அண்மைக்காலமாக இலங்கையினை சேர்ந்த பல பெண்களின் நிர்வாண படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தலங்கள் மற்றும் இணையத்தில் வெளியாகி பலரினையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய சம்பவம் பலரும் அறிந்தமையே. அண்மைக்காலமாக இவ்வாறு சமூக ஊடகங்களில் இவ்வாறு நடைபெறும் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. 2018ம் ஆண்டு 2505 ஆக இருந்த சம்பவங்களின் எண்ணிக்கை 2020ம் ஆண்டு 14500 ஆக பல மடங்கு அதிகரித்துள்ளது. இவற்றில் சம்பந்தப்பட்ட பெண்கள் எவருமே இது பற்றி பொலிஸாரிடமோ அல்லது வேறு தரப்பிடமோ முறையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பல சந்தர்ப்பங்களில் பெண்ணின் சம்மதத்துடன் தானோ இவ்வாறான சம்பவம் நடைபெற்றது எனவும் எண்ண தோன்றுகின்றது. குறித்த பெண்ணின் சம்மதம் இன்றி படங்களையோ வீடியோவினையோ எடுத்தல் ஏற்றுக்கொள்ள முடியாதது. அவ்வாறே ஒருவரின் அனுமதி இன்றி நாம் அவர்களின் படங்களை அல்லது வீடியோக்களை பகிர முடியாது.
பாதிக்கப்பட்ட பெண்கள் இவ்வாறு முறையிடாத காரணத்தினாலும் இவ்வாறான குற்ற செயல்கள் தொடர்ந்து அதிகரிக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண்கள் பல்வேறு காரணங்களினால் முறையிடாது விடுகின்றனர். மேலும் பெண்கள் இவ்வாறான சம்பவம் குறித்து எங்கே, எவ்வாறு முறையிடுவது என்று குறித்து தெரியாத காரணத்தினாலும் முறையிடாது விடுகின்றனர்.

இப்பதிவில் பாதிக்கப்பட்ட பெண் இலங்கையில் எவ்விடங்களில் முறைப்பாட்டினை மேற்கொண்டு தீர்வினை பெறலாம் விளக்கப்படுகின்றது.
- பாதிக்கப்பட்ட பெண் 18 வயதிற்கு மேற்பட்டவர் எனில் அவர் சைபர் கிரைம் டிவிசன் (Cyber Crimes Division – CCD) இல் முறையிடலாம். இப்பிரிவானது கொழும்பில் உள்ள குற்ற புலனாய்வு பிரிவின் தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ளது. (Criminal Investigations Department – CID). அவர்களிடம் நேரிடையாகவோ அல்லது தொலை பேசி இலக்கம் 011 232 6979 ஊடாகவோ முறையிடலாம்.
- பாதிக்கப்பட்ட பெண் 18 வயதிற்கு குறைந்தவர் எனில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தொடர்பு இலக்கமான 1929 மூலம் முறைப்பாட்டினை மேற்கொள்ளலாம்.
- இலங்கையின் இலத்திரனியல் குற்றங்கள் சம்பந்தமான முறைப்பாடுகளை மேற்கொள்ளும் the Sri Lanka Computer Emergency Readiness Team (SLCERT) அவர்களிடம் பின்வரும் தொலைபேசி இலக்கம் மூலம் 011 2 691 692 முறைப்பாடு மேற்கொள்ளலாம்.
- அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் உள்ள பெண்கள் மற்றும் சிறுவர்கள் பிரிவிலும் முறையிடலாம்.
- பிரதேச செயலகத்தில் உள்ள சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் மற்றும் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் போன்றோரிடம் முறையிடலாம் அவர்கள் தகுந்த வழிகாட்டல்களை வழங்குவார்கள்.
- அரச சார்பற்ற நிறுவனமான WIN (Women In Need ) போன்றவற்றின் தொடர்பிலக்கமான 077 5676 555 போன்றவற்றிற்கும் முறையிடலாம்.
- பகுதி ஒன்றினை பார்வையிட தமிழ்ப்பெண்களும் ஆபாசப் படங்களும் (பகுதி 01)
முற்றும்
