அவனுக்கு இரண்டரை வயது தான். அவன் சராசரி குழந்தைகளை விட அதிக நிறை உள்ளவன். அவன் குடுகுடு என்று ஓடிவரும் அழகே தனி அழகு தான். அவனது தகப்பன் ஒரு முச்சக்கர வண்டி ஓட்டுநர். தாய் ஓர் ஆசிரியர் அவளுக்கு ஓர் பெண் பிள்ளை அதாவது அவனுக்கு ஓர் தங்கை கிடைத்து இப்ப தான் 2 மாதங்கள் ஆகிறது. அன்று மதியம் பெண் பிள்ளைக்கு பாலூட்டி கொண்டு இருந்தாள். அவன் வீட்டின் முன் விறாந்தயில் தனது விளையாட்டு பொருட்களுடன் விளையாடிக் கொண்டிருந்த தான் . அவனது தகப்பனார் வேலையால் வீடு திரும்பவில்லை. அவனது வீட்டின் முன் பகுதியில் உயர்ந்த இரு பூச்சாடிகள் உண்டு. அவனின் தகப்பனார் அவற்றில் வழமையாக நீர் நிறைத்து சில வளர்ப்பு மீன்களை வளர்த்து வந்தார். பெரும்பாலான நேரங்களில் தகப்பனார் அவனை தூக்கி வைத்து அம்மீன்களை காட்டுவார். அவனும் பார்த்து ரசிப்பான். அவனுக்கு அவற்றினை பார்த்து இரசிப்பதில் கொள்ளை விருப்பம். அன்று இரவு நேரத்தில் விழித்து இருந்ததன் காரணமாக தாய் சிறிது நேரம் அயர்ந்து தூங்கி விட்டாள் . சிறிது நேரத்தில் கண்விழித்து தேடிய பொழுது அவன் விளையாடி கொண்டிருந்த இடத்தில் இல்லை. வெளியே பார்த்த கணம் அவள் திகைத்து விட்டாள். அந்த சீமேந்தினால் செய்யப்பட்டுள்ள பூச்சாடி அவன் மீது விழுந்து இருந்தது. அவனது தலையில் பாரிய காயம் அதிலிருந்து இரத்தம் கொட்டிய படி இருந்தது, அவன் மூச்சு பேச்சு இன்றி நிலத்தில் கிடந்தான்.
அவள் உதவி கோரி கத்தினாள் சிறிது கன நேரத்தில் பலர் கூடினர் அவனை வைத்திய சாலையில் அனுமதித்தனர். தூரதிஸ்ட வசமாக அவன் வெளிநோயாளர் பிரிவில் இறந்து இருந்தான்.
(மேலுள்ள படத்தில் சிதறிய நிலையில் வீழ்ந்து கிடக்கும் மலர் சாடியினை கவனிக்கவும்)
இங்கு அவனின் மேல் விழுந்த சாடி 3 அடி உயரத்தில் சிமேந்தினால் ஆனது அத்துடன் கிட்டத்தட்ட 24 kg நிறை உடையது. இங்கு சாடியின் அடியானது மெல்லிய தண்டு (stem) மூலம் மேற்பகுதியில் உள்ள சாடியுடன் இணைக்க பட்டிருந்தது மேலும் இச்சாடியாணது நான்கு பகுதிகள் ஆக இருந்தது. இதனால் அது நிலத்தில் உறுதியாக நிற்காது. மேலும் மேற்புறத்தில் நீர் இருக்கும் போது அது இலகுவில் ஆடி சாடி விழுவதற்கான சாத்தியம் அதிகம் ஆகும். இந்த நிலையில் விளையாடிய குழந்தை அதனை பிடித்து ஆடியதன் காரணமாகவே அது அவன் மீது வீழ்ந்தது.
முக்கியமாக 1 தொடக்கம் 5 வயது வரை உள்ள குழந்தைகள் பல்வேறுபடட உயிர் ஆபத்துக்களை விளைவிக்கும் விபத்துக்களை நாம் சாதாரணமாக வசிக்கும் வீட்டில் சந்திக்கும் சாத்தியம் உள்ளது. இது சம்பந்தமாக இப்பதிவு உள்ளது.
