இலங்கையில் புயலோடு கூடி பெய்யும் வரலாறு காணாத அதிக மழை வீழ்ச்சி காரணமாக அதிகளவான இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது மேலும் பாலங்கள், குளங்கள் என்பன உடைப்பெடுத்திருக்கின்றன. மண் சரிவுகளில், வெள்ள பெருக்கில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கின்றனர் மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். இவ்வாறு அதிக சேதங்கள் வருவதற்காக காரணங்கள் என்ன? ஏன் இவ்வாறு வெள்ளம் கரை புரண்டு ஓடியது? அதற்கான காரணங்கள் என்ன?

1. குறுகிய காலத்தினுள் அதிக மழை வீழ்ச்சி
சாதாரணமாக ஒரு வருடத்தினுள் வருடம் பூராகவும் பெய்ய வேண்டிய மழையின் அளவானது ஒருசில நாட்களில் அதுவும் குறித்த மணித்தியாலங்களினுள் புயல் காரணமாக பெய்திருக்கின்றது. இதன் காரணமாக ஆறுகள், குளங்கள் மற்றும் ஏனைய நீர்நிலைகள் தமது கொள்ளளவினை தாண்டிய நிலையில் நீரினை வெளியேற்றுகின்றன.

2. பருவ மழைவீழ்ச்சி ஏற்கனவே ஆரம்பித்த நிலையில் ஏற்கனவே ஆங்காங்கு பெய்த மலையின் காரணமாக மண் போதிய அளவு நீரினை உறிஞ்சி அதன் கொள்ளவினை அடைந்திருந்தது. மேலும் நில நீரின் மட்டமும் கணிசமான அளவு உயர்த்திருந்தது இதன் காரணமாக மண் அதிகளவு நீரினை உறிஞ்ச முடியாத நிலை உருவாக்கியது.
3. இயற்கையான நீரோட்டங்கள் மனித நடவடிக்கைகளினால் தடைப்பட்டமை. உதாரணமாக கட்டிடங்கள், மதில்கள் போன்றன நீரோட்ட பாதைகளில் அமைக்கப்பட்டமை, நீரோட்ட பாதைகளினை பாரமரிக்க தவறியமை காரணமாக சிறுமரங்கள், செடிகள், கொடிகள் போன்றன வளர்ந்து அதில் பிளாஸ்ட்டிக் கழிவுகள் மற்றும் ஏனைய கழிவுகள் சிக்கி நீரோட்டத்தினை தடைசெய்தமை.
4. வேகமான நகர மயமாக்கம் காரணமாக இயற்கையான நீரினை உறிஞ்சும் மண் சீமெந்தினாலும், தார் இனாலும் நிரப்பப்பட்டு இல்லாமல் செய்யப்பட்டிருக்கின்றது இதன் காரணமாக நீர் தேங்கி நிற்கும் அல்லது வழிந்து ஓடவே செய்யும்.
5. அதிகரித்த நீர் வரத்து காரணமாக குளம், வாவி போன்றவற்றின் வாசல்கள் திறக்கப்பட்டு அதிகளவு நீர் ஒரேடியாக வெளியேற்றப்பட்டமை.
6. இலங்கையின் கரையோர பிரதேசங்கள் அதாவது சமவெளிகள் கடல் மட்டத்தில் இருந்து அதிக உயரத்தில் இல்லை எனவே சாதாரணமாக நீர் இப்பிரதேசத்தில் அதிவேகமாக பாயாது
7. அதிவேக நெடுஞ்சாலைகள் போன்ற கட்டுமானங்களினால் இயற்கையான நீரோட்டம் தடைப்பட்டமை.
8. கட்டுக்கடங்கா நீர்வரத்து காரணமாக குளங்கள் போன்ற நீர்த்தேக்கங்கள் திடீர் என்று உடைப்பெடுத்தமை.
இவ்வாறன காரணங்களினால் அதிகளவு நீர் வெளியேறி அலை போன்று பாய்ந்து அதிக சேதங்களை விளைவித்தல் “உள்நாட்டு சுனாமி” (An “inland tsunami” is a term used to describe a powerful, fast-moving flash flood that behaves similarly to a tsunami, carrying debris and causing widespread destruction) (colloquial term) என்று சில வல்லுனர்களினால் அழைக்கப்படும். இவ்வாறு திடீர் வெள்ளப்பெருக்குகளால் ஏற்படும் சேதாரங்களை கட்டுப்படுத்துவது கடினம் அதற்கு நீண்ட கால திட்டமிடல், சட்ட அமுலாக்கம், பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களின் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு … போன்றன அவசியம். இதனை விட இவற்றினை அமுல்படுத்த நீண்ட கால கொள்கை அவசியம். இலங்கை போன்ற நாடுகளில் இது சாத்தியமா என்பதை காலம் தான் பதில் சொல்லவேண்டும்.
உலகளாவிய ரீதியில் நடைபெற்ற சில உள்நாட்டு சுனாமி சம்பவங்கள் சில
1. 2011 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் டூவூம்பாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கை ஊடகங்கள் “உள்நாட்டு சுனாமி” என்று வர்ணித்தன.
2. 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் யூகோவ்ராவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை குடியிருப்பாளர்கள் “உள்நாட்டு சுனாமி” என்றும் அழைத்தனர்.
3. ஜான்ஸ்டவுன் வெள்ளம் (1889): பென்சில்வேனியாவில் தெற்கு ஃபோர்க் அணை உடைந்த பிறகு, 12 மீட்டர் (40 அடி) உயரமான நீர் அலை லிட்டில் கோன்மாக் நதி பள்ளத்தாக்கில் பாய்ந்து 2,200 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றது. இது அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான வெள்ளம் மற்றும் “உள்நாட்டு சுனாமி” நிகழ்வின் ஒரு சிறந்த வரலாற்று எடுத்துக்காட்டு.
4. செயின்ட் பிரான்சிஸ் அணை உடைப்பு (1928): கலிபோர்னியாவில் உள்ள அணையின் உடைப்பு , சான் பிரான்சிஸ்கிட்டோ கேன்யன் மற்றும் சாண்டா கிளாரா நதி பள்ளத்தாக்கு வழியாக கடலுக்குச் சென்ற ஒரு பெரிய அளவிலான நீர் , இது பரவலான பேரழிவை ஏற்படுத்தியது மற்றும் நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்றது.
5. Texas Hill Country Floods (2015 Memorial Day Flood): பிளாங்கோ நதி போன்ற ஆறுகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு நிகழ்வுகளை உயிர் பிழைத்தவர்களும் ஊடகங்களும் “உள்நாட்டு சுனாமிகள்” என்று விவரிக்கின்றனர், ஏனெனில் திடீரென ஏற்படும் சக்திவாய்ந்த அலைகள் குப்பைகள் மற்றும் கட்டிடங்களை விரைவாக அழித்து, நீண்ட தூரத்திற்கு கட்டமைப்புகளை எடுத்துச் சென்றன.
“உள்நாட்டு சுனாமி” என்ற கருத்தியலில் பல்வேறு சர்ச்சசைகள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
முற்றும்

















