அண்மையில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்றில் துப்பாக்கி ஒன்றினால் இரு இளைஞர்கள் காயம் அடைந்திருந்தனர். அவர்களின் உடலில் இருந்து பெறப்பட்ட சன்னம் ஒன்று முழுமையாக இருந்த நிலையில் மற்றையவரின் உடலில் இருந்து பெறப்பட்ட சன்னம் ஆனது உடைந்த இரும்பு துகள்களாகவே இருந்தது. இதன் காரணமாக போலீசார் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் சந்தேகம் நிலவியது அதாவது எவ்வாறு குறித்த வேறுபாடு இடம் பெற்றது என்பது பற்றியே இவ்வாறு சந்தேகம் நிலவியது. எவ்வாறு இது சாத்தியமானது என்பது பற்றி இப்பதிவு விளக்குகின்றது


பலருக்கு இராணுவத்தில் பயன்படும் துப்பாக்கி ரவைகளில் உள்ள சன்னங்கள் ஜாக்கெட் சட்டை (full metal jacket – FMJ) போட்டிருப்பது பற்றி தெரியாது. இவ்வாறு ஜாக்கெட் போடுவது என்ன என்றால் இரும்பினால் செய்யப்பட்ட துப்பாக்கி சன்னம் ஒன்றினை சுற்றி கடினமான உலோகத்தினால் ஆன அதாவது பொதுவாக செப்பு மற்றும் நிக்கல் கலப்பு உலோகத்தினால் ஆன உலோக உறை ஒன்றினை போடுவதே ஆகும்.
ஏன் இவ்வாறு துப்பாக்கி சன்னம் ஒன்றிற்கு இவ்வாறு ஜாக்கெட் போடவேண்டும்?
1. இவ்வாறு ஜாக்கெட் போடுவதினால் துப்பாக்கி சன்னம் துப்பாக்கியில் இருந்து அதிக வேகத்தில் வெளியேறும் (High Muzzle velocity) இதன் காரணமாக அதிக தூரத்திற்கு இலக்கு வைக்க முடியும்.
2. துப்பாக்கி சன்னத்தினுள் இருக்கும் உலோகம் சடுதியாக விரிவடைந்து துண்டு துண்டுகளாக உடைந்து துப்பாக்கியின் குழலின் உட்புறத்தினை சேதப்படுத்தும். இதன் காரணமாக Gilding metal ஆன ஜாக்கெட் போடப்படுகின்றது. இந்த ஜாக்கெட் ஆனது துப்பாக்கி குழலினுள் பிறப்பிக்கப்படும் அதிக வெப்பத்தினையும் தாங்க கூடியதாக இருக்கும்.
3. இவ்வாறு துப்பாக்கி சன்னத்தினுள் இருக்கும் உலோகம் சடுதியாக விரிவடைந்து துண்டு துண்டுகளாக உடைவதினை இந்த உலோக ஜாக்கெட் ஆனது கட்டுப்படுத்தும். இதன் மூலம் துப்பாக்கி சன்னம் ஆனது தனது இலக்கிற்கு அதிகளவு சேதாரத்தினை ஏற்படுத்தும் (through and through injury). ( சிலர் சிறுசிறு துண்டுகளாக உடைவதே இலக்கிற்கு அதிகளவு சேதாரத்தினை ஏற்படுத்தும் என தவறுதலாக விளங்கிக் கொண்டுள்ளனர்). மேலும் ஆரம்ப காலத்தில் மொட்டையான துப்பாக்கி சன்னமே பாவனையில் இருந்தது. இதன் மூலம் இலக்கிற்கு அதிகளவு சேதாரத்தினை ஏற்படுத்த முடியாது எனவே தான் இவ்வாறு ஜாக்கெட் போடுவதன் மூலம் துப்பாக்கி சன்னம் ஆனது மேலும் கூர்மை ஆக்கப்பட்டது.
4. துப்பாக்கி சன்னத்தினுள் இருக்கும் தரம் குறைந்த உலோகம் நீண்ட காலம் துருப்பிடிக்காமல் இருக்கவும் இந்த உலோக ஜாக்கெட் ஆனது உதவுகின்றது.
5. இவ்வாறு சன்னம் ஒன்றிற்கு ஜாக்கெட் போடுவதினால் அதன்மூலம் அந்த துப்பாக்கி சன்னம் ஆனது கடினமான பொருட்களான உலோகங்கள் மற்றும் மரம் போன்றவற்றினை துளைத்து செல்லும்.
துப்பாக்கி சூடு நடக்கும் பொழுது இந்த ஜாக்கெட் ஆனது ஏன் உடைய வேண்டும்?
1. தரம் குறைந்த உலோகத்தினால் இந்த ஜாக்கெட் செய்யப்பட்டிருக்கும் பொழுது அதிக வெப்பத்தினால் உடையும். பொதுவாக தொடர்ச்சியாக துப்பாக்கியினால் சுடும் பொழுது.
2. துப்பாக்கி குழலினுள் ஒன்றிற்கு மேற்பட்ட சன்னங்கள் சடுதியாக சிக்கும் பொழுது
3. துப்பாக்கி சன்னம் ஆனது மரம் அல்லது உலோகம் ஒன்றில் பட்டு தெறிக்கும் பொழுது அல்லது அவற்றினை ஊடுருவும் பொழுது
ஜாக்கெட் ஆனது உடையும் பொழுது என்ன நடைபெறும்?
துப்பாக்கி சன்னத்தினுள் இருக்கும் தரம் குறைந்த உலோகம் ஆனது சிறுசிறு துண்டுகளாக உடைந்து இலக்கினுள் செல்லும். அனுபவம் குறைந்த விசாரணையாளர்கள் இந்த சிறு உலோக துண்டுகளை பார்த்து அவை கட்டுத்துப்பாக்கியில் அல்லது shot gun இல் இருந்து வந்த துப்பாக்கியின் சன்னம் (pellets) என விளங்கிக் கொள்ள முற்படுவர்.
இந்த ஜாக்கெட் போடப்பட்டுள்ள துப்பாக்கி சன்னங்களில் பல்வேறு வகைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு தேவைகளுக்கு பயன்படுகின்றது. அவற்றில் சில பின்வருமாறு
- FMC (Full Metal Case)
- FMJBT (Full Metal Jacket Boat Tail)
- FMJ FN (Full Metal Jacket Flat Nose)
- FMJTC (Full Metal Jacket Truncated Cone)
- TMJ (Total Metal Jacket)
- FMJE (Full Metal Jacket Enclosed Base)

