அண்மைக்கால பகுதியில் சமூக வலைத்தளங்கள் மற்றும் அச்சு ஊடகங்கள் போன்றவற்றில் முக்கிய இடம் பிடித்து இருப்பது உயர் கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் பகிடிவதை சம்பந்தமான செய்திகளே. அவற்றில் பலர் குறிப்பிட்டிருந்த தகவல் யாதெனில் இதுவரை காலமும் பகிடிவதை செயற்பாட்டின் பொழுது இறந்த மாணவர்களின் விபரங்களும் அவர்கள் என்ன காரணத்திற்காக இறந்தார்கள் என்பதுவுமே. பகிடிவதை செயற்பாடுகளின் பொழுது மாணவர்கள் அதீத மனஅழுத்தம் காரணமாகவே தற்கொலை செய்துகொண்டனர். அவர்களுக்கு அடுத்ததாக சிறுநீரக செயலிழப்பு அதிகளவு மாணவர்களுக்கு மரணத்தினை ஏற்படுத்தி இருந்தது. எம்மில் பலருக்கு பகிடிவதை எவ்வாறு சிறுநீரக செயலிழப்பினை ஏற்படுத்தி இறப்பினை ஏற்படுத்தும் என்பது தெரியாது. முக்கியமாக பகிடிவதையில் ஈடுபடும் நபர்களுக்கு கூட அவ்விடயம் தெரியாது அதன் காரணமாகவே அவர்களும் இறப்புக்கு காரணமாக அமைந்துவிடுகின்றனர்.
இப்பதிவில் பகிடிவதை எவ்வாறு சிறுநீரக செயலிழப்பினை ஏற்படுத்தி இறப்பினை ஏற்படுத்தும் என்பது பற்றி விரிவாக பார்ப்போம். பகிடி வதையில் பல்வேறு பட்ட வடிவங்கள் உண்டு. உதாரணமாக பாலியல் (sexual) சார்ந்த பகிடிவதை, உடலியல் (physical) சார்ந்த பகிடி வதை மற்றும் மனம் (psychological) சார்ந்த பகிடிவதை. இவற்றில் உடலியல் சார்ந்த பகிடிவதையின் பொழுதே சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகின்றது.
உடலியல் சார்ந்த பகிடி வதையின் பொழுது மாணவர்கள் அதிக தடவைகள் தோப்புக்கரணம் போடுதல், அதிக தூரம் ஓடுதல் போன்ற செயற்பாடுகளுக்கு உள்ளாவர். இதன் பொழுதே அவர்களுக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகின்றது. இவ்வாறு அவர்கள் அதிகளவு உடலியல் சார்ந்த பகிடிவதைக்கு உட்படும் பொழுது அவர்களின் தசைகள் அழிவடைய ஆரம்பிக்கும். இச்செயற்பாடு மருத்துவரீதியில் Exertional Rhabdomyolysis (ER) என்றழைக்கப்படும். இதன் பொழுது எமது கை மற்றும் கால் போன்றவற்றில் உள்ள தசைகளில் இருந்து பின்வரும் நச்சு பதார்த்தங்கள் creatine kinase (CK), myoglobin எமது இரத்த சுற்றோடடத்தினுள் விடுவிக்கப்படும். இவை சிறுநீரகத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தி சிறுநீரக செயலிழப்பினை ஏற்படுத்தி இறுதியாக இறப்பினை ஏற்படுத்துகின்றது. இப்பதார்த்தங்கள் ஏற்கனவே எமது உடலில் இருந்தாலும் அவை கலங்களினுள் சேமிக்கப்பட்டிருப்பதினால் அது சிறுநீரகத்திற்கு நச்சு தன்மையினை உண்டு பண்ணுவதில்லை

