அந்த கிராமம் முல்லை மாவட்டத்தின் காடுகளை அண்டிய படியே அமைந்திருக்கும் ஓர் கிராமம். வழமையாக போலீசார் யாருமே பிரச்சனை என்று கிராமத்தினுள் வருவதில்லை. அன்று இரவு 8 மணியிருக்கும் அந்த குடும்பத்தலைவர் வயலில் வேலை முடித்து விட்டு வீடு திரும்பியவேளை, வீதியிலே இனம் தெரியாத ஆயுத தாரியின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி அந்த இடத்திலேயே மரணம் அடைந்தார். அடுத்தநாள் அந்த கிராமம் முழுவதும் ஒரே பரபரப்பு. மக்கள் யார் தான் இந்த கொடூர செயலை செய்தார்கள் என்று தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். தடயவியல் போலீசார், சட்ட வைத்திய நிபுணர், மாஜிஸ்திரேட் ஆகியோர் இது சம்பந்தமான விசாரணைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
புலன் விசாரணையில் இறந்தவர் ஓர் நாட்டுத் தயாரிப்பு துப்பாக்கியினால் சுடப்பட்டே இறந்தமை தெரியவந்தது. மேலும் நடந்த புலனாய்வில் துப்பாக்கியின் குண்டு தயாரிப்பின் பொழுது சக்கையாக (wad) பயன்படுத்தப்பட்ட பேப்பர் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. அது கல்வி வெளியீட்டு திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட ஆண்டு 8 இற்குரிய தமிழ் புத்தகத்தில் இருந்து கிழித்தெடுக்கப்பட்ட ஓர் கடதாசியினால் செய்யப்பட்ட சக்கை ஆகும். அதன் பின்னர் போலீசார் மிக இலகுவாக ஆயுத தாரியினை அடையாளம் கண்டனர். அவர் வேறுயாரும் அல்ல ஒரு சில தினங்களுக்கு முன்னர் இறந்தவருடன் கள்ளு தவறணையில் முரண்பட்ட இறந்தவரின் நண்பரே ஆவார் .

நாட்டுத்துப்பாக்கி மற்றும் Smooth Bore Weapon (SBW)/ Shot Gun போன்றவற்றில் பயன்படுத்தப்படும் துப்பாக்கி ரவையில் இவ்வாறான சக்கைகள் பயன்பயனாடுத்தப்படுகின்றன. நாட்டுத்துப்பாக்கியில் பலரும் இதனை கடதாசி, காட்போட் போன்றவற்றினை பயன்படுத்தி தயாரிப்பர். Shot Gun போன்றவற்றில் பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட சக்கை பயன்படுத்தப்படும். சில சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படும் இந்த சக்கைகள் கூட அடையாளம் காணத்தக்க விதத்தில் காயங்களினை ஏற்படுத்தும்.


மேலே உள்ள படங்களில் வெவேறு வித்தியாசமான வடிவங்களில் உள்ள கடதாசியினால் மற்றும் பிளாஷ்டிக்கினால் செய்யப்பட்ட சக்கைகளை காணலாம்
முற்றும்
