யாழில் முதியோர் துஸ்பிரயோகம்

அண்மையில் காரைநகர் பிரதேசத்தில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில் இருந்து வயோதிபர் ஒருவர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அவர்களால் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுமதிக்க பட்டார் என்பதை முகநூல் வாயிலாக அறிய முடிந்தது. முதியோர் எனப்படுபவர் யார் என்று பார்ப்போமானால் உலக சுகாதார நிறுவனத்தின் கருத்துப்படி 65வயதினை கடந்தவர்கள் என்று வரைவிலக்கணப் படுத்த படுகின்றனர். எனினும் நாட்டிக்கு நாடு இது வேறுபடலாம். சில நாடுகளில் 60 வயதிற்கு மேற்பட்டோர் முதியராக கருதப்படுவதுண்டு.

1.முதியோர் துஸ்பிரயோகம் என்றால் என்ன?

முதியவர் ஒருவரினை கவனிப்பவரினால் அல்லது அவரின் நம்பிக்கைக்கு உரியவர்களினால் வேண்டும் என்றே செய்யப்படுகின்ற ஓர் நடவடிக்கையினால் அல்லது உரிய செயற்பாடு ஒன்றினை செய்யாது விடுவதன் காரணமாக முதியவர் ஒருவருக்கு தீங்கு அல்லது தீங்கு ஏற்படக்கூடிய ஆபத்து ஏற்படுமாயின் அது முதியோர் துஸ்பிரயோகம் எனப்படும்.

 2. ஏன் முதியோர் துஸ்பிரயோகம் பற்றி நாம் கவலைப்பட அல்லது அக்கறைப்பட வேண்டும்?

 சிறுவர்களை போன்றே முதியவர்களும் மற்றையோரில் தங்கி வாழ்வதன் காரணமாகவும் சில சந்தர்ப்பங்களில் அவர்களால் சுயமாக சிந்தித்து முடிவெடுக்க முடிவெடுக்க முடியாது போவதாலும் அவர்கள் துஸ்பிரயோகத்திர்ற்கு உட்பட கூடிய சாத்தியக்கூறு அதிகம் உள்ளவர்கள். இவ்வாறான பல்வேறு காரணங்களால் முதியோர் துஸ்பிரயோகம் பற்றி அக்கறைப்பட வேண்டியதாயிருக்கின்றது.

3. முதியோர் துஸ்பிரயோகம் மிக அண்மைக்காலத்தில்தான் ஆரம்பித்ததா ?

தமிழ்ச் சமுதாயத்தில் முதியோர் துஸ்பிரயோகம் ஆனது முந்திய காலத்தில் மிக குறைவாகவே இருந்தது. முன்பு இருந்த கூட்டுக்குடும்ப முறை மற்றும் தமிழரின் சமய கலாச்சாரங்களின் இறுக்கம் காரணமாக முந்திய காலத்தில் மிக குறைவாகவே இருந்தது. போரின் பொழுதான இடம் பெயர்வுகள் போரின் பின்னரான காலப்பகுதியில் உள்ள தமிழரின் சமய கலாச்சாரங்களின் தளர்வுகள் முதியோர் துஸ்பிரயோகம் அதிகரிக்க பெரிதும் காரணமாக அமைகின்றன.

4. முதியோர் துஸ்பிரயோகம் எவ்வாறு நடைபெறுகின்றது?

முதியோர் துஸ்பிரயோகமானது பின்வரும் வழிகளில் நடைபெறுகின்றது

  • உடலியல் ரீதியான துன்புறுத்தல்கள் (Physical Abuse)

இதன்பொழுது முதியோருக்கு அடித்தல், நுள்ளுதல் போன்ற உடலை வேதனையாக்கும் செயற்பாடுகள் இடம்பெறும். மேலும் இதனுள் முதியோரின் நடமாட்டத்தினைக் கட்டுப்படுத்தும் முகமாக கட்டிப்போடுதல் போன்றவையும் உள்ளடங்கும்.

  • பாலியல் ரீதியான துஸ்பிரயோகம் (Sexual Abuse or Abusive Sexual Contact)

இலங்கையில் இவ்வகையான துஸ்பிரயோகங்கள் நடப்பது குறைவாகும்.

  • மனரீதியான துஸ்பிரயோகம் (Emotional or Psychological Abuse)

முதியோரினை தகாத வார்த்தைகளை பிரயோகித்து திட்டுவதினால் அவர்களுக்கு உண்டாகும் மனவேதனை, மனப்பயம், மனக்கிலேசம் போன்றவற்றினை இவ்வகையான துஸ்பிரயோகம் உள்ளடக்கின்றது. இலங்கையில் இவ்வகையான துஸ்பிரயோகங்கள் அதிகளவில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

  • கவனிப்பாரற்று விடுத்தல் (Neglect )

எம்மை பெற்று வளர்த்து பெரியவர்களாக்கிய பெற்றோருக்கு உரிய மருத்தவ வசதிகள், தங்குமிட வசதிகள், உணவு, உடை, நீர் … போன்றவற்றினை வேண்டும் என்றே அளிக்காமல் விடுதல். இவ்வகையான துஸ்பிரயோகம் இலங்கையை அதிகளவில் தற்பொழுது நடைபெறுகின்றது. இதன் காரணமாகவே அதிகளவு முதியோர் இல்லங்களும் தோற்றம் பெற்றுள்ளன.

  • நிதி ரீதியான துஸ்பிரயோகம் Financial Abuse or Exploitation)

முதியவர் ஒருவருக்குரிய பணத்தினை அல்லது சொத்தினை முறையற்ற விதத்தில் அல்லது அதிகாரமற்ற விதத்தில் அவரின் பின்னுருத்தாளி செலவு செய்தலினை இது குறிக்கும். பல இடங்களில் முதியவர்களின் ஓய்வூதியம் இவ்வாறு துஸ்பிரயோகம் செய்யப்படுவது வழமை.

5. முதியோர் துஸ்பிரயோக சம்பவங்களை முகநூல் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் பிரசுரிக்கலாமா?

இல்லை . முதியோர் துஸ்பிரயோகம் என்பது முதியோரின் உறவினர் மற்றும் பிள்ளைகளினால் வேண்டும் என்றே செய்யப்படும் ஒரு செயற்பாடு,  இவ்வாறு நடைபெற்றதினை நாம் ஊடகங்களில் பிரசுரித்து அவரின் உறவினர்களுக்கு தர்மசங்கடத்தினை ஏற்படுத்திய பின்பு முதியவரினை நாம்  அவரின் உறவினர்களுக்கு முதியவரினை பராமரிக்கும் படி கையளிக்க முடியாது. பல சந்தர்ப்பங்களில் அது முதியவருக்கு ஆபத்தினை ஏற்படுத்தப்படலாம் மரணம் கூட சம்பவித்த சம்பவங்கள் உண்டு. இவற்றுக்கு மேலதிகமாக முதிவரினை நாம் அவரும் ஓர் மனிதர் என்று கணம் பண்ண வேண்டும். சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் மாதிரியே இவ்வாறான சம்பவங்களினை நாம் கையாள வேண்டும்.

80

2 thoughts on “யாழில் முதியோர் துஸ்பிரயோகம்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.