உயிரை பறித்த உலக்கை வைத்தியம்

இன்றைய உலகத்தில் பல்வேறு பட்ட மக்கள் பல்வேறுபட்ட வைத்திய முறைகளை மேற்கொள்ளுகின்றனர். எமது நாட்டில் சித்த வைத்தியம், ஆயுர்வேத வைத்தியம், யுனானி மருத்துவம்… போன்ற பல்வேறு பட்ட வைத்தியமுறைகள் தற்பொழுது மக்களால் பின்பற்றபட்டு வருகின்றன. அண்மையில் கூட நண்பர் ஒருவர் முந்தைய காலத்தில் இருந்த முறிவு, நெரிவு வைத்தியம் தற்பொழுது இல்லாமல் போய்விட்டதாக பெரிதும் குறைப்பட்டுக் கொண்டார்.

இனி விடயத்திற்கு வருவோம், அவனுக்கு 25 வயதுதான் ஆனால் அவனது முதுகு சிறுவயதில் இருந்து கூனி (Kyphosis) விட்டது. இதன் காரணமாக அவன் படிப்பினை இடை நடுவில் கைவிட நேர்ந்தது. மற்றைய சிறுவர்களுடன் கூட பெரிதாக சேர்வதில்லை. ஆரம்பத்தில் பெற்றோர் பல வைத்தியர்களை நாடினர் எல்லோருமே சத்திர சிகிச்சை மூலமே குணப்படுத்த முடியும் என தெரிவித்து விட்டனர். அவனுக்கும் பெற்றோருக்கும் சத்திர சிகிச்சை மூலம் குணப்படுத்த பயம் ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது என்று. இதன் காரணமாக அவர்கள் வைத்தியசாலை கிளினிக் செல்வதையே பல வருடங்களுக்கு முன்னர் நிறுத்தி விட்டனர். இந்நிலையில் தான் அவர்களின் உறவினர்கள் மூலம் ஓர் வைத்தியரின் தொடர்பு கிடைத்தது. அவ்வைத்தியர் பாரம்பரிய சிகிச்சை முறைகள் மூலம் பிரபல்யம் வாய்ந்தவர் அத்தோடு பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு சிகிச்சை அளித்தவர் என்ற சிபாரிசுவுடன். அவனும் பெற்றோரும் ஓர் நன்னாளில் அவ்வைத்தியரிடம் சிகிச்சைக்கு சென்றனர். முதலில் அவ்வைத்தியர் ஏன் இவ்வளவு காலமும் தன்னிடம் வரவில்லை என கடிந்து கொண்டார். அதன்பிறகு தனது சிகிச்சை முறைகளை பற்றி விளக்கப்படுத்தினார்.
அதன் பின்னர் அவனை தனது சிகிசசை அறைக்கு அழைத்து சென்று மரத்தினால் ஆன கட்டிலில் முகம் குப்பற படுக்க வைத்தார். அதன் பின்னர் பலவகை தைலங்கள் தடவினார்கள். பின்னர் அவ்வைத்தியரும் அவரது உதவியாளரும் சேர்ந்து உலக்கையினை எடுத்து அவனது முதுகில் வைத்து பலமாக அழுத்தினார்கள். அவன் வேதனையில் துடித்தான். வைத்தியர் அவனுக்கு பல பகிடிகள் கூறியவண்ணம் மீண்டும் அழுத்தினார். அவன் வேதனையில் பலமாக கத்திய படி மயங்கி விட்டான். வைத்தியர் பதறியபடி அவனது முகத்தில் நீரினை ஊற்றினார். எதுவித சலனமும் இல்லை. பெற்றோர் பதறியபடி அவசர சேவை அம்புலன்ஸினை அழைத்தனர். அவர்கள் வந்தனர். அவர்கள் அவனை பரிசோதித்து விட்டு அவன் இறந்து விட்டதாக கூறினர்.

Image result for kyphosis

இச்சம்பவத்தின் பிறகு போலீசார் அவனது உடலை உடற் கூராய்வு பரிசோதனைக்காக கொண்டு வந்தனர். உடற் கூராய்வின் பொழுது அவ்வைத்தியர் அதிகமாக அழுத்தியதன் காரணமாக அவனது முதுகு எலும்பு விலத்தி அதன் அருகில் உள்ள தொகுதி பெரு நாடியினை (Aorta) காயப்படுத்தியதன் காரணமாக அவனது இரண்டு லிட்டர்க்கும் அதிகமான இரத்தம் வெளியேறி வயிற்று குழியினுள் வந்திருந்தமை கண்டறியப்பட்டது.

 

blunt-aortic-injury-1-728

இவ்வாறு உடற்கூற்றியல், உடற் தொழிலியல், நோயியல் போன்றவற்றின் துறைசார் அறிவு இல்லாமல் இவ்வாறான நோய் நிலைமைகளுக்கு சிகிச்சை அளிப்பது நிச்சயம் நோயாளியின் உயிருக்கு ஆபத்தினை விளைவித்து விடும்.

HP PNG
இப்பதிவு மற்றைய வைத்திய முறைகளை பற்றி குறை கூறி ஓர் குறிப்பிட்ட மருத்துவ முறைதான் சிறந்தது அதனைத்தான் மக்கள் பின்பற்ற வேண்டும் என்று கூறவிழையவில்லை . மாறாக விஞ்ஞான ரீதியாக அற்று, பட்டறிவின் மூலம் அதாவது அனுபவத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் வைத்தியம் மூலம் எவ்வாறு மனித உயிருக்கு தீங்கு உண்டாகின்றது என்பது பற்றி விளக்குகின்றது.
முற்றும்

கிழக்கிற்கும் கொரனோ பரவும் ஆபத்து?

நாளுக்கு நாள் உலக நாடுகளில் கொரனோ வைரசுவின் தாக்கத்தினால் பலியாவோர் தொகை அதிகரித்து வருகின்றது அத்தோடு பல புதிய நாடுகளும் இவ்வைரசுவின் தாக்கத்திர்ற்கு உட்பட்டு வருகின்றன. இந்நிலையில் மட்டக்களப்பில் தொழுநோயாளர்களின் சிகிச்சை நிலையமாக அமைந்திருக்கும் மாந்தீவு வைத்தியசாலையிணை கொரனோ வைரஸின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு இலங்கை திருப்புபவர்களையும், பாதிக்கப்பட்ட வேறு வேறு வெளிநாட்டு நபர்களையும் அங்கு  தங்கி சிகிச்சை பெறும் நிலையமாக மாற்ற வேண்டும் என சில  வைத்திய அதிகாரிகள் அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளனர். இச்செயற்பாடானது புத்திஜீவிகள் மத்தியில்  பலத்த சந்தேகங்களினை ஏற்படுத்தியுள்ளது.

Quarantine என்ற ஆங்கில சொற்பதமானது  தொற்று நோய் பரவுவதினை தடுக்கும் முகமாக மக்களின் நடமாட்டத்தினை குறைத்தல் அல்லது மட்டுப்படுத்தல் என தமிழில் பொருள்படும். Quarantine என்பது Quaranta Giorni என்ற இத்தாலிய சொல்லினை அடிப்படையாக கொண்டே உருவாகியது. இதன் கருத்து நாற்பது நாட்கள் என்பதாகும். அதாவது முந்திய காலங்களில் ஓர் கப்பல் இத்தாலியினை அடையுமாயின் அவர்கள் அக்கப்பலில் உள்ளவர்களினை நாற்பது நாட்கள் தடுத்து வைத்த பின்னரே தமது நாட்டுக்குள் உள்நுழைய அனுமதிப்பர். இக்காலப்பகுதியில் அவர்களுக்கு ஏதாவது தொற்று நோய் உள்ளதா என அவதானிப்பர், இருப்பின் அதற்கு சிகிச்சை வழங்குவர். அதன் பின்னரே தமது நாட்டிற்கு அனுமதிப்பர். தமிழில் quarantine என்பதினை தனிமைப்படுத்தப்பட்ட வைத்திய சாலை அல்லது விடுதி என அழைப்பதே சிறப்பானது.

