கொரோனா – மரணத்தின் பின்னர்?

எது நடக்கக்கூடாது என்று பலரின் பிரார்த்தனையாகவும் விருப்பமாகவும் இருந்ததோ, அது நடந்துவிட்டது. ஆம் அதுதான் இலங்கையின் முதலாவது கொரோனா நோயாளியின் மரணம். மருத்துவ உலகில் உள்ள எவருமே இவ்வாறான மரணங்களை விரும்புவதில்லை. இம்மரணத்தினை தொடர்ந்து எதிர்வரும் காலங்களில் கொரோனாவின் கோரமுகத்தினை நாம் பார்க்கலாம்.

New coronavirus cases jump sharply in Europe, with Italy worst hit ...இப்பதிவில் இலங்கையில் கொரோனா நோய் உள்ளது என அல்லது இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட ஒருவர் இறந்து விட்டால் அடுத்து அவரது உடல்  என்ன என்ன செயற்பாட்டு முறைகளுக்கு உள்ளாகும் என விபரிக்கப்படுகின்றது.

  1. கொரோனா நோய் உள்ளது என உறுதிப்படுத்தப்பட்டவர் இறந்தால்

மரண விசாரணையோ, பிரேத பரிசோதனையோ அல்லது உடலை பதனிடல் போன்ற செயற்பாடுகள் எதுவுமே நடைபெறாது. வைத்தியசாலையின் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் இறந்தவரின் உடலினை  நெருங்கிய உறவினர்கள் பார்வையிடலாம் அதன் பின்னர் உடல் சீல் செய்யப்பட்டு 24 மணி நேரத்தினுள் அடக்கம் செய்யப்படும்.உடலானது வீடு கொண்டு செல்ல அனுமதிக்கப்படாது.

  1. கொரோனா நோய் இருக்கலாம் என சந்தேகிப்படுபவர் இறந்தால்

இங்கு கொரோனா நோய் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுபவர் யாரென்றால் இரத்த பரிசோதனை முடிவுகள் மூலம் கொரோனா நோய் இருப்பதனை உறுதிப்படுத்த முன்னர் இறப்பவர்கள் மற்றும் நோயாளியின் குணம் குறிகள் மற்றும் நெஞ்சு கதிர் வீச்சு படங்கள் போன்றன கொரோனா நோய் அவருக்கு இருப்பதனை  உணர்த்தும் நோயாளிகள்

இவர்களுக்கு தேவை ஏற்பட்டால் மரண விசாரணை மேற்கொள்ளப்படும். பொதுவாக பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு அவசியம் எனில் உடலின் வெளிப்புற பரிசோதனை மட்டும் மேற்கொள்ளப்படும். உடலினை பதப்படுத்தல் செயன்முறைகள் எதுவுமே இல்லை. . வைத்தியசாலையின் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் இறந்தவரின் உடலினை  நெருங்கிய உறவினர்கள் பார்வையிடலாம் அதன் பின்னர் உடல் சீல் செய்யப்பட்டு 24 மணி நேரத்தினுள் அடக்கம் செய்யப்படும்.உடலானது வீடு கொண்டு செல்ல அனுமதிக்கப்படாது.

மேற்படி இருவகையில் இறப்பு நடைபெற்றாலும்  இறப்பின் பின்னர்

  1. உடலினை கழுவி சுத்தம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது.
  2. உடலினை புதைக்க அல்லது எரிக்க அனுமதி அளிக்கப்படும்.
  3. புதைப்பதாயின் 6 அடி ஆழமான குழியினுள் புதைக்க வேண்டும், அவ்வாறு செய்யும் பொழுது இறந்தவரின் உடல் உடல் பையினால் சுற்றப்பட்டு சீல் செய்யப்பட்டிருக்கும் மேலும் சில சந்தர்ப்பத்தில் உடல் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியானது சீல் செய்யப்பட்டிருக்கும். புதைக்கப்பட்டிருக்கும் இடம் ஆனது இனம் காணக்கூடிய வகையில் அடையாளப்படுத்தப்படும்
  4. உடல் தகனத்திர்ற்கு போலீசார், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சுகாதார பரிசோதகர் ஆகியோர் மேற்பார்வை செய்வர்

இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில் இறந்தவரின் உடலினை தகனம் செய்யலாம் அல்லது புதைக்கலாம். சில மக்கள் மத ரீதியான நம்பிக்கையின் அடிப்படையில் உடலினை தகனம் செய்ய விருப்பபுவதில்லை. இந்நிலையில் யாரவது வைத்திய அதிகாரிகள் கட்டாயம் தகனம் செய்யவேண்டும் என வற்புறுத்தினால் மேலதிகாரிகளுக்கு பொதுமக்கள் முறையிடலாம்.

இப்பதிவானது சாதாரண பொதுமக்களுக்கு விளங்கும் வகையில்  சுகாதார அமைச்சு வெளியிட்ட சுற்றறிக்கையினை  தழுவி எழுதப்பட்டது. மூலப் பிரதியினை பின்வரும் லிங்க் மூலம் பெற்றுக்கொள்ளலாம்  http://www.epid.gov.lk/web/images/pdf/Circulars/Corona_virus/covid-19-cpg_march-2020-moh-sl.pdf

                                                            முற்றும்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.