அண்மையில் ஒருவர் தனது குழந்தையை காச்சல் காரணமாக ஓர் பிரபல தனியார் வைத்தியாலையில் அனுமதித்தார். சிகிச்சை முடிந்து வெளியேறும் பொழுது வழங்கப்பட்டிருந்த கட்டண சிட்டையில் அங்கு வைத்தியர்களுக்காக அதிக கட்டணம் அறவிடப்பட்டதக குறைப்பட்டுக் கொண்டார்.
வைத்தியர்கள், வழக்கு அறிஞர்கள், பொறியியலாளர்கள், பல்கலைகழக ஆசிரியர்கள்… போன்ற குறித்த துறையில் நிபுணத்துவம் மிக்கவர்கள் தங்களின் சேவைக்காக அறவிடும் கட்டணமே தொழில்வாண்மை கட்டணம் (professional fee) ஆகும்.
நிபுணத்துவம் மிக்கவர்கள் எனப்படும் பொழுது குறித்த நபர் கலை, விஞ்ஞான துறைகளில் அல்லது வேறு ஏதாவது ஓர் துறையில் நாளாந்தம் தொழிலினை மேற்கோள்பவராகவும் அதில் அதில் பரந்துபட்ட திறமையான அறிவுடையவரகவும் இருப்பார்.
நிபுணர்கள் கட்டாயம் வைத்தியர்களாகவோ, பொறியியலாளர் ஆகவோ இருக்கக் வேண்டியதில்லை. அவர்கள் எந்தவொரு துறையில் சிறந்து விளங்கியவராகவும் இருக்கலாம் உதாரணமாக அழகுக்கலை நிபுணராக அல்லது சமையல் கலை நிபுணராக இருக்கலாம். மறுதலையாக தொலில்வான்மை மிக்க தொழில்களை செய்பவர்கள் எல்லோரும் திறமை மிக்கவராக இருக்கமாட்டார்கள். உதாரணமாக பல மோட்டார் சைக்கிள் பழுது பார்ப்பவர்கள் இருப்பார்கள், அவர்களின் ஒரு சிலரே சிறப்பு திறமை உடையவராக இருப்பர். அவர்களை நாடி அதிக வாடிக்கையாளர்கள் செல்வார்கள்.
இவ்வாறு தொழில்வாண்மை சேவை வழங்குநர் ஒருவர் சிறப்பு நிபுணராக இருக்கும் இடத்து அவர் தனது சேவைக்காக அதிக கட்டணம் அறவிடுவது வழமையான செயற்பாடே ஆகும். இதில் ஆச்சரியப்படுவதற்கோ அல்லது பொறாமை கொள்வதற்கோ எதுவும் இல்லை.
உதாரணமாக
1. சில பிரபல்ய சட்ட தரணிகள் வழக்குகளில் ஆஜராக்குவதற்கு
2. சில விசேட வைத்திய நிபுணர்களின் சேவையினை பெறுவதற்கு
3. சிறந்த கட்டிட வடிவமைப்பு கலைஞர் ஒருவரின் சேவையினை பெறுவதற்கு
4. ஏன் High profile பாலியல் தொழிலாளி ஒருவரின் சேவையினை பெறுவதற்கு
ஆயிரக்கணக்கில் பணம் செலவழிக்க வேண்டும். இங்கு வழங்கப்படும் சேவையின் தரத்தினை கருத்தில் கொள்ள வேண்டுமே தவிர அது எவ்வளவு நிமிடம் அல்லது நேரம் வழங்கப்பட்டது என கருதுவது தவறானது. அத்துடன் அது ஓர் விஞ்ஞான ரீதியான முறையும் அல்ல. தொழில்வாண்மையாளர் ஒருவர் சிறப்பு நிபுணராக இருக்கும் இடத்து அவர் மற்றையவர்களை விட அதிக கட்டணங்களை அறவிடுவர்.

என்னதான் பிரச்னை ?
பொதுவா சில தொழில்வாண்மை சார் அமைப்புக்கள் (professional bodies) தமது உறுப்பினர்கள் அறவிடவேண்டிய ஆகக்குறைந்த கட்டணத்தினை வரையறுத்துள்ளன. ஆனால் அறவிடப்படும் கூடிய கட்டணத்திற்கான சூத்திரத்தினை அறிமுகப்படுத்த வில்லை. அதாவது தொழில்வாண்மை மிக்க ஒருவர் எவ்வாறு தமது கட்டனத்தினை தீர்மானிக்க வேண்டும் என்று அறிவிக்கவில்லை. மேலும் தொழில்வாண்மை மிக்கோர் தமது கட்டனங்கள் தொடர்பாக தமது வாடிக்கையாளருக்கு விளக்கம் எதுவும் கொடுப்பதில்லை. இறுதியில் கட்டணத்தினை கூறும் பொழுதுதான் பிரச்சனை ஆரம்பிக்கின்றது.
முற்றும்