 

quarantineக்கான பட முடிவுகள்

இவ்வாறான ஓர் நிலையில் மாந்தீவில் கொரனோ வைரசுவின் தாக்கத்திற்கு சிகிச்சை அளிக்க முற்படுவது பின்வரும் சந்தேகங்களினை ஏற்படுத்தியுள்ளது

  1. மாந்தீவு வைத்தியசாலை ஆனது ஆங்கிலேயரினால் தொழு நோயாளருக்கு கிசிச்சை அளிப்பதற்கென உருவாக்கப்பட்டது. அது ஓர் ஒதுக்கு புறத்தில், இலகுவில் அடையமுடியாது இடமாக அக்காலத்தில் இருந்தது. இதன் மூலம் தொழு நோயாளர் வெளிஉலகத்தில் உள்ளவர்களுடன் தொடர்புகொள்வது மற்றும் வெளிச்செல்வது தடுக்கப்பட்டது. தொழு நோய் அற்றவர் ஒருவர் தொழு நோய் உள்ளவர்களுடன் நீண்ட காலம் தொடர்பில் இருக்கும் பொழுது தான் அவருக்கு அந்த நோய் ஏற்படுகின்றது. ஆனால் கொரனோ வைரசுவின் தாக்கம் அவ்வாறு அன்று அது மிக இலகுவாக மற்றவருக்கு (highly contagious) பரவி விடுகின்றது. இதன் காரணமாகவே உலக நாடுகள் இந்த வைரசுவினை கண்டு அச்சம் கொள்கின்றன. இந்நிலையில் மாந்தீவு வைத்திய சாலையில் கொரனோ வைரசுவின் தாக்கத்தினை கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பதற்கு தேவையான வைத்தியர்கள், வைத்திய நிபுணர்கள், தாதியர்கள், சிற்றுழியர், ஆய்வுகூட வசதி மற்றும் தொற்று நீக்கும் வசதி போன்றன உரிய வசதிகள்  காணப்படுமா என்றால் நிச்சயம் இல்லை. மேற்குறித்த வசதிகள் செய்யப்பட்டால் கூட   சிறப்பு வைத்தியர்களின் (Virologist, Microbiologist and other specialist) மேற்பார்வை மற்றும் MRI (Medical Research Institute) நிறுவனங்களின் போன்ற ஆய்வுகூட வசதிகள் கொழும்பினை தளமாக கொண்டே கிடைக்கப் பெறுகின்றன. எனவே இவற்றினை பெறுவது பெரும் சவால் நிறைந்ததாகவே இருக்கும். மேலும் கொழும்பில் இருந்து வைத்தியர்கள் வருகை தந்தாலும் அவர்கள் வாராந்தம் ஒருசில நாட்கள் மட்டுமே தங்கி நிற்பர். அவர்களை நம்பி இத்தகைய சவால் மிக்க சிகிச்சையினை ஆரம்பிக்கலாமா?
  1. பொதுவாக இத்தகைய தனிமைப்படுத்தப்பட்ட வைத்தியசாலைகள் அல்லது முகாம்கள் விமான நிலையம் அல்லது துறைமுகம் போன்றவற்றினை அண்டியே அமைக்கப்பட்டிருக்கும். ஏனெனில் உள்நாட்டில் வசிக்கும் மக்களுக்கு தொற்று நோய்கள் பரவுவதினை குறைக்கும் முகமாகவே, இலங்கையிலும் அவ்வாறே அமைக்கப்பட்டுள்ளன. அந்நிலையில் அவற்றினை தவிர்த்து மிக தொலைவில் இருக்கும் மாந்தீவு வைத்திய சாலையினை தெரிவு செய்ததன் நோக்கம் என்ன ?
  2. இவ்வாறு தெரிவு செய்ததன் மூலம் அப்பிரதேச மக்களுக்கும் ஏன் அம்மாகாண மக்களும் கொரனோ வைரசுவின் தாக்கத்திற்கு உள்ளாகும் ஆபத்து அதிகம் ஏன்னெனில் நோய்தொற்றடைந்தவர் கட்டுநாயக்க விமான நிலையம் அல்லது கொழும்பு துறைமுகம் போன்றவற்றில் இருந்து இவ்வைத்திய சாலைக்கு கொண்டுவரப்படுவர். அவ்வாறு கொண்டுவரப்படும் பாதை முழுவதுமே நோய் பரவும் சாத்தியம் உள்ளது.
  3. நோயாளிகளை தரைப் பாதை தவிர்ந்து உலங்கு வானுர்தி மூலம் கொண்டுவருவது சாத்தியப்பாடு குறைவானது. அத்துடன் ஓர் நோயாளி கொரனோ வைரசுவின் தாக்கத்தினால் இறப்பராயின் உடலை என்ன செய்வது? உடலினை உலங்கு வானுர்தி மூலம் கொண்டுசெல்வது சாத்தியம் அற்றது. இறந்த உடல் நிச்சயம் ஆபத்தானது. சட்ட வைத்திய அதிகாரிகளுக்கு இவ்வாறு கொரனோ தொற்றடைந்த அல்லது சந்தேகங்களுக்குரிய மரணங்களுக்கு எவ்விதமான உடற் கூராய்வு பரிசோதனைகளும் செய்ய வேண்டாம் என கண்டிப்பான அறிவுறுத்தல் வேறு விடுக்கப்பட்டுள்ளது
  4. இலங்கையில் ஏற்கனவே இவ்வாறு ஏற்படும் தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவென முல்லேரியாவில் IDH (Infectious Disease Hospital) என்ற வைத்தியசாலை பெரும் வசதிகளுடனும் உரிய வைத்திய நிபுணர்களுடனும் செயற்பட்டு வரும் நிலையில், மாந்தீவு வைத்திய சாலையினை தெரிவு செய்ததன் நோக்கம் என்ன?HP PNG
  5. ஏற்கனவே துறைமுகங்கள் மற்றும் விமனநிலையங்கள் போன்றவற்றில் செய்யப்பட்டு வரும் இத்தகைய வைத்திய சாலைகள் போன்றவற்றின் பங்களிப்பு என்ன ?

இவ்வாறான திடீர் நடவடிக்கையினால் நிச்சயம் பாதிக்கப்படுவது மக்கள் தான். மேலும் இவ்வாறான செயற்பாடுகள் மூலம் வைத்தியர்களின் நம்பிக்கைத்தன்மை கேள்விக்குறியாகின்றது. அவர்கள் மக்களுக்கு உண்மையில் நன்மை செய்ய விழைகின்றனரா? அல்லது மறைமுகமாக தாம் நன்மையடைய முற்படுகின்றனரா? என்ற கேள்விக்கான பதிலே முக்கியமானது ஆகும்.

முற்றும்

சாரதி தப்பி ஓட முடியாமைக்கு காரணம் என்ன?