தற்பொழுது எல்லோர் கேள்வி யாதெனில் புதுமுக மாணவர்கள் ஆரோக்கியமாகத் தான் பல்கலைக்கழகம் சென்றார்கள். அவ்வாறு இருக்க எவ்வாறு திடீர் என்று சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகின்றது என்பதே ஆகும். தற்காலத்தில் சகல புதுமுக மாணவர்களும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்பது வேறுவிடயம். பின்வரும் காரணிகள் புதுமுக மாணவர்களில் தசை அழிவினை ஏற்படுத்தி (முக்கியமாக வன்கூட்டு தசை)சிறுநீரக செயலிழப்பினை தூண்டுகின்றன.
1. அதீத வெப்ப நிலையும் ஈரலிப்பும் (high temperatures and humidity)
இலங்கை ஓர் அயன மண்டல நாடாகும் இதன் காரணமாக சராசரி வெப்ப நிலை 27 செல்ஸியஸ் ஆகவும் அதிக ஈரலிப்பு உள்ளதாகவும் உள்ளது. குறிப்பாக பகிடிவதை நடைபெறும் இடம் காற்றோட்டம் குறைந்த இடமாகவே இருக்கும். சிரேஸ்ட மாணவர்கள் சத்தம் வெளியே கேட்காதவாறு யன்னல்களையும் கதவுகளையும் மூடியிருப்பர். இதன் காரணமாக அச்சூழலில் அதிக வெப்பநிலையும் ஈரலிப்பும் நிலவும் இவை சிறுநீரக பாதிப்பினை தூண்டும்
2. குறைந்த நீர்ச்சத்து (poor hydration)
புதுமுக மாணவர்கள் குறிப்பிட்ட காலம் வரை பல்கலைக்கழகத்தில் உள்ள மலசல கூடங்களையும் சிற்றுண்டி சாலையினையும் பாவிக்க அனுமதிக்க படமாட்டார்கள், இதன் காரனமாக புதுமுக மாணவர்கள் குறைந்தளவு நீரே ஓர் நாளில் அருந்துவர். அதாவது சராசரியாக ஒரு மனிதனுக்கு ஓர் நாளில் தேவையான அளவான நீரின் அளவினை விட குறைந்தளவு நீரே அருந்துவர். இதனால் அவர்களின் உடலில் உள்ள நீரின் அளவு குறைவாக இருக்கும். இது எமது உடலில் தசைகள் அழிவடைவதையும், சிறுநீரக செயலிழப்பினை தூண்டும் ஓர் காரணியாகும்
3. அதீத உடல் வேலை (intense physical ?training)
சாதாரணமாக புதுமுக மாணவர்கள் கடினமான உடல் வேலைகளை செய்து பழகி இருக்க மாட்டார்கள், இவ்வாறானவர்களுக்கு சிரேஷ்ட மாணவர்களினால் வழங்கப்படும் உடல் வேலை ஆபத்தானதாகவே முடியும். இங்கு விஞ்ஞான ரீதியில் குறித்த மாணவருக்கு இவ்வளவு வேலை வழங்கினால் மட்டுமே பாதிப்பு வரும் என்று எவ்வித கணிப்பும் இல்லை.
4. தொடர்ச்சியான உடல் வேலை (bout of physical ?training)
சாதாரணமாக தீவிர உடல் வேலை செய்யும் பொழுது எமது உடலில் சேதமடையும் தசைநார்கள் புதுப்பிக்க குறித்த கால அவகாசம் தேவை. ஆனால் புதுமுக மாணவர்கள் ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக உடலியல் ரீதியான பகிடிவதைக்கு உள்ளாவதினால் அவர்களுக்கு தசை அழிவடைந்து சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது.
இவ்வாறன காரணிகள் தான் புதுமுக மாணவர்களில் தசை அழிவடைவதன் மூலம் சிறுநீரக செயலிழப்பினை ஏற்படுத்தி இறுதியில் இறப்பினை ஏற்படுத்துகின்றது.
முற்றும்







இவை மனிதனின் சிறுநீரகத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தி சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாக எமது உடலில் பொட்டாசியம் போன்ற அயன்கள் அதிகரிக்கும். இதன் காரணமாக இருதய துடிப்பின் ரிதத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு சடுதியான இறப்பு ஏற்படும் அத்துடன் இது நேரிடையாகவும் இருதயத்தினை தாக்கும் தன்மை உடையது. மேலும் குருதி அமுக்கத்தினையும் சடுதியாக குறைக்கும் தன்மை உடையது. (Hypokalemic metabolic acidosis, hypotension and acute kidney injury )
















சாதாரணமாக தீ விபத்து ஒன்றில் ஒருவர் தீக்காயங்களுக்கு உட்படாத சந்தர்ப்பத்திலும் இறப்பதற்கு பல்வேறு காரணிகள் பங்களிப்பு செய்கின்றன. அவற்றில் ஒன்றுதான் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வாயுக்களின் தாக்கம் ஆகும். ஓர் கட்டிடம் தீப்பற்றி எரியும் பொழுது அதில் உள்ள பிளாஸ்டிக்கினால், இறப்பரினால் மற்றும் வேறு பல சேதன சேர்வைகளினால் ஆன பொருட்கள் பொருட்கள் பற்றி எரியும் இதன் பொழுது பின்வரும் நச்சு வாயுக்கள் சூழலுக்கு வெளிவிடப்படும் நைட்ரிக் ஒக்சைட், சல்பர் ஒக்சைட், போஸ்யீன், கார்பன் மோனோக்சைட், சயனைட் மற்றும் பல்வேறுபட்ட சேதன சேர்வைகளின் வாயுக்கள்.