ஆபத்தான அழகு …

அண்மையில் பிரேசில் நாட்டினை சேர்ந்த யுவதி ஒருவர் HIV நோய் தொற்றலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற வைத்தியசாலை சென்றார். அவரிடம் வைத்தியர்கள் அவருக்கு எவ்வாறு HIV தொற்றியது என்பது பற்றி கேட்ட பொழுது, யுவதி தான் ஒருவருடனும் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொள்ளவில்லை என தெரிவித்தாள். முதலில் வைத்தியர்கள் நம்பவில்லை, இதனை தொடர்ந்து அவள் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த பட்டபொழுது அவள் கன்னி கழியாதவள் என தெரியவந்தது. மேலும் அவள் பச்சை குற்றவில்லை அத்துடன் அவள் போதைப்பொருள் பாவனையாளரும் அல்ல. அதனை தொடர்ந்து வைத்தியர்கள் அவளுக்கு எவ்வாறு  HIV தொற்றி இருக்க முடியும் என ஆராய்ந்த பொழுது தான் அவள் அதனது சிறுவயதில் HIV தொற்றுக்கு உள்ளான உறவினர் ஒருவரின் manicure செய்யப்படும் உபகரணங்களை பாவித்தமை தெரிய வேண்டி வந்தது. எனினும் வைத்திய நிபுணர்கள் இதனை நம்பவில்லை. அவர்கள் இருவரினதும் இரத்த மாதிரிகள் பெறப்பட்டு அதில் உள்ள HIV வைரஸின் DNA ஆனது ஒப்பீட்டு ஆராயப்பட்டது. அப்பொழுது தான் வைத்தியர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது அதாவது இருவரின் இரத்த மாதிரியில் உள்ள வைரஸின் DNA யின் சில பகுதிகள் மிக நெருங்கிய ஒற்றுமையினை வெளிக்காட்டின. இதன் மூலம் இதுவரை காலமும் manicure  போன்ற அழகு ஆக்கல் செயன்முறையின் பொழுது HIV தொற்றாது என நம்பப்பட்டு வந்தமை பொய்யானது.

அவளின் தாயாரும், ஆண் நண்பரும் கூடவே HIV பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர், அதன் முடிவாக அவர்களுக்கு குறித்த நோய் நிலை இல்லை என்பதுவும் அவளின் தாயார் தான் உண்மையான தாயார் எனவும் உறுதிப்படுத்தப்பட்டது.

அமெரிக்காவின் CDC (Centers for Disease Control and Prevention) நிறுவனமானது சுகாதாரமற்ற முறையில் மேற்கொள்ளப்படும் அக்குபஞ்சர், பச்சை குத்துதல் மற்றும் உடல் உறுப்புகளில் துளை இட்டு ஆபரணங்கள் அணிதல் போன்றவற்றினால் HIV தொற்றும் ஆபத்துள்ளது என்று ஏற்கனவே பட்டியல் இட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறே சுகாதாரமற்ற அழகு ஆக்கல் சாதனங்களினாலும் HIV வைரசு ஒருவரில் இருந்து இன்னொருவருக்கு தொற்ற சாத்தியம் உள்ளது. இலங்கையில் சுகாதார துறையினர் அழகு ஆக்கல் நிலையங்களினை கண்காணித்து நெறிப்படுத்துகின்றனரா? என்பதே தற்போதுள்ள கேள்வி.

உலக எயிட்ஸ் தினம் மார்கழி மாதம் முதலாம் திகதி உலகம் முழுவதும் கடைப்படிக்கப்பட்டு வருகின்றது. “சமூகங்கள் நிலைமையை மாற்றலாம் (Communities make the difference)”என்ற தொனிப்பொருளில் இம்முறை உலக எயிட்ஸ் தினம் அனுஸ்டிக்கபடவிருக்கின்றது. இலங்கையில் இதுவரை 3,507 எயிட்ஸ் நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 2,391 ஆண்களும், 1,116 பெண்களும் காணப்படுகின்றனர். இலங்கையின் பொறுத்தவரை இங்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கு பிரதான காரணமாக பாதுகாப்பற்ற உடலுறுவு காணப்படுகின்றது. அது தவிர நோய்தொற்றுள்ள தாயிடம் இருந்து பிள்ளைக்கு தொப்புள் கொடி மூலமாகவும்  கடத்தப்படுகின்றது. இலங்கையில் குருதி மாற்றீடு சேவை மிக சிறந்த தரத்தில் இருப்பதால் அதாவது குருதி வழங்குனரின்  குருதியில்  HIV, MALARIA, HEPATITIS போன்ற நோய்நிலைகளை உண்டாக்கும் கிருமிகள் உள்ளனவா என்று பரிசோதித்த பின்னரே இன்னொரு நோயாளிக்கு வழங்கப்படும் இதன் காரணமாக குருதி மாற்றீடு காரணமாக  இலங்கையில் எச்ஐவி தொற்றுவதற்கான சந்தர்ப்பம் அரிதான ஒன்றாகும். இவ்வாறே இலங்கையில் சகல வைத்திய சாலைகளிலும்  நோயாளிகளுக்கு ஒருமுறை மட்டும் பாவிக்கும் ஊசி பாவிக்கப்படுவதினால்  இவ்வாறு ஊசிகள் மூலம் தொற்றுவதும் அரிது.

இலங்கையில் மாவட்ட அரச வைத்தியசாலையில் அமைந்துள்ள பாலியல் நோய், மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவில், பொதுமக்கள் தாமாகவே வந்து பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும். இங்கு பரிசோதனைகள் மேற்கொள்பவர்களது இரகசியங்கள் பாதுகாக்கப்படும். இது தொடர்பாக நோயாளிகள் பயப்பட வேண்டிய தேவையில்லை.

முற்றும்

img-be9693bef67365dfebf86bdc61bee4d5-v6407616803344334748.jpg

 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.