அண்மையில் வவுனியாவில் ஏற்பட்ட விபத்தினை தொடர்ந்து, விபத்துக்குள்ளான வாகனத்தில் சிக்கியிருந்த சாரதி விஷமிகளால் வைக்கப்பட்ட தீயில் கருகி உயிரிழந்தமை யாவரும் அறிந்ததே. சாதாரணமாக பாரிய விபத்து சம்பவம் ஒன்றினை தொடர்ந்து விபத்துக்குள்ளான வாகனத்தில் இருந்து சாரதி மற்றும் முன்னிருக்கையில் இருப்பவர் உடனடியாக வாகனத்தினை விட்டு வெளியேறுவது ஓர் கடினமான செயலாகவே இருந்து வருகின்றது. ஏன் இவ்வாறு இருக்கின்றது என்பது பற்றி ஆராய்வதே இப்பதிவின் நோக்கமாகும். ஒவ்வோர் காரணங்களும் பின்வருமாறு
1. வாகனத்தின் முன்பகுதி (dash board) சாரதியின் கால்களினை தாக்கி எலும்பு முறிவு உட்பட பலத்த காயங்களினை விளைவித்திருக்கும் மற்றும் இரு கால்களும் வாகனத்தின் உடைந்த பகுதியில் வசமாக சிக்கி இருக்கும்.

driver injury patternக்கான பட முடிவுகள்

2. நவீன வாகனங்களில் வாகனத்தின் கதவானது விபத்தினை தொடர்ந்து இலகுவில் திறபடாதவாறு அமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக வீதி விபத்துக்களின் பொழுது வாகனங்கள் உருளும் பொழுது, வாகனத்தில் உள்ளிருப்பவர்கள் வெளியே தூக்கி எறியப்படாதவாறு வாகனங்களின் கதவுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுவும் ஓர் வகை பாதுக்காப்பு ஏற்பாடு தான். ஆனால் தீ பரவும் சமயங்களில் பிரயாணிகளுக்கு மற்றும் சாரதிக்கு ஆபத்தானதாக மாறிவிடுகின்றது.
3. சாரதியின் கழுத்து பகுதியில் ஏற்படும் காயம். இது சட்ட மருத்துவத்தில் whip lash injury என அழைக்கப்படும். விபத்துக்களின் பொழுது ஏற்படும் சடுதியான அமர்முடுகல் காரணமாக ஏற்படுகின்றது. இதன் காரணமாக கழுத்து பகுதியின் உள்ள தண்டு வடம் பாதிக்கப்படுவதன் காரணமாக உடனடியாகவே குறித்த நபரின் கை மற்றும் கால் ஆகியன பாரிசாவாத நிலைக்கு உள்ளாவதன் காரணமாக அவர் உடனடியாக வெளியேற முடியாத நிலை ஏற்படும்.

whiplash injuryக்கான பட முடிவுகள்

4. சிறிது நேரம் ஏற்படும் மயக்கமான நிலை (transient loss of consciousness) அதாவது தலையில் பலமான மொட்டை விசை ஒன்று தாக்கும் (blunt force) பொழுது அவருக்கு தலையில் எவ்விதமான காயங்களும் ஏற்படாது ஆனால் சிறிது நேரம் மயக்க நிலையில் இருப்பார். இவ்வாறான நிலை சட்ட மருத்துவத்தில் concussion என்றழைக்கப்படும். இதனால் அவர் உடனடியாக வெளியேற முடியாத நிலை ஏற்படும்.

concussionக்கான பட முடிவுகள்

5. தலைப்பகுதியில் ஏற்படும் பாரதூரமான காயங்களினால் (Severe traumatic brain injury) ஏற்படும் நினைவிழந்த நிலை காரணமாக அவர் உடனடியாக வெளியேற முடியாத நிலை ஏற்படும்.
6. மதுபானம் மற்றும் ஏனைய போதைப்பொருட்களை பாவித்து இருந்தால் அதன் தாக்கம் காரணமாக அவர் உடனடியாக வெளியேற முடியாத நிலை ஏற்படும்.

HP PNG

7. வாகனம் தீப்பற்றி எரியும் பொழுது அதில் இருந்து பல்வேறுபட்ட மனிதனின் சுவாசத்திற்கு உகந்தது அல்லாத வாயுக்கள் வெளியேறும். இவ்வாயுக்களினை அவர் சுவாசிப்பதன் காரணமாக அவர் மயக்க நிலைமைக்கு உள்ளாவர். இதனால் அவர் உடனடியாக வெளியேற முடியாத நிலை ஏற்படும்.
8. சாரதிக்கு விபத்தினை தொடர்ந்து அவருக்கு ஏற்கனவே உள்ள நோய் நிலைமைகளான மாரடைப்பு போன்றன தீவிரமடைந்த நிலையில்

முற்றும்

சாரதி உயிரோடு எரிக்கப்பட்டாரா?கண்டுபிடித்தது எவ்வாறு?

வவுனியாவில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து வெள்ளவத்தை நோக்கி பயணித்த வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதேவேளை வாகனத்திற்குள் சாரதி சிக்கியிருந்த நிலையில், சிலரினால் பஸ்ஸிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது எனவும் இதன் காரணமாக சாரதி இறந்தார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. பொதுவாக இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் விபத்தினை தொடர்ந்து வாகனங்களுக்கு தீ வைக்கும் சம்பவங்கள் கடந்த காலங்களில் நடைபெற்றுள்ளன. இதன் காரணமாகவே சாரதிகள் வாகனத்தினை நிறுத்தாமல் நேரே போலீஸ் நிலையம் சென்று விடுவதும் உண்டு.

HP PNG
இப்பதிவு ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்டு இறந்தாரா? அல்லது இறந்த நிலையில் எரிக்கப்படாரா? என்று எவ்வாறு ஓர் சட்ட வைத்தியர் ஒருவர் உடற் கூராய்வு பரிசோதனையின் பொழுது கண்டுபிடிப்பார் என்பதினை விளக்குகின்றது.
சாதாரணமாக ஒருவர் உயிருடன் இருக்கும் பொழுது அவரது இருதயம் துடித்துக் கொண்டு இருக்கும் மற்றும் நுரையீரல் சுருங்கி விரிவதன் மூலம் காற்றினை உள்ளிழுத்து வெளித்தள்ளிய வண்ணம் இருக்கும். இவ்வாறு வாகனம் ஒன்று எரியும் பொழுது அதில் உள்ள இறப்பரினால் ஆன மற்றும் பிளாஸ்ட்டிக்கினால் ஆன பகுதிகள் எரியும். இதன் பொழுது அவற்றில் இருந்து பல்வேறு பட்ட நச்சுவாயுக்கள் வெளியேறும். இவ்வாயுக்கள் மனிதனுக்கு கடுமையான உடல்நலக்கேட்டினை விளைவிக்க வல்லன. இவ்வாயுக்களில் முக்கியமானது கார்பன் மோனோக்சைட் என்பதாகும். இவ்வாயு நாம் சாதாரணமாக சுவாசிக்கும் ஓட்ஸிசனை விட 200 மடங்கு விரைவாக எமது இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் உடன் இணைந்து கொள்ளும் இதன் காரணமாக ஓட்ஸிசன் காவுதல் தடைப்பட இறப்பு நிகழும்.
எனவேதான் உடற் கூராய்வு பரிசோதனையில் இறந்தவரின் இரத்த மாதிரி பெறப்பட்டு அதில் கார்பன் மோனோக்சைட் மற்றும் ஏனைய வாயுக்கள் இருக்கின்றனவா என பரிசோதிக்கப்படும். அவ்வாறு இருக்கும் பட்ஷத்தில் அவர் தீ பற்றி எரியும் பொழுது உயிருடன் இருந்திருக்கின்றார் என முடிவு செய்யப்படும்.
இறந்த பின்னர் இருதயம் துடிக்காது மற்றும் நுரையீரல் சுருங்கி விரியாது இதன் காரணமாக மேற்குறித்த வாயுக்கள் இரத்தத்துடன் இரசாயன ரீதியில் சேராது இருக்கும்.
உடற் கூராய்வு பரிசோதனையின் பொழுது கார்பன் மோனோக்சைட்டு வாயு சேர்வதினால் இறந்த ஒருவரின் உடலின் தோல் மற்றும் அங்கங்கள் சிவப்பு நிறத்தில் மாறி இருக்கும். இதன் மூலம் குறித்த நபர் உயிருடன் இருந்தார் என்பது உறுதிப்படுத்தப்படும். இவை தவிர இறந்தவரின் தொண்டை பகுதியில் அவர் சுவாசம் மேற்கொண்டதன் காரணமாக கரி போன்றன படிந்திருக்கின்றனவா எனவும் பரிசோதிக்கப்படும்.

carbon monoxide poisoning color of skinக்கான பட முடிவுகள்

soot in larynx autopsy casesக்கான பட முடிவுகள்

மேலுள்ள படம் ஆனது ஒருவர் உயிருடன் எரிந்த பொழுது அவர் சுவாசித்ததன் காரணமாக கரியானது எவ்வாறு அவரின் சுவாச தொகுதியில் படிந்திருப்பதினை விளக்குகின்றது.

