அண்மையில் அஸர்பைஜானில் இடம்பெற்ற தீ விபத்து ஒன்றில் இலங்கை மாணவிகள் மூவர் உயிரிழந்த நிலையில், அவர்கள் கடுவலை மற்றும் பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 22 மற்றும் 23, 25 வயதுடைய மல்ஷா சந்தீபனி, தருக்கி அமாயா, தவுசி ஜயவோதி ஆகிய மாணவிகளே என இனம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் சகோதரிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவிகள் தங்கியிருந்த விடுதியின் கீழ் மாடியில் தீ பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் மூன்று மாணவிகளும் மயக்கமுற்றுள்ளனர். பின்னர் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்கள் உ யிரிழந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. மேற்குறித்த மாணவிகள் மூவரும் தீக்காயங்களினால் நேரிடையாக பாதிக்க படாத பொழுதும் அவர்கள் எவ்வாறு இறந்தார்கள் என்பதே பலரின் கேள்வியாகும்.
சாதாரணமாக தீ விபத்து ஒன்றில் ஒருவர் தீக்காயங்களுக்கு உட்படாத சந்தர்ப்பத்திலும் இறப்பதற்கு பல்வேறு காரணிகள் பங்களிப்பு செய்கின்றன. அவற்றில் ஒன்றுதான் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வாயுக்களின் தாக்கம் ஆகும். ஓர் கட்டிடம் தீப்பற்றி எரியும் பொழுது அதில் உள்ள பிளாஸ்டிக்கினால், இறப்பரினால் மற்றும் வேறு பல சேதன சேர்வைகளினால் ஆன பொருட்கள் பொருட்கள் பற்றி எரியும் இதன் பொழுது பின்வரும் நச்சு வாயுக்கள் சூழலுக்கு வெளிவிடப்படும் நைட்ரிக் ஒக்சைட், சல்பர் ஒக்சைட், போஸ்யீன், கார்பன் மோனோக்சைட், சயனைட் மற்றும் பல்வேறுபட்ட சேதன சேர்வைகளின் வாயுக்கள்.

இந்த வாயுக்கள் மிக்க நச்சுத்தன்மையாக இருப்பதோடு மனிதன் இவற்றினை சுவாசிக்கும் பொழுது இவை நுரையீரலினால் ஊடாக இரத்தத்தில் கலக்கின்றது அத்துடன் ஒருசில நிமிடங்களிலேயே சுவாசித்த மனிதனை அறிவற்ற நிலைக்கு கொண்டுவந்து விடும். அதன் பின்னர் அம்மனிதனினால் தீ விபத்து நடைபெறும் பிரதேசத்தில் இருந்து வெளியேறமுடியாது இறப்பினை தழுவ நேரிடும். முக்கியமாக இங்கு கார்பன் மோனோக்சைட், சயனைட் போன்றவை மிகமிக நச்சுத்த தன்மையானவை. அத்துடன் அவை நாம் சாதாரணமாக சுவாசிக்கும் ஓட்ஸிசனை விட பலமடங்கு விருப்பத்துடன் (Affinity) இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் உடன் இணைந்து கொள்ளும். இதன் மூலம் கல நிலையில் சுவாச செயற்பாடு தடைப்பட்டு ஒருசில நிமிடங்களில் இறப்பு நேரிடும். மேலும் இவ்வாயுக்கள் பொதுவாக மணமற்றவை, இதன் காரணமாக மனிதர்கள் இவ்வாயுக்கள் வெளிவருவதினை இனம் கண்டுகொள்ள தவறிவிடுகின்றனர். ஒரு தீ விபத்து சம்பவத்தில் இவ்வாறு தான் சில மனிதர்கள் எவ்விதமான தீக்காயங்களுக்கும் உட்படாமல் பரிதாபகரமாக இறக்கின்றனர். இதன்காரணமாகவே தீயணைப்பு வீரர்கள் விசேடமாக வடிவமைக்கப்பட்ட முக மூடிகளினை பயன்படுத்துகின்றனர்.
முற்றும்
