மனிதர்கள் பல சந்தர்ப்பங்களில் மிருகங்களில் இருந்து கூர்ப்படைந்தவர்கள் என்று காலத்திற்கு காலம் நிரூபித்துவிடுவார்கள். அவ்வாறான ஓர் சந்தர்ப்பமே மற்றைய மனிதர்களை வாயினால் கடிப்பதாகும். உதாரணமாக குடும்ப வன்முறைகள், பாலியல் துஸ்பிரயோகம், மதுபோதை மற்றும் போதைப்பொருள் போன்றன பாவித்த பின்னர் நடைபெறுகின்ற தனி நபர் மீதான தாக்குதல் சம்பவங்கள் போன்றவற்றில் இவ்வாறான கடித்தல் சம்பவங்கள் நடைபெறுகின்றன.

இவ்வாறு மனிதர் ஒருவரில் கடிகாயங்கள் காணப்படும் பொழுது சட்ட மருத்துவ ரீதியாக என்ன விடயங்களை செய்யலாம் என்பதை இந்த பதிவு விளக்குகின்றது
1. சில சந்தர்ப்பங்களில் இவ்வாறான கடி காயங்களினால் மூக்கு, உதடு போன்றன பகுதியளவில் துண்டிக்கப்படலாம். இவ்வாறு துண்டிக்கப்படல் என்பது ஓர் பாரிய காயம் ஆகும். அதற்கு ஏற்ற வகையில் நீதிமன்றினால் உரிய தண்டனைகள் வழங்கப்படலாம்.
2. சந்தேக நபர்களினை கைது செய்தல் – ஒவ்வொரு மனிதனுக்கும் வாயில் அமைந்த பற்களின் நிலை தனித்துவமானதாகும் இதன் காரணமாக அவர்கள் பிற மனிதர்களில் அல்லது பொருட்களில் கடிக்கும் பொழுது உருவாகும் கடி காயங்களும் தனித்துவமானதாக இருக்கும் இதன் காரணமாக பாலியல் துஸ்பிரயோகம் சம்பந்தமான குற்ற செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர் இவ்வாறு கைதுசெய்யப்படலாம். மேலும் கடி காயங்களில் காணப்படும் உமிழ் நீரில் இருக்கும் DNA மற்றும் ஏனைய பொருட்கள் மூலம் குற்ற செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர் கைதுசெய்யப்படலாம்
3. மேலும் இவ்வாறு ஏற்படும் கடிகாயங்கள் நீதிமன்றில் தாக்குதல் மேற்கொண்டவர் – பாதிக்கப்பட்டவர் இடையிலான பௌதீகரீதியிலான தொடர்பு இருந்ததினை நிரூபிக்க போதுமானதாக இருக்கின்றது மேலும் நடைபெற்ற குற்ற செயலுக்கான ஆதாரத்திற்கு வலுச்சேர்க்கின்றது (corroborating evidence). உதாரணமாக பாலியல் துஸ்பிரயோகம் சம்பந்தமான வழக்குகளில் மார்பங்களில் காணப்படும் கடிகாயம்
4. சிறுவர் துஸ்பிரயோகம் சம்பந்தமான வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபர்களில் ஒன்றுக்கு மேற்பட்ட வெவ்வேறு நாட்களில் உண்டாக்கப்பட்ட கடி காயங்கள் காணப்படும். கடி காயங்களின் பின்னர் அதில் ஏற்படும் நிறமாற்றத்தினை அவதானித்து கடி காயம் எந்த காலப்பகுதியில் ஏற்பட்டது என கூறமுடியும்
மேலும் இவ்வாறான கடி காயங்கள் ஏற்படும் பொழுது கட்டாயம் மருத்துவ சிகிச்சையினை பெறவேண்டும். வைத்தியர்கள் கடிகாயத்திற்கு
1. காயம் மாறுவதற்காக ஆண்டிபையோட்டிக் மருந்து தருவார்கள் மேலும் கடுமையான வேதனை இருக்கும் பொழுது வலி நிவாரணிகள் தருவார்கள்
2. ஏற்புவலி ஏற்படாமல் இருக்க டொக்சாய்ட் (Tetanus toxoid) ஊசி போடுவார்கள்.
3. மேலும் நீர் வெறுப்பு நோய் ஏற்படாமல் இருக்க (ARV – Anti rabies Vaccine)ஊசி போடுவார்கள்
நன்றி