மேற்குறித்த செயற்பாடுகள் மூலம் ஒருவர் தீப்பற்றி எரியும் பொழுது உயிருடன் இருந்தாரா அல்லது இறந்த நிலையில் எரிக்கப்பட்டாரா என்பதினை இலகுவாக கண்டு பிடிக்கலாம்.

முற்றும்

அதிக கட்டணம் அறவிடும் வைத்தியர்கள் ???

அண்மையில் ஒருவர் தனது குழந்தையை காச்சல் காரணமாக ஓர் பிரபல தனியார் வைத்தியாலையில் அனுமதித்தார். சிகிச்சை முடிந்து வெளியேறும் பொழுது வழங்கப்பட்டிருந்த கட்டண சிட்டையில் அங்கு வைத்தியர்களுக்காக அதிக கட்டணம் அறவிடப்பட்டதக குறைப்பட்டுக் கொண்டார்.

வைத்தியர்கள், வழக்கு அறிஞர்கள், பொறியியலாளர்கள், பல்கலைகழக ஆசிரியர்கள்… போன்ற குறித்த துறையில் நிபுணத்துவம் மிக்கவர்கள் தங்களின் சேவைக்காக அறவிடும் கட்டணமே தொழில்வாண்மை கட்டணம் (professional fee) ஆகும்.
நிபுணத்துவம் மிக்கவர்கள் எனப்படும் பொழுது குறித்த நபர் கலை, விஞ்ஞான துறைகளில் அல்லது வேறு ஏதாவது ஓர் துறையில் நாளாந்தம் தொழிலினை மேற்கோள்பவராகவும் அதில் அதில் பரந்துபட்ட திறமையான அறிவுடையவரகவும் இருப்பார்.
நிபுணர்கள் கட்டாயம் வைத்தியர்களாகவோ, பொறியியலாளர் ஆகவோ இருக்கக் வேண்டியதில்லை. அவர்கள் எந்தவொரு துறையில் சிறந்து விளங்கியவராகவும் இருக்கலாம் உதாரணமாக அழகுக்கலை நிபுணராக அல்லது சமையல் கலை நிபுணராக இருக்கலாம். மறுதலையாக தொலில்வான்மை மிக்க தொழில்களை செய்பவர்கள் எல்லோரும் திறமை மிக்கவராக இருக்கமாட்டார்கள். உதாரணமாக பல மோட்டார் சைக்கிள் பழுது பார்ப்பவர்கள் இருப்பார்கள், அவர்களின் ஒரு சிலரே சிறப்பு திறமை உடையவராக இருப்பர். அவர்களை நாடி அதிக வாடிக்கையாளர்கள் செல்வார்கள்.
இவ்வாறு தொழில்வாண்மை சேவை வழங்குநர் ஒருவர் சிறப்பு நிபுணராக இருக்கும் இடத்து அவர் தனது சேவைக்காக அதிக கட்டணம் அறவிடுவது வழமையான செயற்பாடே ஆகும். இதில் ஆச்சரியப்படுவதற்கோ அல்லது பொறாமை கொள்வதற்கோ எதுவும் இல்லை.
உதாரணமாக
1. சில பிரபல்ய சட்ட தரணிகள் வழக்குகளில் ஆஜராக்குவதற்கு
2. சில விசேட வைத்திய நிபுணர்களின் சேவையினை பெறுவதற்கு
3. சிறந்த கட்டிட வடிவமைப்பு கலைஞர் ஒருவரின் சேவையினை பெறுவதற்கு
4. ஏன் High profile பாலியல் தொழிலாளி ஒருவரின் சேவையினை பெறுவதற்கு
ஆயிரக்கணக்கில் பணம் செலவழிக்க வேண்டும். இங்கு வழங்கப்படும் சேவையின் தரத்தினை கருத்தில் கொள்ள வேண்டுமே தவிர அது எவ்வளவு நிமிடம் அல்லது நேரம் வழங்கப்பட்டது என கருதுவது தவறானது. அத்துடன் அது ஓர் விஞ்ஞான ரீதியான முறையும் அல்ல. தொழில்வாண்மையாளர் ஒருவர் சிறப்பு நிபுணராக இருக்கும் இடத்து அவர் மற்றையவர்களை விட அதிக கட்டணங்களை அறவிடுவர்.

professional chargeக்கான பட முடிவுகள்

என்னதான் பிரச்னை ?
பொதுவா சில தொழில்வாண்மை சார் அமைப்புக்கள் (professional bodies) தமது உறுப்பினர்கள் அறவிடவேண்டிய ஆகக்குறைந்த கட்டணத்தினை வரையறுத்துள்ளன. ஆனால் அறவிடப்படும் கூடிய கட்டணத்திற்கான சூத்திரத்தினை அறிமுகப்படுத்த வில்லை. அதாவது தொழில்வாண்மை மிக்க ஒருவர் எவ்வாறு தமது கட்டனத்தினை தீர்மானிக்க வேண்டும் என்று அறிவிக்கவில்லை. மேலும் தொழில்வாண்மை மிக்கோர் தமது கட்டனங்கள் தொடர்பாக தமது வாடிக்கையாளருக்கு விளக்கம் எதுவும் கொடுப்பதில்லை. இறுதியில் கட்டணத்தினை கூறும் பொழுதுதான் பிரச்சனை ஆரம்பிக்கின்றது.

முற்றும்

HP PNG

பகிடிவதையினால் உயிரிழந்த மாணவன் – ஏன்?

