கடந்த சில தினங்களுக்கு முன்னர் “பப்ஜி” என்ற வீடியோ கேமிற்க்கு அடிமையான ஒருவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டார். இவ்வாறு சில வருடங்களுக்கு முன்னர் கூட இளைஞர் ஒருவன் வீடியோ கேம் ஆன “பப்ஜி” இற்கு அடிமையான நிலையில் தற்கொலை செய்து கொண்டார். . இவ்வாறான சம்பவங்கள் உலகின் பல இடங்களில் முன்னரும் நடைபெற்றுள்ளன. இப்பதிவில் வீடியோ கேம் பாவனையானது அதனை பாவிப்பவர்களிடத்து குறிப்பாக இளைஞரிடத்து எவ்வாறு மரணங்களை, மனரீதியான தாக்கத்தினை, பண இழப்புக்களை ஏற்படுத்துகின்றது பற்றி விளக்குகின்றது.

Player Unknown’s Battle grounds (PUBG) என்பதே தமிழில் “பப்ஜி” என்றழைக்கப்படுகின்றது. இந்த வீடியோ கேமில் பலர் தனியான தீவு ஒன்றில் பாராசூட் மூலம் தரை இறக்கப்படுவார்கள் அவர்கள் அத்தீவில் உள்ள ஆயுதங்களை கைப்பற்றி அங்குள்ளவர்களை கொல்ல வேண்டும். இதற்காக அவர்கள் குறித்த ஆயுதங்கள் போன்றவற்றினை பணம் செலுத்தி கொள்வனவு செய்யவேண்டும் . மேலும் இந்த விளையாட்டிற்கு அடிமையாகியவர்கள் ஒரு நாளின் பெரும்பகுதியை அதில் விளையாடவே செலவு செய்வார்கள் இதன் காரணமாக உணவு, தனி நபர் சுகாதாரம்,கல்வி, தொழில், குடுப்ப உறவுகள் போன்றவற்றில் கவனம் செலுத்த மாட்டார்கள். மேலும் இவர்கள் விளையாட்டின் காரணமாக குறைந்தளவு நேரமே உறங்குவார்கள். இதன் காரணமாக அவர்களுக்கு மன அழுத்தம் மற்றும் மன சோர்வு உண்டாகும். அடுத்து இவ்வாறு கைத்தொலை பேசி அல்லது கணனியில் தொடர்ச்சியாக வீடியோ கேம் விளையாடுபவர்கள் எவ்வாறான சந்தர்ப்பங்களில் இறந்துள்ளார்கள் என பார்ப்போம்.
1. தற்கொலை செய்துகொண்டவர்களில் பெரும்பாலானோர் குறித்த ஒரு காரணத்தினால் தொடர்ச்சியாக குறித்த வீடியோ கேம் இணை விளையாட முடியாத சூழ்நிலையிலேயே தற்கொலை செய்துகொண்டுள்ளனர். உதாரணமாக பெற்றோர், ஆசிரியரின் கண்டிப்பு, இணைய வசதியினை பெற போதிய பணம் இன்மை….
2. தற்கொலை செய்து கொண்டவர்களில் ஒருசிலர் குறித்த வீடியோ கேம் இணை விளையாடியதன் பலனாக ஏற்பட்ட அதீத மனஅழுத்தம் மற்றும் சிலவகை வீடியோ கேமில் தற்கொலை செய்துகொள்ளுமாறு தூண்டப்படும் கட்டளைகள் காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
3. மேலும் சிலர் குறித்த வீடியோ கேமிற்கு அடிமையான நிலையில் தமது தொழிலில் ஒழுங்கான முறையில் ஈடுபட முடியாமையினால் கடன், அதீத வேலைச்சுமை போன்றவற்றினால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
4. மேலும் வீடியோ கேமிற்கு அடிமையான நிலையில் குறைந்த அளவிலான நீரினை நாளாந்தம் உள்ளெடுப்பதினால் அவர்களின் உடலில் கடுமையான நீர் பற்றாக்குறை ஏற்பட்டும் சோடியம் பொட்டாசியம் போன்ற அயன் பற்றாக்குறை ஏற்பட்டும் இறப்பு ஏற்பட்டுள்ளது .
5. ஏற்கனவே மூளையின் இரத்த குழாய்களில் பலவீனமான அமைப்பினை உடையவர்கள்(AV malformation/ aneurysm) வீடியோ கேமிற்கு அடிமையான நிலையில் தொடர்ச்சியாக அவர்கள் கேம் விளையாடும் பொழுது அதிகளவு அதிகரித்த இரத்த அழுத்தம் காரணமாக குறித்த இரத்த குழாய் வெடித்து மூளையில் இரத்த போக்கு ஏற்பட்டு இறப்பு ஏற்படும். இதனையே பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் மூளை நரம்பு வெடித்து இறப்பு ஏற்படுவதாக செய்தி இடுகின்றன.
