சாரதி தப்பி ஓட முடியாமைக்கு காரணம் என்ன?

அண்மையில் வவுனியாவில் ஏற்பட்ட விபத்தினை தொடர்ந்து, விபத்துக்குள்ளான வாகனத்தில் சிக்கியிருந்த சாரதி விஷமிகளால் வைக்கப்பட்ட தீயில் கருகி உயிரிழந்தமை யாவரும் அறிந்ததே. சாதாரணமாக பாரிய விபத்து சம்பவம் ஒன்றினை தொடர்ந்து விபத்துக்குள்ளான வாகனத்தில் இருந்து சாரதி மற்றும் முன்னிருக்கையில் இருப்பவர் உடனடியாக வாகனத்தினை விட்டு வெளியேறுவது ஓர் கடினமான செயலாகவே இருந்து வருகின்றது. ஏன் இவ்வாறு இருக்கின்றது என்பது பற்றி ஆராய்வதே இப்பதிவின் நோக்கமாகும். ஒவ்வோர் காரணங்களும் பின்வருமாறு
1. வாகனத்தின் முன்பகுதி (dash board) சாரதியின் கால்களினை தாக்கி எலும்பு முறிவு உட்பட பலத்த காயங்களினை விளைவித்திருக்கும் மற்றும் இரு கால்களும் வாகனத்தின் உடைந்த பகுதியில் வசமாக சிக்கி இருக்கும்.

driver injury patternக்கான பட முடிவுகள்

2. நவீன வாகனங்களில் வாகனத்தின் கதவானது விபத்தினை தொடர்ந்து இலகுவில் திறபடாதவாறு அமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக வீதி விபத்துக்களின் பொழுது வாகனங்கள் உருளும் பொழுது, வாகனத்தில் உள்ளிருப்பவர்கள் வெளியே தூக்கி எறியப்படாதவாறு வாகனங்களின் கதவுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுவும் ஓர் வகை பாதுக்காப்பு ஏற்பாடு தான். ஆனால் தீ பரவும் சமயங்களில் பிரயாணிகளுக்கு மற்றும் சாரதிக்கு ஆபத்தானதாக மாறிவிடுகின்றது.
3. சாரதியின் கழுத்து பகுதியில் ஏற்படும் காயம். இது சட்ட மருத்துவத்தில் whip lash injury என அழைக்கப்படும். விபத்துக்களின் பொழுது ஏற்படும் சடுதியான அமர்முடுகல் காரணமாக ஏற்படுகின்றது. இதன் காரணமாக கழுத்து பகுதியின் உள்ள தண்டு வடம் பாதிக்கப்படுவதன் காரணமாக உடனடியாகவே குறித்த நபரின் கை மற்றும் கால் ஆகியன பாரிசாவாத நிலைக்கு உள்ளாவதன் காரணமாக அவர் உடனடியாக வெளியேற முடியாத நிலை ஏற்படும்.

whiplash injuryக்கான பட முடிவுகள்

4. சிறிது நேரம் ஏற்படும் மயக்கமான நிலை (transient loss of consciousness) அதாவது தலையில் பலமான மொட்டை விசை ஒன்று தாக்கும் (blunt force) பொழுது அவருக்கு தலையில் எவ்விதமான காயங்களும் ஏற்படாது ஆனால் சிறிது நேரம் மயக்க நிலையில் இருப்பார். இவ்வாறான நிலை சட்ட மருத்துவத்தில் concussion என்றழைக்கப்படும். இதனால் அவர் உடனடியாக வெளியேற முடியாத நிலை ஏற்படும்.

concussionக்கான பட முடிவுகள்

5. தலைப்பகுதியில் ஏற்படும் பாரதூரமான காயங்களினால் (Severe traumatic brain injury) ஏற்படும் நினைவிழந்த நிலை காரணமாக அவர் உடனடியாக வெளியேற முடியாத நிலை ஏற்படும்.
6. மதுபானம் மற்றும் ஏனைய போதைப்பொருட்களை பாவித்து இருந்தால் அதன் தாக்கம் காரணமாக அவர் உடனடியாக வெளியேற முடியாத நிலை ஏற்படும்.

HP PNG

7. வாகனம் தீப்பற்றி எரியும் பொழுது அதில் இருந்து பல்வேறுபட்ட மனிதனின் சுவாசத்திற்கு உகந்தது அல்லாத வாயுக்கள் வெளியேறும். இவ்வாயுக்களினை அவர் சுவாசிப்பதன் காரணமாக அவர் மயக்க நிலைமைக்கு உள்ளாவர். இதனால் அவர் உடனடியாக வெளியேற முடியாத நிலை ஏற்படும்.
8. சாரதிக்கு விபத்தினை தொடர்ந்து அவருக்கு ஏற்கனவே உள்ள நோய் நிலைமைகளான மாரடைப்பு போன்றன தீவிரமடைந்த நிலையில்

முற்றும்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.