அண்மைக்கால பகுதியில் சமூக வலைத்தளங்கள் மற்றும் அச்சு ஊடகங்கள் போன்றவற்றில் முக்கிய இடம் பிடித்து இருப்பது உயர் கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் பகிடிவதை சம்பந்தமான செய்திகளே. அவற்றில் பலர் குறிப்பிட்டிருந்த தகவல் யாதெனில் இதுவரை காலமும் பகிடிவதை செயற்பாட்டின் பொழுது இறந்த மாணவர்களின் விபரங்களும் அவர்கள் என்ன காரணத்திற்காக இறந்தார்கள் என்பதுவுமே. பகிடிவதை செயற்பாடுகளின் பொழுது மாணவர்கள் அதீத மனஅழுத்தம் காரணமாகவே தற்கொலை செய்துகொண்டனர். அவர்களுக்கு அடுத்ததாக சிறுநீரக செயலிழப்பு அதிகளவு மாணவர்களுக்கு மரணத்தினை ஏற்படுத்தி இருந்தது. எம்மில் பலருக்கு பகிடிவதை எவ்வாறு சிறுநீரக செயலிழப்பினை ஏற்படுத்தி இறப்பினை ஏற்படுத்தும் என்பது தெரியாது. முக்கியமாக பகிடிவதையில் ஈடுபடும் நபர்களுக்கு கூட அவ்விடயம் தெரியாது அதன் காரணமாகவே அவர்களும் இறப்புக்கு காரணமாக அமைந்துவிடுகின்றனர்.
இப்பதிவில் பகிடிவதை எவ்வாறு சிறுநீரக செயலிழப்பினை ஏற்படுத்தி இறப்பினை ஏற்படுத்தும் என்பது பற்றி விரிவாக பார்ப்போம். பகிடி வதையில் பல்வேறு பட்ட வடிவங்கள் உண்டு. உதாரணமாக பாலியல் (sexual) சார்ந்த பகிடிவதை, உடலியல் (physical) சார்ந்த பகிடி வதை மற்றும் மனம் (psychological) சார்ந்த பகிடிவதை. இவற்றில் உடலியல் சார்ந்த பகிடிவதையின் பொழுதே சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகின்றது.
உடலியல் சார்ந்த பகிடி வதையின் பொழுது மாணவர்கள் அதிக தடவைகள் தோப்புக்கரணம் போடுதல், அதிக தூரம் ஓடுதல் போன்ற செயற்பாடுகளுக்கு உள்ளாவர். இதன் பொழுதே அவர்களுக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகின்றது. இவ்வாறு அவர்கள் அதிகளவு உடலியல் சார்ந்த பகிடிவதைக்கு உட்படும் பொழுது அவர்களின் தசைகள் அழிவடைய ஆரம்பிக்கும். இச்செயற்பாடு மருத்துவரீதியில் Exertional Rhabdomyolysis (ER) என்றழைக்கப்படும். இதன் பொழுது எமது கை மற்றும் கால் போன்றவற்றில் உள்ள தசைகளில் இருந்து பின்வரும் நச்சு பதார்த்தங்கள் creatine kinase (CK),  myoglobin எமது இரத்த சுற்றோடடத்தினுள் விடுவிக்கப்படும். இவை சிறுநீரகத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தி சிறுநீரக செயலிழப்பினை ஏற்படுத்தி இறுதியாக இறப்பினை ஏற்படுத்துகின்றது. இப்பதார்த்தங்கள் ஏற்கனவே எமது உடலில் இருந்தாலும் அவை கலங்களினுள் சேமிக்கப்பட்டிருப்பதினால் அது சிறுநீரகத்திற்கு நச்சு தன்மையினை உண்டு பண்ணுவதில்லை

rhabdomyolysis-1-638
தற்பொழுது எல்லோர் கேள்வி யாதெனில் புதுமுக மாணவர்கள் ஆரோக்கியமாகத் தான் பல்கலைக்கழகம் சென்றார்கள். அவ்வாறு இருக்க எவ்வாறு திடீர் என்று சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகின்றது என்பதே ஆகும். தற்காலத்தில் சகல புதுமுக மாணவர்களும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்பது வேறுவிடயம். பின்வரும் காரணிகள் புதுமுக மாணவர்களில் தசை அழிவினை ஏற்படுத்தி (முக்கியமாக வன்கூட்டு தசை)சிறுநீரக செயலிழப்பினை தூண்டுகின்றன.
1. அதீத வெப்ப நிலையும் ஈரலிப்பும் (high temperatures and humidity)
இலங்கை ஓர் அயன மண்டல நாடாகும் இதன் காரணமாக சராசரி வெப்ப நிலை 27 செல்ஸியஸ் ஆகவும் அதிக ஈரலிப்பு உள்ளதாகவும் உள்ளது. குறிப்பாக பகிடிவதை நடைபெறும் இடம் காற்றோட்டம் குறைந்த இடமாகவே இருக்கும். சிரேஸ்ட மாணவர்கள் சத்தம் வெளியே கேட்காதவாறு யன்னல்களையும் கதவுகளையும் மூடியிருப்பர். இதன் காரணமாக அச்சூழலில் அதிக வெப்பநிலையும் ஈரலிப்பும் நிலவும் இவை சிறுநீரக பாதிப்பினை தூண்டும்
2. குறைந்த நீர்ச்சத்து (poor hydration)
புதுமுக மாணவர்கள் குறிப்பிட்ட காலம் வரை பல்கலைக்கழகத்தில் உள்ள மலசல கூடங்களையும் சிற்றுண்டி சாலையினையும் பாவிக்க அனுமதிக்க படமாட்டார்கள், இதன் காரனமாக புதுமுக மாணவர்கள் குறைந்தளவு நீரே ஓர் நாளில் அருந்துவர். அதாவது சராசரியாக ஒரு மனிதனுக்கு ஓர் நாளில் தேவையான அளவான நீரின் அளவினை விட குறைந்தளவு நீரே அருந்துவர். இதனால் அவர்களின் உடலில் உள்ள நீரின் அளவு குறைவாக இருக்கும். இது எமது உடலில் தசைகள் அழிவடைவதையும், சிறுநீரக செயலிழப்பினை தூண்டும் ஓர் காரணியாகும்
3. அதீத உடல் வேலை (intense physical ?training)
சாதாரணமாக புதுமுக மாணவர்கள் கடினமான உடல் வேலைகளை செய்து பழகி இருக்க மாட்டார்கள், இவ்வாறானவர்களுக்கு சிரேஷ்ட மாணவர்களினால் வழங்கப்படும் உடல் வேலை ஆபத்தானதாகவே முடியும். இங்கு விஞ்ஞான ரீதியில் குறித்த மாணவருக்கு இவ்வளவு வேலை வழங்கினால் மட்டுமே பாதிப்பு வரும் என்று எவ்வித கணிப்பும் இல்லை.
4. தொடர்ச்சியான உடல் வேலை (bout of physical ?training)
சாதாரணமாக தீவிர உடல் வேலை செய்யும் பொழுது எமது உடலில் சேதமடையும் தசைநார்கள் புதுப்பிக்க குறித்த கால அவகாசம் தேவை. ஆனால் புதுமுக மாணவர்கள் ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக உடலியல் ரீதியான பகிடிவதைக்கு உள்ளாவதினால் அவர்களுக்கு தசை அழிவடைந்து சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது.

இவ்வாறன காரணிகள் தான் புதுமுக மாணவர்களில் தசை அழிவடைவதன் மூலம் சிறுநீரக செயலிழப்பினை ஏற்படுத்தி இறுதியில் இறப்பினை ஏற்படுத்துகின்றது.

                                                            முற்றும்

HP PNG

யார் இவர்கள்?

அண்மையில் மாங்குளம் வைத்திய சாலையில் மேற்கொள்ளப்பட்ட கட்டிட வேலைகளின் பொழுது ஒரு சில மனித எலும்பு கூடுகள் மீட்கப்பட்டன. அது தவிர இலங்கையின் பல பகுதிகளில் செய்யப்பட்ட அகழ்வுகளின் மூலம் பல நூற்றுக்கணக்கான மனித எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இன்று மக்களின் முன்னால் உள்ள இது தொடர்பான  பல கேள்விகளில் பிரதானமானதும் முக்கியமானதுமான கேள்வி யாதெனில் இவ்  எலும்பு கூடுகளுக்கு உரியவர்கள் இனம் காணப்படுவார்களா? அதாவது இவ்வாறு எலும்பு கூடாக உள்ளவர்கள் யார்? என்பதே. எவ்வெலும்பு கூடுகளை அடையாளம் காண்பது என்பது சட்ட ரீதியாகவும் மனிதாபிமான ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சாதாரணமாக சட்ட மருத்துவத்தில் இவ்வாறு கிடைக்கப்பெறும் எலும்பு கூடுகள்  இருவிதமான அடையாள படுத்தலுக்கு உட்படுத்த படுகின்றது. அவையாவன