மேற்குறிபபிட்ட வயதுடைய குழந்தைகள் மிக துடிப்பு மிக்க வர்கள் இவர்கள் இவ்வாறு பொருட்களை இழுத்து பார்ப்பது வழமை . இதன் பொழுது இவ்வாறன அவர்களின் உடல் மீது வீழ்ந்து சாதாரண உயிர் ஆபத்து அற்ற காயங்கள் முதல் உயிர் ஆபத்து மிக்க காயங்களையும் அநியாய மரணங்களையும் ஏற்படுத்தும். மேலும் இவ்வகை வயதுடைய சிறுவர்கள் வீட்டின் உயரமான இடங்களுக்கு ஏறி அதிலிருந்து தவறுதலாக வீழ்தல், மண்ணெண்ணெய் போன்ற எரிபொருட்களை அருந்துதல், முக்கியமாகக் கிராம புறங்களில் மண்ணெண்ணெய் ஆனது பச்சை நிற குளிர்பான போத்தலகளில் உள்ள பொழுதும் சிறுவர்களின் கைக்கு எட்ட கூடிய இடத்தில் உள்ள பொழுதும் இச்சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. மண்ணெண்ணெய்யின் நீல அல்லது ரோஸ் நிறம் கூட ஒருவிதத்தில் சிறுவர்களின் கவனத்தை ஈர்க்கும். மேலும் இவ்வயதுடைய சிறுவர்கள் வீட்டினுள் அமைந்த கிணறு மற்றும் தண்ணீர் தொட்டி போன்றவற்றில் வீழ்ந்தும் மரணமடைந்த சம்பவங்கள் நிறைய உண்டு. இது தவிர சமையலறையில் உயரத்தில் உள்ள அல்லது அடுப்பில் உள்ள நீர் , கறி அல்லது பால் நிறைந்த சூடான பாத்திரங்களை தம் மேல் இழுத்து வீழ்த்தி எரி காயங்களுக்கு உள்ளான குழந்தைகளும் உண்டு. வீட்டில் உள்ள ரோல் பிளக்கில் (Role plug) கைவிட்டு மின்சார தாக்குதலுக்கு உள்ளான குழந்தைகளும் உண்டு. மேலும் வயது வந்தவர்கள் பாவிக்கும் மருந்துகளை தவறுதலாக உண்ட மற்றும் குழந்தைகளுக்கான பாணி மருந்தினை அளவுக்கு அதிகமாக பருகிய குழந்தைகளும் உண்டு.
நாம் வீட்டில் பாவிக்கும் வாகனத்தில் சிக்கிய குழந்தைகளும் உண்டு. இது சம்பந்தமாக இன்னொரு பதிவில் விபரமாக குறிப்பிடுகின்றேன். எனவே முக்கியமாக 1 வயது தொடக்கம் 5 வயது வரை உள்ள வீட்டில் பெற்றோர் குழந்தைகள் தொடர்பில் கவனமாக இருப்பதன் மூலம் அநியாயமான உயிரிழப்புக்களை தடுக்கலாம்.





இவர் வெடித்த குண்டின் சன்னங்கள், இறந்த மனிதர்களை அடையாளம் காண்பதற்கு தேவையான பொருட்கள் போன்ற வற்றை சேகரிப்பர். மனித மனதினை மிகவும் நிலை குலையவைக்கும் இவ்வாறன சம்பவங்களில் ஓர் சட்ட வைத்திய அதிகாரி ஒருவரால் தான் திறமையாக மனம் தளராமல் கடமையாற்ற முடியும். இங்கு சன்னங்கள் (Shrapnel) எனப்படும் பொழுது இரு வகைப்படும். முதலாவது வகை வெடிகுண்டு ஆக்க பயன்பட்ட உலோகம் மற்றும் அதனுள் அமைந்த உலோக குண்டுகள் ஆகும். இரண்டாவது வகை குண்டு கொண்டு வரப்பட்ட கொள்கலன் அல்லது பொருள் போன்றவற்றின் பகுதிகளை குறிக்கும். இவை மிக முக்கியமானவை எனெனில் இவை மூலம் வெடித்த குண்டு எது, அது எவ்வகையான பொருட்களால் செய்யப்பட்டுள்ளது, எதனுள் மறைத்து கொன்டு வரப்பட்டுள்து போன்றவர்றை கண்டுபிடிக்கலாம். மேலும் சட்ட வைத்திய அதிகாரி உடற் கூராய்வு பரிசோதனையின் பொழுது இவற்றினை கவனமாகக் சேகரிப்பார்.
