கொரோனா – உயிரிழப்பு ஏன்?

இலங்கையிலும் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில தினங்களில் அதிகரித்த வண்ணம் உள்ளது. பயப்பீதி காரணமாக மக்கள் அதிகளவில் அத்தியாவசிய பொருட்களை வாங்கி பதுக்குகின்றனர். சமூக வலைத்தளங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் போன்றவற்றில் பலரும் கொரோனாவில் இருந்து எவ்வாறு எம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என பதிவுட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனாவினால் எவ்வாறு இறப்பு ஏற்படுகின்றது, அது எவ்வாறு இறப்பினை ஏற்படுத்துகின்றது என்பது பற்றி இந்த பதிவு விளக்குகின்றது.

wp-15841866321156732119278545175137.jpg

 

சாதாரணமாக தடிமலை (Flu) தோற்றுவிக்ககூடிய அண்ணளவாக 600 வகையான கொரோனா வைரசுக்கள் உள்ளன , உலகம் பூராக உள்ள அனைவரும் வாழ்நாளில் தடிமலினால் ஒருதடவையாவது  பாதிக்கப்படுகிறார்கள். பலர் ஆயுட்காலத்தில் நூற்றுக்கணக்கான முறை பாதிக்கப்படுகின்றார்கள், இவ்வாறு பாதிக்கப்படும் பொழுது அதனால்  ஏற்படும் மரணம் மிக மிக குறைவு , 10000 தடவை தடிமல் ஏற்படும் போது எத்தனை பேர் மரணிக்கின்றார்கள் என்பதை ,  10000 பேருக்கு கொரோனா ஏற்படும் போது எத்தனை பேர் மரணிக்கின்றார்கள் என்பதே சர்ச்சசைக்குரிய கேள்வி.

மேலே உள்ள படமானது கோரோனோவினால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவரின் நெஞ்சு பகுதிக்குரிய கதிர்ப்படமாகும். இதிலிருந்து நோயாளியின் நுரையீரல் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதினை நாம் பார்த்து அறிந்து கொள்ளலாம்

wp-15841865674796858912672646381447.jpg

கொரோனா நோயினை உண்டாக்கும் வைரசுவானது நோய் தொற்று உள்ளவரிடம் இருந்து தும்மும் போதும் இருமும் போதும்  வெளியேறும் சிறு திவலைகள் காற்றின் மூலம் மற்றையவரை அடைவதன் காரணமாக பரவுகின்றது. கொரோனா ஆனது மிக்க வீரியமாக பரவும் திறன் கொண்டமையினால், இந்த நோயினால் இறந்தவரின் உடலை நோயியல் உடற்கூராய்வு பரிசோதனைக்கு (pathological autopsy) உட்படுத்தி ஆராய்வதில் பல பிரச்சனைகள் உண்டு. இதன் காரணமாக அவர்களின் உடல்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே (limited autopsy) உடற்கூராய்வு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஆராய்ச்சி முடிவுகள் பெறப்பட்டுள்ளன.

முக்கியமாக இவ்வைரசுக்கள் மனிதனின் நுரையீரலில் நியூமோனியாவினை ஏற்படுத்துகின்றன. இதன் பொழுது எமது சுவாச சிற்றறைகளில் ஆரம்பத்தில் நீர்ப்பாயம் தேங்கும் (pulmonary odema) அதன்பின்னர் இரத்தம் தேங்கும் (diffuse alveolar hemorrhage) அதன் காரணமாக சூழலில் உள்ள ஓட்ஸிசன் ஆனது வினைத்திறன் மிக்க முறையில் எமது இரத்தத்துடன் சேராது. இதன்காரணமாக உடலின் பல்வேறு அங்கங்களில் ஓட்ஸிசன் தட்டுப்பாடு ஏற்பட்டு அவற்றின் தொழில்பாடு குறைவடையும். முக்கியமாக சிறுநீரகம், மூளை, இருதயம் போன்றவற்றின் செயற்பாடுகள் குறைவடையும். இறுதியாக மனிதனுக்கு இறப்பு ஏற்படும். கொரோனா வைரசுவின் வீரியம் மிக அதிகமாகும் ஒரு நாளிலேயே நோயாளியின் இரு நுரையீரலும் கடுமையான நியூமோனியா தாக்கத்திற்கு உள்ளாகும். lung-pathology-n

இவ்வாறு ஏற்படும் கொரோணவிற்கு மருத்துவ சிகிச்சை இல்லையா? கொரோனா வைரஸ் எனப்படுகின்ற covid-19 தொற்றானது குணப்படுத்தக்கூடிய ஒரு நோயாகவே அறியப்படுகிறது. பெரும்பாலான நோயாளிகள் எதுவிதமான விசேட சிகிச்சை எதுவும் இன்றி குணமடைந்தாலும் சில நோயாளிகளுக்கு அதிதீவிர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் ஒரு நோயாகும். செயற்கை சுவாச இயந்திரம்(Medical ventilator), டயலைசிஸ் (Hemodialysis) எனப்படும் குருதி சுத்திகரிப்பு, நாளமூடு செலுத்தப்படும் திரவ சிகிச்சை போன்றவை தேவைப்படும். இவற்றைச் செய்வதற்கு போதிய உபகரணங்கள் தேவைப்படும். எமது சுகாதார சேவையால் கையாளக்கூடியளவு நோயாளர்கள் தொற்றுக்குள்ளாகும்போது குணப்படுத்தல் சாத்தியப்படும். அதிகளவான நோயாளர்கள் தொற்றுக்குள்ளாகும்போது மருத்துவ சேவைகள் செயலிழக்கும். அதன்பின் நிலைமை பாரதூரமாக கை மீறிப் போகக்கூடும். அத்துடன் இவ்வாறு கொரோனா நோயாளி ஒருவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறும் பொழுது சிகிச்சை காரணமாக அவர்கள் பல்வேறு சிக்கல்களுக்கு (complications) உள்ளாவர், உதாரணமாக  சில சந்தர்ப்பங்களில் புதிதாக அவர்களுக்கு நுரையீரலில் பக்ரீறியாக்களின் தொற்று ஏற்பட்டு (secondary bacterial infection) இறப்பு ஏற்படலாம்.  இது தவிர நோயாளிகளுக்கு ஏற்கனவே இருக்கும் நோய் நிலைமையானது அதாவது இருதய நோய்கள், சுவாசம் சம்பந்தமான நோய்கள் மற்றும் நீரிழிவு நோய் போன்றன கொரோனா காரணமாக தீவிரமடைந்து இறப்பினை ஏற்படுத்தும் சாத்தியமும் உள்ளது.
முற்றும்

 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.