  1. பொதுவான அடையாளம் காணல் (Tentative identification)
  2. தனித்துவமான அடையாளம் காணல் (Specific/positive identification)

பொதுவான அடையாளம் காணல்

பொதுவான அடையாளம் காணலில் கிடைத்த எலும்பு கூடுகளில் இருந்து அவற்றின் மண்டையோடு,தாடை எலும்பு , இடுப்பு வளையம்  மற்றும் ஏனைய எலும்புகளின் உருவ தோற்றமைப்புகளை (Anthropological and morphological measurements) ஆராய்ந்து ஏற்கனவே பட்டியல் படுத்தப்பட்டுள்ள இயல்புகளுடன் ஓப்பிட்டு ஆராய்வதன் (Comparative analysis) மூலம் அவ்வெலும்பு கூட்டிற்கு உரியவரின் பால்(ஆண் /பெண்), வயது, உயரம் மற்றும் இனம் என்பன கண்டறியப்படும். இங்கு இனம் என்பது மனிதனில் உள்ள பின்வரும் உபஇனங்களை கூறிக்கும்

  • Caucasoid (White) race.
  • Negroid (Black) race.
  • Mongoloid (Oriental/ Amerindian) race.

சில சந்தர்ப்பங்களில் கிடைத்த எலும்புக்கூட்டில் அம்மனிதன் வாழ்ந்த பொழுது ஏற்பட்ட எலும்பு முறிவுகள், எலும்பு முறிவுக்கு செய்ய பட்ட சத்திர சிகிச்சையின் பொழுது வைக்க பட்ட உலோக தகடுகல்  மற்றும் ஆணிகளின் விபரங்கள், பற்களுக்கு அளிக்க பட்ட சத்திர சிகிச்சைகளின் விபரங்கள் முக்கியமாக பிடுங்க பட்ட , நாட்டப்பட்ட பற்களின் விபரங்கள் என்பவற்றினை ஓப்பிட்டு நோக்குவதன் மூலம் அவ்வெலும்பு  கூடுகள் யாராக இருக்கலாம் என்ற அனுமானத்திற்கு வரலாம் . ஓரே விதமான சிகிச்சையினை பல மனிதர்களுக்கு அளிக்க படுவதனால் இவ்வாறு அடையாளம் காண்பதுவும் பாரிய சர்ச்சைகளை தோற்றுவிக்கும். மேலும் இங்கு பால், வயது, உயரம் மற்றும் இனம் என்பன சரியாக கணிக்கப்பட்டாலும்  ஒரு குறித்த சமூகத்தில் பல மனிதர்கள் ஒரே வயது, பால்  மற்றும் உயரம் என்பதை கொண்டிருப்பதால், ஒரு மனிதனை தனித்துவமாக அடையாளம் காணமுடியாது. எனவே இவ்வாறு பல மனித எலும்புக்கூடுகள் அல்லது மனித உடல்கள் ஒரே சமயத்தில் மீட்கப்படும் பொழுது நாம் அவற்றிற்குரிய மனிதர்களை அடையாளம் காண தனித்துவமான அடையாளம் காணும் முறைகளை பிரயோகிக்க வேண்டும்.

இவ்வாறு பொதுவான அடையாளம் காணலுக்கு காணாமல் போனவர்கள் என்று கூறப்படுபவர்களின் தரவுகள் (Missing persons data) பெருமளவில் தேவைப்படும். அதாவது இங்கு தரவு என்று குறிப்பிடும் பொழுது அவர்களின் வயது, பால், உயரம், கடைசியாக அணிந்து இருந்த ஆடைகள், ஆபரணங்கள் பற்றிய விபரம், அவர்களுக்கு செய்யப்பட்ட சத்திர சிகிச்சை பற்றிய விபரங்கள், அவர்களுக்கு இருந்த நோய்கள் பற்றிய விபரங்கள் ….போன்ற விபரங்கள் ஆகும். இவ்விபரங்களை கிடைத்த எலும்பு கூடுகளின் விபரங்களுடன் ஓப்பிட்டே பொதுவான அடையாளம் காணப்படும். அதன் பின்னரே தனித்துவமான அடையாளம் காணப்படும்.

625.0.560.320.160.600.053.800.700.160.90 (1)

இலங்கையில் இவ்வாறு காணாமல் போனோரின் தரவுகள் (Anthropological data) எந்த ஒரு நிறுவனத்திடமோ, அராசாங்கத்திடமோ அல்லது பொலிஸாரிடமோ இல்லை என்பது குறிப்பிடத்தக்க விடயம் ஆகும். சில நிறுவனங்களிடம் இருந்தாலும் அது முழுமை பெறாத ஒன்றே.

மேலும் போர் நிறைவடைந்து ஏறத்தாழ 10 வருடங்கள் கழிந்த நிலையில் பல காணாமல் போனோரின் நெருங்கிய உறவினர்கள் தமது சொந்தங்களை தேடியே இறந்து விட்டார்கள் இதனால் இனிவரும் காலங்களில் காணாமல் போனோரின் மிகச்சரியான அடையாளம்காணலுக்குரிய தரவுகளை பெறுவது எட்டா கனியே. மேலும் காணாமல் போனோரின் உறவினர்கள் பயம் காரணமாக சரியான தகவல்களை வெளியிட தயங்குவார்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது

தனித்துவமான அடையாளம் காணல்

மனிதர்களில் தனித்துவமான அடையாளம் காணும் முறைகளாக பின்வரும் முறைகளை FBI, Interpol போன்ற பிரபல்யமான புலனாய்வு நிறுவனங்கள் கருதுகின்றன

  1. கைரேகை மூலம் அடையாளம் காணும் முறை
  2. பற்களின் தனித்துவமான அமைப்பு மூலம் முறை
  3. DNA மூலம் அடையாளம் காணும் முறை

இவற்றில் DNA மூலம் அடையாளம் காணும் முறையே மிகச்சிறந்தது. இவற்றில் இலங்கையில் குறிப்பிட்ட ஒருசில குற்றவாளிகளின் கைரேகை பற்றிய தரவுகளே இலங்கையில் உள்ளன. மற்றைய பற்கள் பற்றிய தரவுகள், DNA தரவுகள் எதுவும் இல்லை. மேலும் இங்கு  காணாமல் போனோரின் உறவுகள் இறந்தமையாலும் மற்றும் வெளிநாடு சென்றமையாலும் உரிய DNA மாதிரிகளை பெறுவதும் கடினமே. ஓட்டு மொத்தத்தில் கிடைக்கப்பெறும் எலும்பு கூடுகளுக்கு பொதுவான மற்றும் தனித்துவமான அடையாளம்காணலை மேற்கொள்வது என்பது கடினமானதே.

