கடந்த வாரம் இலங்கை அரசாங்கம் ஆனது வீதிகளில் செல்லும் வாகனங்களில் இருக்கையில் இருப்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் (ஆசன பட்டி) அணிய வேண்டும் என்று வலியுறுத்தி சட்டம் மூலம் ஒன்றை உருவாக்கியுள்ளது அத்துடன் அது மிகவிரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது . ஏற்கனவே சாரதியானவர் இந்த ஆசன பட்டியை அணிய வேண்டும் என்ற சட்டமூலம் இருந்தாலும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சட்டமூலம் நடைமுறைப்படுத்தப்படாத வகையிலேயே இருந்து வருகின்றது அல்லது போலீசாரை கண்டவுடன் அணியும் விதமாகவும் இருந்து வருகின்றது.

சீட் பெல்ட்களின் செயல்திறன் வெறும் தத்துவார்த்தமானது மட்டுமல்ல; பல தசாப்த கால நிஜ உலக தரவுகளால் இது நிரூபிக்கப்படுகின்றது . தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் (NHTSA) மற்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) தரவுகளின் படி, சீட் பெல்ட் அணிவது:
- முன் இருக்கையில் பயணிக்கும் கார் பயணிகளுக்கு ஆபத்தான காயம் ஏற்படும் அபாயத்தை 45% குறைக்கிறது.
- மிதமான முதல் கடுமையான காயம் ஏற்படும் அபாயத்தை 50% குறைக்கிறது.
இந்நிலையில் இந்த பதிவானது ஆசன பட்டி எவ்வாறு விபத்துகளில் பொழுது பிரயாணிகளின் ஏற்படும் காயங்களின் தீவிரத்தன்மையினை குறைக்கின்றது என்பது பற்றி விளக்குகின்றது.
- வாகனம் ஒன்று பிரயாணிக்கும் பொழுது வாகனத்தில் பிரயாணிக்கும் பிரயாணிகள் மற்றும் ஏனைய பொருட்கள் யாவும் வாகனத்தின் வேகத்திலேயே பிரயாணிக்கும். இதனை நியூட்டனின் முதலாவது விதியானது தெளிவாக விளக்குகின்றது. விபத்து நடைபெறும் பொழுது வாகனத்தின் வேகமானது சடுதியாக பூச்சிய நிலைக்கு வருகின்றது. ஆனால் வாகனத்தில் உள்ளிருக்கும் பிரயாணிகளின் வேகமானது சிறிது நேரத்தில் பிற்பாடே பூச்சிய நிலைக்கு வரும். இதன் காரணமாக வாகனத்தில் உள்ளிருக்கும் பிரயாணிகள் வாகனத்தினுள் முன்னோக்கி வீசப்படுவார்கள் அல்லது வாகனத்தில் உள்ளிருக்கும் முன்புற இருக்கைகள் மற்றும் ஏனைய பொருட்களுடன் மோதுவார்கள் இதனால் அவர்களுக்கு காயம் உண்டாகும். இவ்வாறு பிரியாணிகள் முன்னோக்கி அசைவதனை இந்த சீட் பெல்ட் ஆனது முற்றாக தடுக்கின்றது. மேலும் பிரியாணிகளின் அமர்முடுகளிற்கான நேரத்தினை அதிகரித்து அவர்களில் தாக்கும் விசை இணை குறைக்கின்றது.
- விபத்தும் பொழுது ஏற்படும் அமர்வுகள் விசையினை இந்த சீட் பெல்ட் ஆனது பரந்துபட்ட வகையில் உடம்பில் தாக்க அனுமதிக்கின்றது. முக்கியமாக இடுப்பு பகுதியில் போட்டிருக்கும் பெல்ட் ஆனது எமது இடுப்பு குழியில் உள்ள வன்மையான என்புகளின் மீது விசையை பரவச் செய்கின்றது. இதன் காரணமாக ஏற்படும் காயங்கள் மற்றும் காயங்களின் தீவிர தன்மை குறைவாக இருக்கின்றது.
- சீட் பெல்ட் ஆனது பிரயாணிகளினை விபத்தின் பொழுது வாகனத்தின் வெளியே வீசப்படுவதற்கான சந்தர்ப்பத்தை குறைக்கின்றது. முக்கியமாக சீட் பெல்ட்களில் நெஞ்சுக்கு குறுக்கே போட்டு இருக்கும் பெல்ட் ஆனது இந்தப் பணியை சிறப்பாக செய்கின்றது.
- வாகனங்களில் உள்ள பாதுகாப்பு பலூன்களானது தன்னிச்சையாகவே செயல்படும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது எனினும். சீட் பெல்ட் உபயோகிக்கும் பொழுது, சீட் பெல்ட் ஆனது விபத்தின் பொழுது பிரியாணிகளை இருக்கைகளுடன் இறுக்கி வைத்திருப்பதற்கு உதவுகின்றது . இந்நிலையில் பலூன் ஆனது மேலும் வினைத்திறனான வகையில் தொழிற்படுவதற்கு சீட் பெல்ட் உதவுகின்றது.
இலங்கையில் பல வாகனங்களில் போலீசாரிடம் இருந்து தப்புவதற்காக சீட் பெல்ட் என்ற போர்வையில் ஏதாவது ஒன்றினை பொருத்தி இருப்பார்கள் ஆனால் நவீன வாகனங்களில் மேம்பட்ட சீட் பெல்ட் அமைப்புகளுடன் பொருத்தப்பட்டுள்ளன, அவை பயணிகளின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்துகின்றன.
- ப்ரீ-டென்ஷனர்கள் (Pre-tensioners:): விபத்து ஏற்பட்டால், சென்சர்கள் சீட் பெல்ட்டை உடனடியாக இழுக்கும் ஒரு பொறிமுறையைத் தூண்டுகின்றன, எந்தவொரு தளர்வையும் நீக்குகின்றன. இது மோதலின் ஆரம்ப தருணங்களிலிருந்து பயணி தங்கள் இருக்கையில் உறுதியாகப் பிடிக்கப்படுவதை உறுதிசெய்கிறது, மற்றும் அவர்கள் பலூன் (Airbag) தொழில்படுவதற்கு உகந்த நிலையில் இருப்பதை உறுதி செய்கிறது.
- லோட் லிமிட்டர்கள் (Load Limiters): சீட் பெல்ட் ஆனது மார்பில் அதிக சக்தியை செலுத்துவதையும் கடுமையான விபத்தில் காயத்தை ஏற்படுத்துவதையும் தடுக்க இந்த அமைப்பு உதவுகின்றது, ப்ரீ-டென்ஷனர்கள் செயல்படுத்தப்பட்ட பிறகு . இது பயணிகளின் உடலில் ஏற்படும் தாக்கத்தின் உச்ச சக்திகளை உறிஞ்சி பயணிகளில் ஏற்படும் காயத்தின் தீவிர தன்மையினை குறைக்க உதவுகின்றது.
நன்றி
