எதிர் வரும் வருடத்தில் இருந்து இலங்கையின் கல்வித்திட்டத்தில் பாலியல் கல்வித்திட்டம் என்ற பாடத்தினை சேர்ப்பது சம்பந்தமான விடயம் பேசப்பட்டு வருகின்ற நிலையில் பலர் அவ்விடயத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்து வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்பதிவானது மாணவர்களுக்கு அதுவும் குறிப்பாக பாடசாலை மாணவர்களுக்கு ஏன் “பாலியல் கல்வி” என்பதினை போதிக்க வேண்டும், அதனால் ஏற்படும் நன்மைகள், தீமைகள் என்ன என்பது பற்றி விலாவாரியா விளக்குகின்றது.
1. மாணவர்களுக்கான பாலியல் கல்வி என்றால் என்ன?
விரிவான பாலியல் கல்வி (Comprehensive Sexuality Education – CSE) என்பது மாணவர்களுக்கு பாலியல் மற்றும் அவர்களின் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் பற்றிய துல்லியமான, வயதுக்கு ஏற்ற தகவல்களை வழங்குகிறது (“age‑appropriate sexual education”), இது அவர்களின் ஆரோக்கியம் மற்றும் உயிர்வாழ்விற்கு மிகவும் முக்கியமானது. வயதிற்கு ஏற்ற பாலியல் கல்வி என்பது விரிவான பாலியல் கல்வியின் ஓர் முக்கிய அம்சம் ஆகும்.
2. வயதிற்கு ஏற்ற பாலியல் கல்வி (age‑appropriate sexual education) என்றால் என்ன?
மாணவர்களின் வயது, அவர்களின் உள விருத்தி என்பவற்றினை கருத்தில் கொண்டு அவர்களின் வயதிற்கு ஏற்ற பாலியல் கல்வியினை வழங்குதலே வயதிற்கு ஏற்ற பாலியல் கல்வி என்பதன் முக்கிய குணாம்சம் ஆகும். இலங்கையிலும் இவ்வாறான வயதிற்கு ஏற்ற பாலியல் கல்வியினையே பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது. பலரும் நினைப்பது பாலியல் கல்வி என்றால் காமசூத்ரா என்று உண்மையில் அவ்வாறல்ல.
3. வயதிற்கு ஏற்ற பாலியல் கல்வி பாடத்திட்டத்தில் என்ன என்ன விடயங்கள் அடங்கியிருக்கும்?
பாடத்திட்டமானது வெவ்வேறு வயதினருக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டது. அதாவது அவை குழந்தைப் பருவம், சிறுவர் பருவம் மற்றும் இளமைப் பருவம் ஆகியோருக்குரிய பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்த பல்வேறு தகவல்களை கொண்டிருக்கும். முக்கியமாக குடும்பங்கள் மற்றும் உறவுகள், மரியாதை, சம்மதம் (consent) மற்றும் உடல் சுயாட்சி ( உடற்கூறியல், பருவமடைதல் மற்றும் மாதவிடாய், கருத்தடை மற்றும் கர்ப்பம், HIV உட்பட பாலியல் ரீதியாக பரவும் தொற்றுகள், பாலியல் ரீதியான துஸ்பிரயோகங்களின் வகைகள், பாலியல் துஸ்பிரயோகங்களை எவ்வாறு தவிர்ப்பது போன்ற விடயங்கள் வயதிற்கு ஏற்ற வகையில் உள்ளடங்கியிருக்கும்.
4. ஏன் பாடசாலை மாணவர்களுக்கு இத்தகைய கல்வியை கற்பிக்க தொடங்க வேண்டும்?
வயதிற்கு ஏற்ற பாலியல் கல்வி ஆனது அவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், மரியாதைக்குரிய சமூக மற்றும் பாலியல் உறவுகளை வளர்க்கவும், பொறுப்பான தேர்வுகளை எடுக்கவும், மற்றவர்களின் உரிமைகளைப் புரிந்துகொண்டு பாதுகாக்கவும் மாணவர்களுக்கு உதவுகின்றது.