                                                                        முற்றும்

HP PNG

உயிரை பறித்த முகநூல் அறிவுரை

இன்றைய காலப்பகுதியில் முகநூல் மூலம் பலரும் பல்வேறுபட்ட சம்பவங்களினை மற்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். பலர் உணர்ச்சி வசப்பட்ட நிலையிலேயே சம்பவத்தின் உண்மைத் தன்மையினை ஆராயாமல் பகிர்ந்து வருகின்றனர். முக்கியமாக ஓர் தகவலை யார் எழுதினார்கள் அவரின் கல்வித்தகமை மற்றும் உண்மைத்தன்மை பற்றி ஆராய்வதில்லை.
அண்மையில் கம்பஹாவில் முகநூலில் வெளிவந்த வைத்திய அறிவுரையை பார்த்த ஒருவர் நீண்ட காலம் வாழ வேண்டும் என்பதற்காக கஜ மடார மரத்தின் இலைகளை ஜுஸ் பண்ணி குடித்த நிலையில் 10 நிமிடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
நாம் இனி எவ்வாறு இறந்தார் என்று அலசுவோம். சிங்களத்தில் கஜ மாடார மரம் என்றைக்கப்படுவதின் தாவரவியல் பெயர் Cleistanthus collinus. இது தமிழில் ஒடுவந்தலை/ஓடுவன் என்று அழைக்கப்படுகிறது. குறிப்பாக இடத்துக்கு இடம் வேறு சில பெயர்களிலும் அழைக்கப்படுகின்றது. இது காலாகாலமாக சிங்கள மக்களினால் மருத்துவ தேவைக்காக பாவிக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகின்றது. இதன் இலைகள் பின்வரும் நஞ்சு பதார்த்தங்கள் காணப்படுகின்றன Diphyllin , Cleistanthin A and B

cleistanthus collinus tamil nameக்கான பட முடிவுகள்

cleistanthus collinus treeக்கான பட முடிவுகள்இவை மனிதனின் சிறுநீரகத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தி சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாக எமது உடலில் பொட்டாசியம் போன்ற அயன்கள் அதிகரிக்கும். இதன் காரணமாக இருதய துடிப்பின் ரிதத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு சடுதியான இறப்பு ஏற்படும் அத்துடன் இது நேரிடையாகவும் இருதயத்தினை தாக்கும் தன்மை உடையது. மேலும் குருதி அமுக்கத்தினையும் சடுதியாக குறைக்கும் தன்மை உடையது. (Hypokalemic metabolic acidosis, hypotension and acute kidney injury )
இன்று எம் முன்னே உள்ள கேள்வி யாதெனில் முன்பு இயற்கை வைத்தியத்தில் பாவித்த இவ்வாறன தாவரங்கள் எவ்வாறு இக்காலத்தில் நஞ்சாக மாறுகின்றது என்பதே. அதற்கு பின்வரும் காரணங்களினை குறிப்பிடலாம்.
1. முற்காலத்தில் தாவரங்களின் இலைகள் சிறு உரல் போன்றவற்றில் இடித்து வெறும் கையினால் பிழிந்தே சாறுகள் பெறப்பட்டன. இதன் காரணமாக மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் அளவினை விட குறைந்த அளவிலேயே அவற்றில் பதார்த்தங்கள் இருக்கும் (sub lethal dose). ஆனால் தற்காலத்தில் நாம் இவ்வாறன செயன்முறைக்கு மின்சாரத்தின் மூலம் இயங்கும் உபகரணங்களையே பாவிக்கின்றோம் இதன் மூலம் இலைகள் நன்றாக அரைக்கப்படுவதினால் . இவ்வாறு பெறப்படும் ஜூஸில் அதிகளவு நஞ்சு பதார்த்தங்கள் இருக்கும் (toxic dose).
2. மேலும் சிலர் நினைப்பார்கள் இலையில் இருந்து பெறப்படும் ஜூ ஸ் இயற்கையானது தானே. எனவே நாம் எவ்வித பிரச்சினையும் இன்றி வேண்டிய அளவில் பாவிக்கலாம் என்று. அக்கருத்து மிக தவறானது. இதன் காரணமாகவே எம் முன்னோர்கள் சித்த வைத்தியம், ஆயுர்வேத வைத்தியம் போன்றவற்றில் பல்வேறு பட்ட மருந்து அளவுகளை உருவாக்கினர். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதே உண்மை யாகும்.
3. வைத்தியர்கள் இயற்கை வைத்தியத்தில் மருந்துகளை பரிந்துரைக்கும் பொழுது கட்டாயம் உணவு கட்டுப்பாடுகள் செய்வார்கள் . அதாவது சில மருந்துகளை உணவுடன் எடுக்க சொல்வார்கள். வேறு சில மருந்துகளை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் என்று சொல்வார்கள். இவ்வாறு சொல்வதன் நோக்கம் குறிப்பிட்ட மருந்துகளின் அகதுறிஞ்சலை கட்டுப்படுத்தல் ஆகும். பொதுவாக மருந்துகள் மற்றும் ஏனைய நஞ்சு பதார்த்தங்கள் வெறும் வயிற்றில் அதாவது உணவுகால்வாயில் வேறு உணவுகள் இல்லாத பொழுது கூடுதலான அளவில் உறிச்சப்படும்.

                                                                               முற்றும்

HP PNG

 

பகிடிவதை ஒழிப்பு சாத்தியமானதா?

யாழ் பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற பாலியல் சார்ந்த பகிடிவதைகள் சம்பந்தமான தகவல்கள் இலத்திரனியல் ஊடகங்களில் வெளிவந்ததினை தொடர்ந்து பெரும்பாலான மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். அவர்களின் கோபக்கனல்களினை முகநூல் பதிவுகளில் அவதானிக்க கூடியதாக இருந்தது. பலரும் பகிடிவதையினை மேற்கொண்ட மாணவர்களினை கீழ்தர மான வார்த்தைகளினால் திட்டி தங்கள் கோபத்தினை அடக்கிக் கொண்டார்கள். இந்நிலையில் பலரும் மறந்துவிட்ட ஓர் விடயம் தான் ஏன் இந்த பகிடிவதையினை இவ்வளவு காலமாக ஒழிக்க முடியாது உள்ளது என்பதே.