6. மேலும் சிலர் இவ்வாறு கேம் விளையாடியவண்ணம் வீதியினை கடத்தல், வாகனம் செலுத்துதல், உயரமான கட்டிடங்களின் விளிம்புகளில் நிற்றல் போன்ற செயற்பாடுகளை செய்யும் பொழுது விபத்துக்களை சந்தித்து மரணத்தினை தழுவியுள்ளனர்

வீடியோ கேம் எவ்வாறு மன அழுத்தத்தினை ஏற்படுத்துகின்றது
1. தொடர்ந்து வீடியோ கேம் விளையாடும் பொழுது அவர்கள் நிஜ உலக வாழ்க்கையில் இருந்து விடுபடுகின்றனர். சமூக நடவடிக்கைகளிலிருந்து விலகுதல், தூக்கமின்மை, ஆக்ரோஷமான நடத்தை மற்றும் பதட்டம் ஆகியவற்றிற்கு வழிவகுக்கிறது.
2. PUBG இல் அதிக ஈடுபாடு ஆனது தனிமை உணர்வுகளை மோசமாக்கும், குறிப்பாக அந்த நபருக்கு ஏற்கனவே மனச்சோர்வு அல்லது பதட்டம் போன்ற மனநல பாதிப்புகள் இருந்தால் தனிமை உணர்வு மோசமாகும்.
3. விளையாட்டில் போட்டி மன அழுத்தம் மற்றும் தோல்வி, குடும்பத்தினரின் விமர்சனம் அல்லது கட்டுப்பாடுகளுடன் இணைந்து, கடுமையான உணர்ச்சி துயரத்தையும், அரிதான சந்தர்ப்பங்களில், தற்கொலை நடவடிக்கைகளையும் ஏற்படுத்தும்.
4. விளையாட்டில் ஆக்ரோஷமான மற்றும் வன்முறையான உள்ளடக்கம் போன்றவை சில நபர்களில் உணர்ச்சி உறுதியற்ற தன்மை மற்றும் சுய-தீங்கு போக்குகளை அதிகரிக்கக்கூடும்.
சில தற்கொலை வழக்குகள், தற்கொலைக் குறிப்புகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி, “பப்ஜி” மற்றும் ஏனைய வீடியோ கேம் இற்கு அடிமையாதல் மற்றும் தனிமைப்படுத்தும் தன்மையே அவர்களின் துயரத்திற்கு நேரடிக் காரணம் என்று கூறுகின்றன.
PUBG மற்றும் ஏனைய வீடியோ கேம்களில் பணத்தை இழப்பதற்கான காரணங்கள்
1. குறித்த வீடியோ கேம் விளையாட்டுக்கள் பணம் செலுத்தியே வாங்க வேண்டும் மேலும் குறித்த வீடியோ கேமினை விளையாடும் பொழுது மற்றும் ஆயுதங்கள் மற்றும் ஏனைய பொருட்களுக்கு உண்மையான பணம் தேவைப்படும். சில சந்தர்ப்பங்களில் குறித்த வீடியோ கேமில் வென்றால் பண பரிசு உண்டு இவ்வாறான போட்டி நன்மை அல்லது சமூக அந்தஸ்து மீதான ஆசையால் அதிக செலவு தூண்டப்படுகிறது.
2. பெரும்பாலான வீடியோ கேம்கள் ஒன்லைன் மூலமே விளையாட வேண்டும் இதன் பொழுது பிழையான விலை நிர்ணய மாதிரிகள், குழப்பமான நாணய மாற்று விகிதங்கள் மற்றும் தொகுக்கப்பட்ட விலை நிர்ணயம் பெரும்பாலும் வீரர்களை தேவைக்கு அதிகமாக வாங்கத் தள்ளுகிறது. மேலும் பயன்படுத்தப்படாத நாணயத்தை விட்டுவிடுகிறது அல்லது மீண்டும் மீண்டும் சிறிய கொள்முதல்களைத் தூண்டுகிறது. சில வீரர்கள் – குறிப்பாக இளைஞர்கள் – கட்டாய மற்றும் திட்டமிடப்படாத கொள்முதல்களைச் செய்கிறார்கள்.
3. தொடர்ச்சியாக விளையாடவேண்டும் என்பதற்காக ஐஸ் போன்ற போதை மருந்துகளின் பாவனை மற்றும் இணைய இணைப்பு செலவுகள்
4. விளையாட்டு மூலம் கிடைக்கும் சிறிய வெகுமதிகள், நண்பர்களின் தூண்டல்கள் மற்றும் உளவியல் தூண்டுதல் காரணமாக செலவுகள் அதிகரிக்கின்றன
5. மோசடி மற்றும் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள்: மொபைல் சாதனங்களில் அட்டை அல்லது வங்கி விவரங்களைச் சேமிப்பது தற்செயலான கட்டணங்கள், மோசடி மற்றும் கணக்கு திருட்டு அபாயத்தை அதிகரிக்கிறது.
6. வரையறுக்கப்பட்ட நேர சலுகைகள், கிரெடிட் கார்ட் சலுகைகள் மற்றும் சில நிறுவனங்களின் சலுகைகள் காரணமாக செலவு ஏற்படுகின்றது
நன்றி