மேலும் விஞ்ஞான பூர்வ ஆய்வுகள் இவ்வாறு இளமைக்காலத்தில் வழங்கப்படும் பாலியல் கல்வியானது மாணவர்களின் வாழ்நாள் பூராகவும் நல்விளைவுகளை ஏற்படுத்த வல்லது. குறிப்பாக பாலியல் கல்வி காரணமாக அவர்கள் தமது பாலியல் செயற்பாடுகளை காலம் தாமதித்தே தொடங்குகின்றனர் அதனால் அவர்கள் கல்வி மற்றும் ஏனைய கல்விசாரா செயற்பாடுகளில் முன்னிலை வகிக்கின்றனர். மேலும் அவர்கள் பாதுகாப்பான பாலியல் நடத்தைகளில் ஈடுபடுகின்றனர்.
வயதிற்கு ஏற்ற பாலியல் கல்வி மூலம் பருவமடைதல் மற்றும் இளமைப் பருவம் உட்பட, அவர்கள் வளரும்போது ஏற்படும் உடல் மற்றும் உணர்ச்சி மாற்றங்களுக்குத் தயாராகி தம்மை தாமே நிர்வகிக்கின்றனர். எனவே தான் பாலியல் கல்வி பாடலை மாணவ பராயத்தில் இருந்தே தொடங்கப்படுகின்றது. திருமணத்திற்கு முன்பாக அல்ல. திருமணத்திற்கு முன்பாக உளவள ஆற்றுப்படுத்துகையே வழங்கப்படுவது வழமை.
5. எந்த வயதில் பாலியல் கல்வியினை கற்பிக்க தொடங்கலாம்?
UNESCO, UNFPA, UNICEF, UN Women, UNAIDS, UN, WHO போன்ற பல்வேறு நிறுவனங்கள் வயதிற்கு ஏற்ற பாலியல் கல்வியினை மாணவர்களின் 05 வயதில் இருந்து கற்பிக்க சிபாரிசு செய்கின்றன. விரிவான பாலியல் கல்வி என்பது வாழ் நாள் பூராகவும் கற்பிக்க பட வேண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
6. வயதிற்கு ஏற்ற பாலியல் கல்வியினை யாரால் கற்பிக்க முடியும்?
பாடசாலைகளில் தகுந்த ஆசிரியர்களினால் அல்லது வீடுகளில் மாணவர்களின் பெற்றோர்கள்
7. வயதிற்கு ஏற்ற பாலியல் கல்வியினை வழங்காதவிடத்து என்ன தீமையான விளைவுகள் இடம் பெறலாம்?
இன்றைய காலத்தில் மாணவர்கள் சமூக வலைத்தளங்கள், ஏனைய வலைத்தளங்கள் போன்றவற்றினை இலகுவாக அணுகுகின்றனர். இவற்றில் வழங்கப்படும் பிழையான பாலியல் தகவல்கள் மாணவர்களை சென்றடையும் அத்துடன் அவர்கள் அத்தகைய பிழையான தகவல்களை பின்பற்றி தங்களின் வாழ்க்கையினை பிழையான முறையில் கொண்டு செல்வார்கள் இதன் காரணமாக பாலியல் நோய்கள், குடும்ப பிளவுகள், மதுபானம் மற்றும் போதைக்கு அடிமையாதல் போன்றன நிகழும்
8. வயதிற்கு ஏற்ற பாலியல் கல்வியினை பாடசாலை மாணவர்களுக்கு போதிப்பதினால் அவர்கள் பாடசாலை கல்வியினை விட்டு விலகி பாலியல் நடத்தைகளில் ஈடுபடுவார்களா?
விஞ்ஞான ரீதியாக அவ்வாறான சான்றுகள் ஏதுமில்லை. மாறாக இவ்வாறான கல்வி வழங்கப்படாத இடத்து அல்லது பற்றாக்குறையாக உள்ள இடத்து இளவயது கர்ப்பம் தரித்தல், HIV உட்பட்ட பாலியல் நோய்களுக்கு உள்ளாதல், இளவயதில் ஆபத்தான பாலியல் நடத்தைகள், பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளதால் போன்றவற்றிற்க்கு உள்ளாகின்றனர்.
9. இவ்வாறான கற்கை பாலியல் துஸ்பிரயோக நிகழ்வுகளை குறைக்குமா?
நிச்சயமாக பாலியல் துஸ்பிரயோகங்களை குறைக்கும் அத்துடன் பால்நிலைக்கு எதிரான வன்முறைகளையும் குறைக்கும். மேற்குறித்த விடயங்கள் விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.