stop raggingக்கான பட முடிவுகள்

சம்பவத்துடன் தொடர்புடைய மாணவி தற்கொலை செய்ய முயன்றதன் மூலம் அந்த பிரச்சனைக்கு தீர்வொன்றினை காண விரும்பினார். அதாவது ஒரு விதத்தில் அவர் அந்த பிரச்சனையில் நிரந்தரமாக விடுபட முயன்றார். ஆனால் அவரது அணுகுமுறை ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. அவ்வாறே பகிடிவதை எந்த வடிவில் மேற்கொள்ளப்படடாலும் ஏற்றுக்கொள்ள படமுடியாததே. ஏன் அந்த மாணவி குறித்த மாணவர்களுக்கு எதிராக பல்கலை கழக ரீதியிலும், வெளியில் நீதிமன்றிலும் நடவடிக்கை எடுக்கவில்லை? புதுமுக மாணவிக்கு இவ்வாறு நடவடிக்கை எடுக்கலாம் என தெரியாதா? ஏன் பெற்ற பெற்றோர்களுக்கு கூட தெரிவிக்க முயலவில்லை? மூத்த பல்கலைக்கழக மாணவன் தவிர்ந்த வேறு யாராவது இவ்வேறு செய்திருந்தால் என்ன நடந்திருக்கும்? மேற்குறித்த வினாக்களுக்கு விடை தேடும் இடத்து நிச்சயம் ஏன் பல்கலைக்கழகங்களில் இருந்து பகிடிவத்தையினை ஒழிக்க முடியாது உள்ளது என்ற கேள்விக்கான விடை கிடைக்கும்.
தற்போதைய போட்டியான கல்விச்சூழலில், பெற்றோர்கள் மாணவர்களினை பல்கலைக்கழகம் செய்வதற்கு என்று பெருமளவு பணத்தினையும் நேரத்தினையும் செலவழித்து படிப்பிக்கின்றனர், இதற்காக பெற்றோர் அதிகளவில் கஸ்ட்டப்படுகின்றனரே தவிர மாணவர்கள் சொகுசாக தான் வளருகின்றனர். உயர் தரம் வரை பெற்றோரினாலும் ஆசிரியர்களினாலும் பொத்தி பொத்தி பாதுகாக்கப்பட்டு வளர்ந்த மாணவர்களினால் பல்கலைக்கழகத்தில் தங்களை இவ்வாறான சமூக விரோதிகளிடம் இருந்து பாதுக்காக்க முடியாமல் போகின்றமை மிக்க கவலையானதே.
பெரும்பாலான சந்தர்ப்பத்தில் மாணவர்களுக்கு இவ்வாறான சம்பவங்களை எதிர்த்து எவ்வாறு போராடுவது என்பது கூட தெரியாமல் இருப்பது சமூக விரோதிகளுக்கு வாய்ப்பாக அமைந்து விடுகின்றது. மேலும் பெரும் பான்மையான புதுமுக மாணவர்கள் தங்களின் மீது திணிக்கப்படும் பகிடிவதையினை ஓர் கல்விசார் நடவடிக்கைகளின் அங்கமாகவே நோக்குகின்றனர் என்பது கவலை தரும் விடயம் ஆகும். மேலும் புதுமுக மாணவராக பகிடிவத்தையினை எதிர்க்கும் மாணவர் அடுத்த வருடம் பகிடி வதையினை ஆதரித்து அதிலும் ஈடுபடுவர்.
சிங்கள பிரதேசங்களில் பாடசாலை மாணவர்களுக்கு அவர்களின் பாடசாலைக் கல்வியின் பொழுது “இது எங்கள் நாடு”, “சட்டம் எங்களை பாதுகாக்கவே”, “இது எங்கள் நாட்டின் சட்டம்” போன்ற கருத்துக்கள் ஊட்டப்படுவதினால் அவர்களில் பெரும் பான்மையினர் பல்கலை கழகத்தில் ஏதாவது ஓர் சிறிய பிரச்னை என்றாலும் உடனடியாக பொலிசாரினை நாடுவர். ஆனால் தமிழ் பிரதேசங்களை பொறுத்த மட்டில் நிலைமை வேறு போலீஸ் நிலையம் செல்வதினையே கௌரவ குறைவாக கருதுவோர் பலர். மேலும் பாதிக்கப்பட்ட நபர் பெண் ஒருவர் எனில் சொல்லி தெரியவேண்டியதில்லை. இதன் காரணமாகத்தான் பாலியல் துஸ்பிரயோகங்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் போன்றவற்றினை சட்டங்கள் இருந்தும் முற்று முழுதாக ஒழிக்க முடியாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
மேலும் மாணவர் ஒன்றியங்கள், சில பல்கலைக்கழக ஆசிரியர்கள் மறைமுகமாக பகிடிவதையினை ஆதரிப்பதுவும் அவர்களே அனுசரணை வழங்குவதும் கவலை தரும் விடயங்கள் ஆகும்.
இவ்வாறு பல்வேறு பட்ட காரணங்களினால் பகிடிவதையினை முற்றுமுழுதாக ஒழிக்க முடியாமல் உள்ளது.

                                                                         முற்றும்

உயிர்பலி எடுத்த TAILGATING விபத்து

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பளைப் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த கார் விபத்தின் பொழுது எதிரே வந்த டிப்பர் வாகனத்தினுள் உள்நுழைந்தமையே அதிகளவான உயிர் சேதம் ஏற்பட காரணமாய் அமைந்தது. மேலும் விபத்துக்குள்ளான சிறிய வகையான காரில் உயிர் காக்கும் பலூன் இருக்கவில்லை அத்துடன் காரில் பயணித்த சிறுவர்களும் சீற் பெல்ட் அணிந்திருக்கவில்லை இதனாலும் உயிரிழப்புக்கான சாத்தியம் அதிகரித்தது. இவ்வாறு நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் அல்லது குறைந்த வேகத்தில் பயணித்து கொண்டிருக்கும் உயரம் கூடிய வாகனம் ஒன்றின் பின்/முன் பகுதியில் உயரம் குறைந்த வாகனம் அல்லது மோட்டார் சைக்கிள் ஒன்று மோதுவதினால் ஏற்படும் விபத்து tailgating என்று அழைக்கப்படும். இவ்வகையான விபத்துக்கள் பொதுவாக உயிர் இழப்பினை ஏற்படுத்தி விடுகின்றது. ஏனெனில் இங்கு பின்/முன் புறமாக மோதும் பொழுது உயரம் குறைந்த வாகனத்தில் அல்லது மோட்டார் சைக்கிள் உள்ளவர்களின் தலை, கழுத்து மற்றும் நெஞ்சு பகுதிகளில் அதிகளவு விசை நேரடியாக தாக்குவதினால் உள் அவயவங்களில் ஏற்படும் பாரிய காயங்களே காரணமாகும்.

(இவ்வாறான ஓர் விபத்தில் மரணித்தவரின் காயங்கள் – கோப்பு படங்கள்)

இவ்வகையான விபத்துக்கள் ஏற்படுவதினை தடுக்கும் அல்லது குறைக்கும் முகமாக பின்வரும் பாதுகாப்பு முறைமைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
1. உயரமான வாகனங்களின் பின்புறத்தில் சிறிய உயரம் குறைந்த வாகனங்கள் உள் நுழையாத வாறு இரும்பு கேடர்கள் மற்றும் மர பலகைகள் மூலம் ஓர் தடுப்பு அமைக்கப்பட்டிருக்கும்.wp-15803036192077022428843434983640.jpg
2. வாகனம் இரவில் வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் பொழுது முழு நீளத்திற்கும் ஒளிரும் பட்டி இயங்கு நிலையில் இருக்கும்
3. வாகனம் பழுதடைந்த நிலையில் இரவில் வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் பொழுது பல மீற்றர் தூரத்திலேயே முக்கோண வடிவிலான எச்சரிக்கை குறியீட்டின் இனை வீதியில் நிறுத்தி வைப்பார்கள். இது இரவில் மினுமினுக்கும் தன்மை உடையதால் மற்றைய வாகன சாரதிகள் நிலைமையினை இலகுவாக அடையாளம் கண்டு கொள்வர்.

triangle danger sign vehicle accidentக்கான பட முடிவுகள்

மேலும் இவ்வகையான விபத்துக்கள் வீதிகளில் அசையும் வாகனங்களில் பின்வரும் சந்தர்ப்பங்களில் நடைபெறலாம்
1. ஆகக்குறைந்த தூரத்தினை (safe distance) பேணாது வாகனங்கள் பயணிக்கும் பொழுது. பயணிக்கும் வாகனம் ஒன்று விபத்தில்லாத வகையில் நிறுத்த தேவையான தூரமே safe distance எனப்படும். பின்னே செல்லும் வாகனம் வேகமாக செல்லும் பொழுது அல்லது முன்னே செல்லும் வாகனம் தனது வேகத்தினை திடீரென்று குறைக்கும் பொழுது இவ்வகையான விபத்து ஏற்படலாம் . safe distance தூரமானது வாகனத்தின் வேகம், வாகனத்தின் வகை, பிரேக் தொழில்பாட்டு நிலைமை, றோட்டின் தன்மை என்பவற்றுக்கு ஏற்ப வேறுபடும்
2. மேலும் பனி, மழை போன்ற காலநிலை நிலவும் பிரதேசங்களில் இவ்வகையான விபத்துக்கள் நடைபெறும்.
3. மோட்டோர் சைக்கிள்கள் மற்றும் கண்டெய்னர் போன்ற பாரிய வாகனங்களுக்கு இத்தூரம் ஆனது எதிர்பார்ப்பதினை விட அதிகமாக இருக்கும்.

4. எதிரே வரும் உயரம் குறைந்த வாகனம் வேக கட்டுப்பாட்டினை இழந்து மோதும் பொழுது

மேலும் சிறிய வகையான கார்களில் (பட்ஜெட் கார்) உயிர் காக்கும் பலூன் போன்றவை பல சந்தர்ப்பங்களில் இருப்பதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.                                                                                                                                   முற்றும்

img-be9693bef67365dfebf86bdc61bee4d5-v6407616803344334748.jpg