக கம்பி விடுவிக்கப்படும். சிலவேளைகளில் அரிதாக blank round இல் வெடி மருந்து பாவிக்கப்பட்டு அமுக்கம் உண்டாக்கப்பட்டு (explosive)உலோக கம்பி விடுவிக்கப்படும்.
இவற்றில் பொதுவாக 3 வகைகள் உண்டு
- penetrating – இதில் பாவிக்கப்படும் உலோக கம்பியானது கொல்லப்படவிருக்கும் விலங்கின் மண்டையோட்டினுள் பாயும் தன்மை உடையது.
- non-penetrating – இதில் பாவிக்கப்படும் உலோக கம்பியானது நுனிப்பகுதியில் காளான் போன்று விரிந்து இருப்பதால் கொல்லப்படவிருக்கும் விலங்கின் மண்டையோட்டினுள் பாயும் தன்மை அற்றது ஆனால் கடுமையான விசையினை கொடுப்பதால் விலங்கு இறக்கும். இது பொதுவாக வினைத்திறன் குறைந்த உபகரணம் ஆகும்.
மேற்குறிய இருவகையிலும் நாம் உலோக கம்பியினை மீளப்பெற்று பயன்படுத்த முடியும்.
3. free bolt – இது சாதாரண துப்பாக்கி போன்றது.

இவ்வகையான துப்பாக்கிகளை பயன்படுத்தி மனிதர்களை கொல்ல முடியாதா? என்று கேட்டால் நிச்சயம் விடை ஆம் என்பதே. ஊடகவியலாளர் லசந்த விக்ரம துங்கவும் இவ்வாறான ஒருவகையான துப்பாக்கியினால் தான் கொல்லப்பட்டார் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது தவிர மேலைத்தேசத்தில் பல்வேறு நபர்கள் இவ்வகையான துப்பாக்கியினால் கொல்லப்பட்தாக சான்றுகள் உள்ளன.

3 thoughts on “சத்தமின்றி ஒரு வேட்டு”