பொதுவாக தற்பொழுது வெய்யிலின் தாக்கம் அதிகமாக நிலவும் காலப்பகுதியில் மக்கள் உற்சாகமாக இருக்கவும் உடலில் நீரினை உரிய அளவில் பேணவும் விரும்பி உண்ணும் பழங்களில் ஒன்று தான் விளிம்பிலி பழம் . இந்தவகை பழங்களை குறித்த நோயாளிகள் அதிகளவில் உண்ணும் பொழுது சிறுநீரக செயலிழப்பிற்கு உள்ளாவதினை இப்பதிவு விளக்குகின்றது.
Averrhoa bilimbi (commonly known as bilimbi, cucumber tree, or tree sorrel) மற்றும் Averrhoa carambola (carambola, star fruit or five-corner) ஆகிய இரண்டு வகையான தாவரங்களும் Oxalidaceae என்ற குடும்பத்தினை சார்ந்த தாவரங்களாகும். இவற்றின் உருவ தோற்றவியல் வேறுபாட்டினை கீழே உள்ள படங்கள் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.


தெற்காசிய நாடுகளில் இந்த பழமானது பல்வேறு பட்ட மருத்துவ தேவைகளுக்காக பாவிக்கப்படுகின்றது அம்மை நோய், குடற்புழு, நாடப்பட்ட தலையிடி போன்ற நோய்களை குணப்படுத்த இந்த பழங்கள் உண்ணப்படுகின்றது. அவ்வாறே இம்மரத்தின் இலையானது தோல் வியாதிகள், பால்வினை நோய்கள், மூட்டு வாதம் போன்றவற்றினை குணப்படுத்த இயற்கை மருத்துவத்தில் பாவிக்கப்டுகின்றது.
இப்பொழுது விடயத்திற்கு வருவோம் இதன் பழங்கள் மற்றும் இலை சாறுகளில் ஒக்ஸ்சாலிக் அசிட் (oxalic acid) என்ற பதார்த்தம் உள்ளது. இது சாதாரண அளவில் நாம் உள்ளெடுக்கும் பொழுது எமது உடலிற்கு பெரும்பாலும் தீங்கினை ஏற்படுத்தாது. ஆனால் அதிக செறிவில் உள்ளெடுக்கும் பொழுது உடலிற்கு தீங்கினை ஏற்படுத்தும். அதிக இலைகளை அல்லது பழங்களை கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸினை அருந்தும் சந்தர்ப்பத்தில் சாதார அல்லது குறைந்த சிறுநீரக தொழிற் பாட்டினை கொண்டவர்களில் ஒக்ஸ்சாலிக் அசிட் ஆனது சடுதியான சிறுநீரக செயலிழப்பினை (Acute oxalate nephropathy) ஏற்படுத்திய பல சந்தர்ப்பங்கள் நிகழ்ந்துள்ளன.
எவ்வாறு நாம் இவற்றினை தடுக்கலாம்?
- சிறுநீரக தொழில்பாடு குறைவாக உள்ள நோயாளிகள் இந்த பழச்சாறு அருந்துவத்தினை தடுப்பதன் மூலம். முக்கியமாக நீரிழிவு நோயாளிகள் அருந்துதல் கூடாது.
- வெறும் வயிற்றில் இதன் பழங்களினை அல்லது பழச்சாறினை அருந்த கூடாது.
- மேலும் எமது உடலில் இருந்து அதிகளவு நீரிழப்பு ஏற்பட்டிருக்கும் வேளையில் நாம் இந்த பழங்களினை அல்லது பழச்சாறினை அருந்த கூடாது.
முற்றும்