10. வயதிற்கு ஏற்ற பாலியல் கல்வியின் முக்கிய நோக்கங்களில் ஒன்று மாணவர்களினை காலம் தாழ்த்தி அதாவது பதின்ம வயதுகளின் (21 வயதின் பின்னர்) பின்னர் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட அறிவுரை கூறுவது ஆகும். ஏன்?
மிக இள வயதுகளில் அதாவது பதின்ம வயதுகளில் பாலியல் நடவடிக்கை மற்றும் திருமணங்களில் ஈடுபடுபவர்களிடம் போதிய மன முதிர்ச்சி அற்று இருக்கும் இதன் காரணமாக அவர்களின் திருமண வாழ்வு சிலவருடங்களில் முறிந்து விடுகின்றது அத்துடன் தேவையற்ற கர்ப்பம், ஆபத்தான பாலியல் நடத்தைகள், கருக்கலைப்பு, பாலியல் நோய்கள், பெண் தலைமைத்துவ குடும்பம் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் குடுக்க வேண்டி வருகின்றது. பலர் கேட்கலாம் முந்திய காலங்களில் இளவயது திருமணம் நடைபெற்றது தானே என்று முந்திய காலத்தில் இறுக்கமான சமூக கட்டமைப்பு, கூட்டு குடும்ப அமைப்பு போன்றன நிலவியமையால் பல பிரச்சனைகள் எழவில்லை.
11. வயதிற்கு ஏற்ற பாலியல் கல்வியின் சில உதாரணங்கள் தருக?
வயது 3–5
உடல் பாகங்களின் பெயர்கள் சரியாக சொல்லுங்கள் (மலவாசல் , வாய், மார்பு…. போன்றவை).சில உடல் பகுதிகள் தனிப்பட்டவை என்று கூறுங்கள். தான் விரும்பாத எந்தத் தொடுதலையும் மற்றவர்களால் நடக்கக் அனுமதிக்க கூடாது.குடும்பம், நட்பு, உணர்வுகள் பற்றி பேசுங்கள். ஆண் மற்றும் பெண் வேறுபடலாம் ஆனால் அனைவரும் மதிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்த வேண்டும் .
வயது 5–8
உடல் பாகங்களின் பெயர்கள் மீண்டும் சொல்லுங்கள்; ஆண் மற்றும் பெண் உடல்கள் எப்படி வேறுபடுகின்றன என்று வண்ணமாக விளக்குங்கள். தனிப்பட்ட நடத்தைகள் மற்றும் பொது நடத்தைகள் பற்றி கூறுங்கள்; உதாரணமாக தனிப்பட்ட உடல் தொடுதல் தனிப்பட்ட இடங்களில் செய்ய வேண்டும். நட்பு, அன்பு, கூச்சல் மற்றும் ஆன்லைன் பாதுகாப்பு குறித்த அடிப்படைகளை சொல்லுங்கள்
வயது 8–11
பதின்ம வயது மாற்றங்கள் (மார்பு வளர்ச்சி, மாதவிடாய், பெண் மற்றும் ஆண் மாற்றங்கள்) மற்றும் சுய பராமரிப்பு. கர்ப்பம் எப்படி நிகழ்கிறது என்பதை எளிதில் சொல்லுங்கள்; பெரும்பாலும் கூடுதல் விபரங்கள் தேவையில்லை.உடலை தொடுவதற்கு தேவையான அனுமதி குறித்த விளக்கம், ‘இல்லை’ என்று சொல்லும் உரிமை, பாதுகாப்பற்ற ரகசியங்களை பகிராதீர்கள்.
வயது 12–15
பாலியல் தொடர்புகள், கர்ப்பத் தடுத்தல் மற்றும் தொற்று நோய்கள் குறித்து தெளிவாக கூறுங்கள். காதல், பரிமாற்றங்கள், கிளாமர்ஸ், லிங்க அடையாளங்கள் பற்றி பேசுங்கள். ஆன்லைன் ஆபத்துக்கள் (சேட்சிங், படங்கள் பகிர்தல்) குறித்து அறிவுறுத்துங்கள்.
வயது 15–18
கர்ப்பத் தடுத்தல் முறைகள் மற்றும் சட்ட அறிவுறுத்தல்களை விரிவாக கூறுங்கள். உறவுகளிலும் பாதுகாப்பிலும் பேசுவதற்கான திறன்களை வளர்க்கவும். மதிப்பும் பொறுப்பும், வாழ்வுத் திட்டங்களின் முக்கியத்துவம் பற்றி விளக்குங்கள்.
நன்றி